தீபாவளித் திருநாளில் பெரும் படையலை ஏற்றுக்கொள்ளும் அம்பிகை, சுந்தராட்சியம்மன். இவள், அநியாயங்களை எதிர்க்கும் நீதி தேவியாகவே சுற்றுவட்டார மக்களிடம் பிரசித்துபெற்று விளங்குகிறாள். நியாயமிருப்பவர்கள், தங்களுக்கு நீதி வேண்டி இந்த அன்னையை வழிபட்டால், அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை.

`குதிரைமொழி' என்ற ஊரில் வாழ்ந்தவள் சுந்தராட்சி. அரசனின் அநியாயத் தீர்ப்பால் மனம் வெறுத்து, அந்த ஊரே மண்மூடிப் போகட்டும் என்று சாபமிட்டுவிட்டு, குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள். இதனால் பயந்தபோன அரசனும் மக்களும் கூடி சுந்தராட்சிக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினார்களாம். ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளைக்கார துரை ஒருவர், இந்த அம்மனின் சாந்நித்தியத்தைச் சோதிக்க விரும்பினாராம். அதன்பொருட்டு, கல் யானையை கரும்பைத் தின்னும்படிச் செய்து, சகலரையும் வியக்கச் செய்தவள் இந்த அம்மன். இன்றும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, தாய்க்குத் தாயாக இருந்து சகல வரங்களையும் வழங்கி வருகிறாள் சுந்தராட்சியம்மன்.

ஆலயம் அமைவிடம் : தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சிக்கு அருகே குதிரைமொழி என்ற ஊரில் உள்ளது சுந்தராட்சியம்மன் ஆலயம். திருச்செந்தூர் சென்றால், அங்கிருந்து பேருந்து வசதி உண்டு.

- ச. முத்துகிருஷ்ணன்