பூதப்பாண்டி மிக அற்புதமான நாட்டுவைத்தியர். ஒருமுறை இளம் பெண் ஒருத்தியின் உயிரைக் காக்க சிகிச்சை அளித்தார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள், பூதப்பாண்டியைத் தாக்கினார்கள். காலில் வெட்டுப்பட்டு உயிர்நீத்த பூதப்பாண்டி, பிற்காலத்தில் ஊருக்கே காவல் தெய்வமானார்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்க நல்லூரில் அருள்மிகு குழலி அம்மன் திருக்கோயிலில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பூதப்பாண்டி ‘சப்பாணி மாடசாமி’ என்ற திருப்பெயரில் பக்தர்களால் வழிபடப்படுகிறார். குழலியம்மனும் சிறந்த வரப்பிரசாதி.

தீபாவளித் திருநாளன்று நள்ளிரவில் இந்தத் திருக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடக்கும். பலவித பலகாரங்கள் சாமிக்குப் படைக்கப்படும். அப்போது அருள் வந்து ஆடும் சாமியாடி, யார் வீட்டு பலகாரங்களைச் சாப்பிடுகிறாரோ, அந்த வீட்டில் வளங்கள் பெருகும்; செல்வம் செழிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். தீபாவளி அன்று சப்பாணி மாடனுக்குப் படையல் போட்டு பூஜை செய்து வணங்கினால், அந்த ஆண்டு முழுவதும் சுற்றுவட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதும் கிராம மக்களின் நம்பிக்கை.

ஆலயம் இருக்குமிடம் :  தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ளது செய்துங்கநல்லூர். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

- ச. முத்துகிருஷ்ணன்