Published:Updated:

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

Published:Updated:
ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

சுகப்பிரசவம் நிகழும்

தி
திகளில் 3-வது திரிதியை. இதற்கான தெய்வம் பஹமாலினி. இந்த அம்மனை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட, சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்.

ஓம் பஹமாலின்யை வித்மஹே
சர்வ வசங்கரியை தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத்


 ஜாதக ரீதியான கோளாறுகள் இருப்பின், அந்தத் தடைகள் நீங்கி, சுகப்பிரசவம் நிகழ இந்த மந்திரம் கைகொடுக்கும்.

- வசந்தா, சென்னை-4

ஆன்மிக துளிகள்

வாடகை வீட்டில் வாஸ்து!

சொ
ந்தமாக வீடு கட்டுபவர்கள் நல்ல வாஸ்து அமைப்புடன் வீட்டைக் கட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் என்ன செய்வது? அவர்கள், குறைந்தபட்சம் சில அமைப்புகளை கவனிப்பது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடியேறும் வீட்டில் வெளிச்சம் நன்றாக வரவேண்டும். அந்த வீடு  தெருக்குத்து வீடாக இருந்தால் தவிர்த்து விடலாம். வேறு வழியே இல்லை; அப்படியான ஒரு வீடுதான் கிடைத்திருக்கிறது எனும் நிலையில்,  வீட்டுக்காரரிடம் சொல்லி, வீட்டு முகப்பில் சிறு விநாயகர் சிலை அல்லது திருவுருவப்படம் அமைப்பது நல்லது.

உள்ளே நுழையும்போது வாசற்படிக்கு இடப்புறம் அதிகம் இடம் அமைந்துள்ள வீடு விசேஷம். இல்லையெனில் இடது வலது இரு புறமும் சம அளவு இடம் அமைந்துள்ள வீடாகப் பார்க்கலாம்.

பிரதான கேட் அல்லது கதவுகள் நிலைப் படிகளில் விரிசல் இருந்தால் உடனடியாக சரிசெய்வது அவசியம். பெரும்பாலும் தரையில் விரிசல் இருப்பதையும் சரிசெய்ய வேண்டும். மற்றபடி எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்... வீட்டை மிகச் சுத்தமாக வைத்துக் கொள்வது. சுத்தமான இல்லத்தில் கிரகலட்சுமியின் கடாட்சம் பொங்கிப் பெருகும்.

- பிரசன்னன்,  சென்னை-44

ஆன்மிக துளிகள்

மருத்துவராகும் யோகம்!

யிர் காக்கும் அற்புதமான துறை மருத்துவம்.  அந்தத் துறையில்  புகழ்பெற்ற மருத்துவராக ஒருவர் விரும்புகிறார் எனில், அவருக்கு ஜாதகத்திலோ கைரேகையிலோ சிறப்பான அமைப்பு இருக்க வேண்டும் அல்லவா? அப்படியான கைரேகை அமைப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

ஒருவரது உள்ளங்கையில், ஆள்காட்டி விரலுக்கு கீழுள்ள பகுதி குருமேடு ஆகும். எதிலும் முதன்மையை விரும்புகிற லட்சிய மேடான இந்த குருமேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.

புத்திரேகை ஆயுள் ரேகையுடன் பின்னிப் பிணையாமல், ஆயுள் ரேகையினை லேசாகத் தொட்டுக்கொண்டோ ஆயுள் ரேகையில் இருந்து ஒரு நூல் அளவுக்கு பிரிந்தோ குருமேட்டில் இருந்து துவங்க வேண்டும்.

கல்வியை முழு ஈடுபாட்டுடன் படித்து மாவட்டம் அல்லது மாநில அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்து புகழ் பெற வேண்டும் என்று சாதிக்கத் தூண்டும் அரசு கிரகமான சூரிய மேடு (மோதிர விரலுக்கு அடிபாகத்தில் இருப்பது) பரந்துவிரிந்து நன்கு அமைந்திருக்க வேண்டும். சூரிய ரேகையும் நன்கு அமைந்திருக்க வேண்டும்.

கல்விக் கிரகமான புதனுக்கு உரிய (சுண்டு விரலின் அடிபாகத்தில் உள்ள) புதன்மேடு சிறப்புற அமைந்து, அதில் மருத்துவ ஆராய்ச்சி ரேகைகள் தென்பட்டால் மருத்துவராகும் அமைப்பு உண்டு.

- காஞ்சி எஸ்.சண்முகம்

குரு பார்க்க கோடி நன்மை!

கு
ருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடத்துக்கே அதிகம் நன்மை புரிவார்.

1-ம் இடத்தை, அதாவது ஜன்ம ராசியைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும்.

2-ம் இடத்தை - குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

3-ம் இடத்தை - தைரிய ஸ்தானத்தைப் பார்த்தால், சத்ரு பயம் விலகும்.

4-ம் இடத்தை - சுக ஸ்தானத்தைப் பார்க்கும்போது வீடு- மனை வாங்கும் யோகமும், வாகன பிராப்தியும் ஏற்படும்.

5-ம் இடத்தை - பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, குழந்தை பாக்கியம் கிட்டும், பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும்.

6-ம் இடத்தில்  - ருண ரோக ஸ்தானத்தைப் பார்த்தால், நீண்டகாலமாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் பூரண நலம் பெறுவர்.

7-ம் இடத்தை - களத்திர ஸ்தானத்தை குரு பார்க்க, நல்ல மணவாழ்க்கை அமையும்.

8-ம் இடத்தை - ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும்போது, மரண பயம் நீங்கும்.

9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது - வெளிநாட்டு உத்தியோகம் வாய்க்கும்.

10-ம் இடத்தை - ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பதவி உயர்வு ஏற்படும்.

11-ம் இடத்தை - லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பொருள்வரவு உண்டு.

12-ம் இடத்தில் - சயன மோட்சஸ்தானத்தில் குருவின் பார்வை பதியும்போது, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

- என்.முருகன், சென்னை-17  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism