Published:Updated:

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!
பிரீமியம் ஸ்டோரி
சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

Published:Updated:
சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!
பிரீமியம் ஸ்டோரி
சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

ன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து மேற்கே சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளி மலை. கந்தக்கடவுள் பால முருகனாய் அருளும் மலைக்கோயில்; வேண்டும் வரமருளும் சுவாமி இவர். ஒரு வெள்ளிக்கிழமையன்று இந்தத் தலத்தை தரிசித்து வரலாமென்று நண்பர் ஒருவருடன் புறப்பட்டுச் சென்றோம்.

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

அடிவாரத்திலிருந்து சுமார் 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது முருகனின் ஆலயம். நாம் மலையடிவாரத்தை அடைந்தபோது, நமக்குச் சற்றுத் தொலைவில், முதியவர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன்   மலை மீது ஏறிச் செல்லும் காட்சி நம்மை சிலிர்க்கவைத்தது.காரணம் அவருடைய தோற்றம் அப்படி!

அவரை நெருங்கி அவருடன் பேசவேண்டும் என்று ஆவல் உந்தித்தள்ள, வேகமாக சென்று அவரை நெருங்கிவிட்டோம். மூச்சுக்கு மூச்சு `முருகா முருகா’ என்று மெள்ள உச்சரித்தபடி படிக் கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

அவர் வைத்திருக்கும் குடையின் கைப்பிடியை விடவும் அதிகமா கவே வளைந்திருக்கும் தேகத்துடன், அவர் மெள்ள மெள்ள ஏறுவதைப் பார்க்கும் எவருமே, அவர் 100 வயதைக் கடந்தவர் என்பதை சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். அவரைத் தொந்தரவு செய்யாமல் நாமும் அவருடன் மெள்ள படிகளில் ஏறிக் கொண்டிருந்தோம். நமக்குள், ‘இந்த முதிய வயதிலும் இவர் ஏன் இப்படி சிரமப்பட்டு மேலே செல்லவேண்டும்?’ என்ற கேள்வியும் கூடவே, ‘சரி, ஏதோ ஒருநாள் மட்டும்தான் மேலே செல்வார் போலும்’ என்று ஒரு சமாதானமும் தோன்றவே செய்தது.

ஆனால், நாங்கள் கோயிலை அடைந்து அங்குள்ளவர்கள் மூலம் அந்தப் பெரியவரைப் பற்றிய தகவல்களை அறிந்தபிறகு,  ‘அவரது முருக பக்திக்கு முன் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை’ என்றே எண்ணத் தோன்றியது.

ஆம்! அனுதினமும் மலைமீது ஏறி அழகன் முருகனை தரிசித்து அருந்தமிழால் போற்றிப்பாடி வழிபட்டு திரும்புவாராம். பெரியவரின் பெயர் - ஆறுமுக பாகவதர். தியாகராஜ பாகவதர் காலத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, அவருடன் பழகியவரும்கூட என்று சொல்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள். வெள்ளிமலை வேலவனை அனுதினமும் வழிபட விரும்பியவர், அதன்பொருட்டே சுமார் 6 வருடங்களுக்கு முன்பு அடிவாரத்தில் உள்ள விவேகானந்தர் ஆசிரமத்துடன் ஐக்கியமாகி விட்டார் என்றார்கள்.

நாம் மலைக்கோயிலை அடைந்த சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெரியவரும் வந்துசேர்ந்துவிட்டார். மலையேறி வந்த களைப்பை விடவும், முருகனைத் தரிசிக்கப்போகும் ஆர்வமும் ஆனந்தமுமே அவரின் முகத்தில் பிரதிபலித்தன எனலாம். முருகனை தரிசித்து வழிபட்டு வந்த ஆறுமுக பாகவதர், கோயில் மண்டபத்தில் அமர்ந்துகொண்டார். பின்னர், கணீரென்ற குரலால் முருகனின் துதிப்பாடல்களைப் பாடத் தொடங்கினார். அதில் லயித்து மெய்ம்மறந்துபோனோம்.

நேரம் போனதே தெரியவில்லை. உச்சிப் பொழுது வந்துவிட்டது. முருகனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதம் வழங்கப்பட, ஆறுமுக பாகவதரும் ஆர்வத்துடன் வந்து பெற்றுக்கொண்டார். பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தவர், மாலை நெருங்கும் நேரத்தில் கீழே இறங்கத் தொடங்கினார்.

அவரைப் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தில், நாமும் அவரைப் பின்தொடர்ந்து விவேகானந்த ஆசிரமத்தை அடைந்தோம். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

‘`தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அலாரமே தேவையில்லை. குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, ஆசிரம வளாகத் தில் அமைந்திருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் கோயிலில் சிறிது நேரம் வழிபடுவார். காலை ஆகாரமாக இரண்டு இட்லிகள். பிறகு வெள்ளிமலை கோயிலுக்குப் புறப்பட்டுவிடுவார். மதியம் முருகப்பெருமானின் நைவேத்தியப் பிரசாதம்தான் உணவு. இரவில் இரண்டு கோதுமை தோசை அல்லது வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு, 9 மணிக்கெல்லாம் படுக்கச் சென்றுவிடுவார்’’ என்றவர்கள்,  ``பாகவதரின் வயதென்ன தெரியுமா?’’ என்று கேட்டுவிட்டு அவர்களே பதிலும் சொன்னார்கள் ‘‘103’’ என்று. மலைத்துப்போனோம் நாம்!

ஆறுமுக பாகவதருக்குச் சொந்த ஊர் இரணியல். 15 வயதில் தலக்குளம் தங்கையா பாகவதரிடம் ஐந்து வருடங்களும், அதற்குப் பிறகு இரணியல் பி.என்.பெருமாள் ஆசிரியரிடமும் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டாராம். அப்போதே வெள்ளிமலை கோயிலுக்கு வந்து பஜனை பாடவும் சிறுவர்களுக்கு இலவசமாக சங்கீதம் கற்றுக்கொடுக்கவும் செய்திருக்கிறார்.மெள்ள பேச்சுக்கொடுத்தோம் ஆறுமுக பாகவதரிடம்.

‘`எனக்குத் தலக்குளத்தில்தான் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை பிறந்த பிறகு குடும்பத்துடனான தொடர்பு விட்டுப்போனது.  கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவேன். முருகன் பாடல்கள் என்றால் பிடிக்கும். அவன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருப்பது மிகவும் பிடிக்கும்’’ என்றபடி கண்கள் சுருங்க, தேகம் குலுங்க சிரித்தவர், சில கணங்கள் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, பின்னர் ஏதோ நினைவுக்கு வந்தவராகப் பேசினார்.

‘‘ஒருமுறை எனக்கு ஹிரணியா வந்து விட்டது. ஆபரேஷன் செய்தால்தான் உண்டு. இல்லையெனில் உயிராபத்து என்றார்கள். ஆனால் என் அப்பன் முருகனின் திருவருளாலும், அவன் நாமத்தை  தொடர்ந்து ஜபித்ததன் பலனாலும் ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகி விட்டது’’ என்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் தலம் - குமாரகோயில். அங்குள்ள யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்றதன் விளைவு, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுவிட்டதாம் ஆறுமுக பாகவதருக்கு. அதேபோல், அத்தலத்தின் முருகன் மீதான பிடிப்பு, தன்னை தீவிர முருக பக்தனாக்கிவிட்டது என்கிறார் பாகவதர்.

‘`மலை மீது ஏறி இறங்குவது சிரமமாக இல்லையா’’ என்று கேட்டோம்.

‘‘என்னை நோய்நொடி இல்லாமல் வைத்திருக்கும் முருகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தினமும் மலைக் கோயிலுக்குப்  போகிறேன். காலையில் மலையேறும்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், முருகனைப் பார்க்கும் ஆசை சிரமத்தைப் புறந்தள்ளிவிடும். முருகனின் திருநாமத்தை ஜபித்தபடியே மலையேறி விடுவேன்’’ என்கிறார் சிலிர்ப்பும் சிரிப்புமாக!

‘‘இந்த வயதிலும்... ஐயா ஆர்மோனியம் இசைத்தபடி பாடினால் அத்தனை இனிமையாக இருக்கும்’’ என்கிறார், ஆசிரமத்தில் இருக்கும் ராம்ஜி என்ற அன்பர். அவரே தொடர்ந்து பேசினார்.

‘`ஆறுமுக பாகவதர் சட்டை போட்டுக்கொள்ள மாட்டார். யாராவது துணிகள் கொடுத்தாலும் இரண்டு ஜதைக்கு மேல் வைத்துக்கொள்ள  மாட்டார். அவருடைய வேலைகளை அவரே செய்துகொள்வார். போன வருஷம் மலைக்கோயிலில் வழுக்கி விழுந்து ஐயாவுக்கு இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது.

வயது முதிர்ந்தவர் என்பதால், டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய தயங்கினார்கள். பிறகு, பாகவதர் ஐயாவின் மன உறுதியைப் பார்த்து வியந்து, அறுவைச் சிகிச்சை செய்தனர். ஒரே மாதத்தில் குணமாகிவிட்டது. அவர் தினமும் வழிபடும் முருகப்பெருமானின் அருள்தான் அவரைக் காப்பாற்றியது.  ஆசிரமத் தலைவர் சைதன்யானந்தஜி மஹராஜிடம் மிகுந்த மரியாதை கொண்டவர். ஆசிரமத்தில் ஐயாவின் பாடல்களைக் கேட்பதற்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது’’ என்று உணர்ச்சி ததும்பக் கூறினார்.

வணங்கி விடைபெறும் தருணத்தில் நெகிழ்ச்சியோடு தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார் ஆறுமுக பாகவதர்.

‘`எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தினமும் வெள்ளிமலை முருகனை தரிசிக்கவேண்டும். அவன் புகழைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்... இதைவிட வேறு என்ன வேண்டும்?’’

உண்மைதான். இறைவனின் மீதான தூய சரணாகதிக்கு நிகராக வேறொன்றும் இல்லை. அந்த வெள்ளிமலை வேலவனின் அருளால் இன்னும் பல்லாண்டுகள் அந்த மலைத் தலத்தில் ஒலிக்கும் ஆறுமுக பாகவதரின் பாடல்கள்.

அவருக்கு முருகனின் திருநாமத்தைச் சொல்வது பிடிக்கும் - இனிக்கும் என்றால், இவர் போன்ற அடியார்களின் பெருமைகளைச் சொல்வதும் படிப்பதும்தான் நமக்கு இனிப்பான விஷயம்!

முருகா சரணம்!

ஆர்.சிந்து - படம்: ரா.ராம்குமார்

வெள்ளிக்கிழமை திருக்கோயில்!

நா
கர்கோவிலிலிருந்து மேற்கே சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளிமலை. கந்தக்கடவுள் இங்கே பால முருகனாக அருள்வதால், திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது இல்லை.

திருக்கோயில் சிறப்புகள்: இந்த மலையில் அதிகமாகக் காணப்படும் காக்கைப் பொன் எனப்படும் ‘அப்ரகம்’ சூரிய ஒளி பட்டு வெள்ளிபோல் மின்னுமாம். இதையொட்டி இம்மலைக்கு வெள்ளிமலை என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

 சிவபெருமான் வீற்றிருக்கும் பனிமலையாம் கயிலையை வெள்ளி மலை என்று சிறப்பிப்பார்கள். அதே பெயரை இந்த மலைக்கும் சூட்டியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் உண்டு.

அடர்ந்த வனப்பகுதியாக திகழ்வதால், முற்காலத் தில் இந்தக் கோயிலுக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் வருவதுண்டாம். ஆகவே, ‘வெள்ளிக்கிழமை மலை’ என அழைக்கப் பட்டு, அதுவே வெள்ளி மலை என்று மருவியிருக்கலாம் எனவும் சொல்கிறார்கள்.

வெள்ளிமலை கோயிலுக்குச் செல்ல கிழக்குப்பக்கம் 90 படிகள் அமைந்துள்ளன. மேற்குப்பக்கம் உள்ள படிக்கட்டின் ஓரத்தில் நந்தி பாதம் பதிந்திருப்பதுடன், பாறையில் சில குறிப்புக்களும் எழுதப்பட்டுள்ளன. மேற்குப் படிக்கட்டுகளின் ஓரத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் வற்றுவதே இல்லையாம்!

சித்திரை பத்தாம் உதயம் (சித்திரை 10-ம் நாள்) அன்று காலை 6:30 மணியளவில், சூரியக் கிரணங்கள் நீளமான மண்டபத்தைக் கடந்து வந்து முருகனின் திருப்பாதங்களைத் தழுவி வணங்குவது கண்கொள்ளா காட்சியாகும்.

விழாக்கள், பூஜைகள்: வைகாசி விசாகம், தைப்பூசம், ஐப்பசி கந்த சஷ்டி விழா, மண்டல பூஜை (மார்கழி 11), வருஷாபிஷேகம் ஆகிய விழாக்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.

எப்படிச் செல்வது?: நாகர்கோவிலிலிருந்து திங்கள்சந்தை எனும் ஊருக்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. பக்தர்கள் திங்கள்சந்தை  பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரசு பேருந்து மற்றும் தனியார் சிற்றுந்துகளில் சுமார் 7 கி.மீ. பயணம் செய்து இந்தக் கோயிலை அடையலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 11:30 மணி வரை; மாலை 5:30 முதல் 7:45 மணி வரை கோயில்நடை திறந்திருக்கும். வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதல்நேரம் கோயில் திறந்திருக்கும்.

சொல்லச் சொல்ல இனிக்குதய்யா! - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி!

ஆறுமுக பாகவதருடன் வெள்ளிமலையை தரிசிக்க சிலிர்க்க... இங்குள்ள QR Code- ஐ பயன்படுத்தவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism