Published:Updated:

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

Published:Updated:
கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

? கோயில்களில் ஆன்மிகப் பெரியோர்களைக் கண்டால் வணங்கலாமா?

-எஸ்.விநாயகமூர்த்தி, சென்னை 80

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

ஆலயங்களில் வரிசைக்கிரமமாக வழிபாடு செய்யவேண்டும் என்பதும் ஆலய ஆசார்யரை தரிசித்துவிட்டு, கடவுளை வழிபடவேண்டும் என்பதும் நடைமுறை. கொடிமரத்தின் அடியில், அனைவரையும் மானசீகமாக நினைத்து வடக்கு நோக்கியவாறு நமஸ்காரம் செய்வது பொதுவானது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நமக்குத் தெய்வத்தைக் காண்பித்து  நாம் ஆனந்த நிலையை அடையக் காரணமாக இருக்கும் குருவைப் பார்த்தவுடன் வணங்குவது உயர்ந்ததே.

சைவ சிந்தாந்த தத்துவத்தில், ஸ்ரீமத் அகோர சிவாசார்யர் 10-ம் நூற்றாண்டில் இயற்றிய உரையில், ‘குரூம் அதிஷ்டாய பரே பதே யோஜயதி’ என்று விளக்குகிறார். அதாவது எல்லாம்வல்ல சிவபெருமானே குரு எனும் உருவத்தில் வந்து நம்மை ஆட்கொள்வார் என்பது பெரியோர்களின் அனுபவம். எனவே, ஆலயங்களில் குருவைப் பார்த்ததும் அவரை வணங்குவது சிறந்ததே.

? கனவில் அடிக்கடி பாம்புகள் வருகின்றன. இதனால் ஏதும் தீங்கு விளையுமா?

-ஆர்.ராம்குமார், அரக்கோணம்


பாம்புகள் என்றாலே பயப்பட வேண்டும் என்பதில்லை. அவை நம்மைக் காக்கக் கூடியவையே. மிக உயர்ந்த ஞான சக்தியான குண்டலினி சக்தியைப் பாம்பின் உருவமாகவே கருதி, அதை மேல் எழச் செய்தலே ஞானத்தின் உயர்நிலை எனப்படுகிறது. எனவே, கனவில் பாம்பைக் கண்டதன் மூலம், தாங்கள் தீமைகளில் இருந்து காப்பாற்றப்படுவதாகவும் உயர்ந்த ஞான நிலையை அடையப்போகிறீர்கள் என்றும் நினையுங்கள்.

நமது ஸநாதன தர்மத்தில் அனைத்துக் கடவுளர்களிடமும் பாம்பின் தொடர்பு உண்டு; வீண் பயம் தேவை இல்லை. எனினும் பாம்புகள் தங்களைத் தீண்டுவதாகக் கனவு கண்டு, அந்தக் கனவு தங்களின் மனதை நெருடுவதாக இருந்தால், அருகிலுள்ள புற்றுக் கோயில்களுக்குச் சென்று வழிபடுங்கள். தலையில் பாம்புகளைத் தரித்திருக்கக்கூடிய மாரியம்மன் முதலான தெய்வங்களுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டும் பயத்தை போக்கிக்கொள்ளலாம்.

பக்திக்குத் தைரியம் அவசியம். வாழ்க்கையில் என்ன ஆனாலும் கடவுள் நம்மைக் கைவிடமாட்டார் என்று உணர்ந்துவிட்டால், தங்களால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவும் இல்லை. நம்முடைய சாஸ்திரங்களில் சர்ப்பம் மற்றும் சர்ப்ப சாந்தியைக் குறித்த பல அரிய மந்திரங்கள் உண்டு. எனினும், அவசியம் ஏற்பட்டாலொழிய சாந்திகள் தேவையில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

? காளிதேவியே என் இஷ்ட தெய்வம். ஒருமுறை சக்தி விகடனின் இணைப்பிதழ் ஒன்றில், காளிதேவி வழிபாடு குறித்து விவரித்திருந்தீர்கள். அதுபற்றி  விரிவாக விளக்க வேண்டுகிறேன்.

- கே.மாசானமுத்து, சமூகரங்கபுரம்


`தசமகாதேவியர் வழிபாடு’ என்ற தலைப்பில் காளிதேவி குறித்த தகவலை அளித்திருந்தோம். அனைத்து காலங்களிலும் நம்மை காக்கக் கூடிய சக்தியே காளி. `பத்ரம்' எனில் நன்மை. எனவே அவளைப் பத்ரகாளி அதாவது `அனைத்து காலங்களிலும் நன்மை செய்பவள்' என்று போற்று கிறோம். அவள் இருப்பதாகச் சொல்லப்படும் மசானம் என்பது, ஏதோ இங்கு நாம் காணும் மயானமல்ல. மகா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கியிருக்கும் நிலையில் அவள் ஒருவளே ஆதிசக்தி என்பதை உணர்த்துவதே.

அனைத்து பூதங்களையும் தன்னுள் அடக்கி வைத்த நிலையில் ‘கலனாத் காளீ’ என்று அவள் போற்றப்படுகிறாள். அவள் எல்லா யுகங்களிலும் நமக்கு நன்மை அளிப்பினும், கலிகாலத்தில் உயரிய பலன்களை அருள்பவளாகத் திகழ்கிறாள்.

விக்னேச்வரர், இந்திரன், பரசுராமர், கங்கை, லட்சுமி, சூரியன், சந்திரன், ராவணன், குபேரன், வாயு, குரு, சுக்ரன், ஹனுமான் முதலிய பலரும் காளி உபாசகர்கள் என விவரிக்கிறது ‘காளி கல்பதரு’ எனும் ஞானநூல். காளியை வழிபடுபவர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பலம், புஷ்டி, பெரும் கீர்த்தி, கவி புனையும் சக்தி, போக மோக்ஷம் முதலான உயர்ந்த பலன்களை அடைவர்.

காளியின் அனுக்கிரஹத்தால் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. காளி உபாசகர் புண்ணிய சாலியாகவும், குலம் தழைக்கச் செய்யும் புத்திரனாகவும் ஆகிறார். அவர் ஜீவன்முக்தனாக விளங்குகிறார். `தக்ஷிண காளி' என்று போற்றப்படுபவள் இந்தத் தேவி. ‘தக்ஷிணம்’ என்றால் தெற்கு திசையைக் குறிக்கும். இந்த தக்ஷிண காளியை வழிபடுவதால், தெற்கு திசையின் அதிபதியான யமதர்மராஜனைப் பற்றிய பயம் நம்மை அணுகாது. மேலும், இவள் தக்ஷிணாமூர்த்தி என்று போற்றப்படும் தென்முகக்கடவுளின் அருளை, ஒரு தாயின் உருவில், எளிமையானதாக நமக்குப் பெற்றுத் தருகிறாள். 

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?

ஆதி காளீ, பத்ரகாளீ, ச்மசான காளீ, கால காளீ, குஹ்ய காளீ, காமகலா காளீ, தன காளீ, ஸித்தி காளீ, சண்டி காளீ, டம்பர காளீ, கஹனேச்வரீ காளீ, ஏகதாரா காளீ, சாமுண்டா காளீ, வஜ்ராவதீ காளீ, ரக்ஷா காளீ, இந்தீவரீ காளீ,  தனதா காளீ, ரமண்யா காளீ, ஈசான காளீ, மந்த்ரமாலா காளீ, ஸ்பர்சமணி காளீ, ஸம்ஹார காளீ, தக்ஷிண காளீ, ஹம்ஸ காளீ, வீர காளீ, காளீ, காத்யாயனி, சாந்தா, சாமுண்டா, முண்டமர்தினி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி என்று காளியை பல வடிவங்களில் வர்ணிக்கின்றன ஞானநூல்கள்.

காளி என்றாலே நாம் பயம் அடையாமல் செய்பவள்-நம்மைப் பயத்தில் இருந்து காக்கக் கூடிய சக்தியே அவள் என்பதை உணர்ந்து, கீழ்க்காணும் மந்திரங்களை ஜபித்து வழிபட்டு அருள்பெறுவோம் (தேவியரின் மூல மந்திரத்தை குருமுகமாகப் பெற்று ஜபித்திட வேண்டும்)

ஸ்ரீகாளீ காயத்ரீ
ஓம் காளிகாயை வித்மஹே ச்மசானவாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்
மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீகாளீதேவ்யை நம:


? கிரக தோஷங்களை அறிவோம். ஆனால், அதென்ன கிரகண தோஷம்?

-எம்.கீர்த்திமனோகரன், உடுமலைப்பேட்டை


சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும்போது, சந்திரனின் பகுதி சூரியனைவிட பெரிதாகக் காட்சியளிக்கக்கூடிய அளவு பூமிக்கு அருகில் வரவேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஓர் அமாவாசை நாளன்றுதான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப் படும். புவியில், ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக் கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம்  உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் அது தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். இது அறிவியல் பூர்வமானது.

சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது சூரிய கிரகணம்  ஏற்படுகிறது.  சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே `கிரகணம் என்று சாஸ்திரங்கள்  கூறுகின்றன.

கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?இந்தக் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது பொதுவான ஜோதிடக் கணிப்பு. சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைப்படும்போது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலான பாதிப்புகள் அதிகம். 

கிரகணம் நிகழும்போது, கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது. அப்படியே வெளியே வந்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்கவும் வாய்ப்பு உண்டு.

கிரகணத்திலிருந்து தப்பிக்க சாஸ்திரங்கள் சில தற்காலிக ஆலோசனைகளை வழங்கியுள்ளன.அதன்படி, புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்ய லாம், தானங்கள் வழங்கலாம், முன்னோர்கள் குறித்து தர்ப்பணம் செய்யலாம் அல்லது வீட்டில் அமர்ந்து தெய்வச் சிந்தையுடன் வழிபடலாம். சுப்ரபாதம், விநாயகர் துதி ஆகியற்றைப் பாடலாம். கிரணகத்துக்கு முன்பும் பின்பும் வீட்டைக் கழுவிவிட்டு நாமும் குளிக்க வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

 `காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர் - படம்: கே.எம்.பிரசன்னா

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002