Published:Updated:

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!
பிரீமியம் ஸ்டோரி
உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

Published:Updated:
உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!
பிரீமியம் ஸ்டோரி
உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

பிறப்பிலாப் பெருமை அளிக்கும் சிவாலயத்தில் வாசகர்களின் உழவாரப் பணி! ஆலயத்தைச் சுத்தம் செய்தால், ஆண்டவன் ஆன்மாவைச் சுத்தம் செய்வான் என்பது ஆன்றோர்கள் வாக்கு. எண்ணற்ற ஆலயங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் பல ஆலயங்கள் பராமரிப்பின்றி பாழ்பட்டுக் கிடக்கின்றன. அவற்றைப் பராமரித்து புனரமைத்து மீட்டெடுப்பது மிகப்பெரும் புண்ணிய பணியல்லவா?!

அவ்வகையில், ஆன்மிக அமைப்பினர் மற்றும் வாசகர்களின் உதவியோடு கடந்த 14-ம் தேதி, காஞ்சிபுரம் - வந்தவாசி பாதையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குரங்கணில்முட்டம் கிராமத்தில், அருள்மிகு இறையார் வளையம்மை உடனுறை அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலில் அற்புதமாக நடந்தேறியது, நமது இரண்டாவது உழவாரப் பணி.

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

‘எல்லா ஜீவன்களுக்கும் பிறவாப் பேரின்ப நிலையை அளிக்கும் ஈசன்’ என்று திருஞானசம்பந்தப் பெருமானால் போற்றிப் பாடப்பட்ட இந்த குரங்கணில் முட்டம் கோயிலின் மகிமையைப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூவர் வழிபட்ட முக்தி தலம்!

ரிஷிகளின் சாபத்தால் வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், யமதர்மராஜன் காகமாகவும் மாறினார்கள். தங்களின் சாபம் நீங்க, ஈசனின் ஆணைப்படி, காஞ்சியின் தென்பால் அமைந்த இந்த குரங்கணில் முட்டம் தலத்துக்கு வந்து வழிபட்டு சாபநிவர்த்தி பெற்றார்கள் என்கிறது புராணம்.

வாலி வணங்கிய ஈசன் என்பதால் இங்கு ஈசன் ‘வாலீஸ்வரர்’ என்று வணங்கப்படுகிறார். கைகளால் மலர்களைக் கொய்து வழிபடக்கூடாது என்று எண்ணி மலர்களை உலுக்கி ஈசன் மீது விழச்செய்து வழிபட்டான் வாலி. இதனால் ஈசன் ‘கொய்யாமலர் நாதர்’ என்றும் வணங்கப்படுகிறார். குரங்கு (வாலி), அணில், முட்டம் (காகம்) வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊரின் பெயர் குரங்கணில் முட்டம் என்றானது.

அம்பாள் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில், ‘இறையார் வளையம்மை’ என்ற பெயருடன் அருள்கிறாள்.மழலை வரம் வேண்டுவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்தத் தேவிக்கு  வளையல் அணிவித்து, அதைப் பெற்று அணிந்து கொண்டால் விரைவில் குழந்தைப்பேறு வாய்க்கும்; கர்ப்பிணி களுக்குச் சுகப்பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

தாமரை பீடத்தின் மீது அமர்ந்துள்ள இங்குள்ள விநாயகரை, சக்திதேவி தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள். இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்டத் தோஷம் நீங்குமாம்.  தீபகற்ப அமைப்பில் இந்த ஆலயத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளது திருக்குளம். காக வடிவில் வந்த யமதர்மராஜன் தனது அலகால்  உருவாக்கிய தீர்த்தமாம்; காக்கை மடு, காக புஷ்கரணி என்று போற்றப்படுகிறது. இங்கு நீராடி ஈசனை வழிபட்டால், தீராத பாவங்களும் தீரும்.

மக்கள் பணியாக மாறிய மகேசன் பணி!

எல்லா வகையிலும் பெருமை கொண்ட இந்தத் தலம், திருக்கயிலையைவிட குன்றிமணி அளவு உயர்வு கொண்டது எனத் தலவரலாறு கூறுகிறது.

இப்படி வாழ்வை வளமாக்கும் குரங்கணில் முட்டத்து ஈசனைத் தரிசிக்கவும், பாழ்பட்டுக் கிடைக்கும் ஈசனது திருக்கோயிலைத் தூய்மைப் படுத்தவும் வாசகர்களும், உழவாரப்படையினரும் `அகத்தியர் பசுமை உலகம்' அமைப்பின் நிறுவனர் சரவணன் தலைமையில் கூடி செயல்பட்டார்கள்.

திருக்கோயிலைப் பெண்கள் சிலர் கூடி தூய்மைப்படுத்த, பெரும்பாலான அடியார்கள் ஒன்றுகூடி அந்தப் பிரமாண்டத் திருக்குளத்தை புனரமைத்தார்கள். புதர்களையும், காய்ந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றி குளத்தை விரிவாக்கி ஆழப்படுத்தினார்கள். அடியார்களின் அரும்பணியால் பரந்துவிரிந்து அழகாகக் காட்சி தந்தது. அந்த ஊரின் நீர் ஆதாரமான குளம் சீரமைக்கப்பட்டதும், ஊர் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம்! மகேசனுக்கான பணி மக்களுக்கான சேவையாகவும் அன்று அமைந்துவிட்டது.

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

திருக்குளத்தைச் சீர்செய்தது மட்டுமல்லாமல், முப்பதுக்கும் மேற்பட்ட பனை விதைகளைத் தேடி எடுத்து அதை குளத்தின் கரையெங்கும் உழவாரப்படையினர் நட்டனர். மேலும் திருக் கோயிலின் உள்ளே நாகலிங்க மரத்தின் கன்று ஒன்றும் சக்தி விகடன் சார்பாக நடப்பட்டது. இதைக்கண்ட வாசகர்கள் இனி அடுத்த உழவாரப் பணிகளில் ஆலயங்களில் சிறப்பான மரங்களை நடும் திருப்பணியையும் செய்வோம் என்று உற்சாகமாகச் சங்கல்பித்துக்கொண்டார்கள்.

திருவிழாக்கோலமாய் உழவாரம்

காலையில் கஞ்சியும், மதியம் சுவையான உணவு வகைகளும் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. மாலை 3 மணியளவில் உழவாரப்பணியின் பெருமை குறித்தும், திருக்கோயிலின் மகத்துவம் குறித்தும் ஆன்மிக சொற்பொழிவாளர் சரவணன் வாசகர்களோடு கலந்துரையாடினார். பின்னர் `உலக சித்த கலைகள் ஆய்வு மையம்' குழுவினர், இளைஞர் ஹரியின் தலைமையில் களரிப் பயிற்சிகளைச் செய்து காண்பித்தார்கள். மாலை 4 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு விதவிதமான அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடைபெற்றன.

உழவாரப் பணி செய்வோம்! - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது!

வாசகர்களுக்கு அர்ச்சனைப் பொருள்களும், பஞ்சாமிர்தம் மற்றும் பொங்கல் பிரசாதமும் வழங்கப்பட்டன. திண்டிவனம், மதுரை, சென்னை, காஞ்சிபுரம் என பல பகுதிகளிலிருந்தும் திரளான வாசகர்களும் அடியார்களும் கலந்துகொண்டு இந்த உழவாரப் பணியை ஒரு திருவிழாவைப்போல சிறப்பாக நடத்திக்கொடுத்தார்கள். மிகுந்த மனநிறைவோடு விடைபெற்ற சக்திவிகடன் வாசகர்கள், வழக்கம்போல இது விகடன் குடும்பம் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள்.

எங்கும் இறைப்பணி தொடர்ந்திடவும், திருப் பணியில் ஈடுபடும் பெரும்பேற்றினை அளிக்கவும், எல்லோரும் நலம்பெற்று வாழவும் வேண்டி விடைபெற்றோம்... மனநிறைவோடு!

-  மு.ஹரி காமராஜ் படங்கள்: சி.ரவிக்குமார்