Published:Updated:

அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!

அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!
பிரீமியம் ஸ்டோரி
அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!

நட்சத்திர குணாதிசயங்கள்

அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!
பிரீமியம் ஸ்டோரி
அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!

ஜோதிட சாஸ்திரத்தில் ஆறாவது நட்சத்திரமாக ஒளிர்வது திருவாதிரை. ‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ள நட்சத்திரங்களில் ஒன்று. சர்ப்பக் கிரகங்களில் கருநாகம் என்று சொல்லக்கூடிய ராகுவின் சாரம் பெற்றுள்ள நட்சத்திரம். சர்ப்பத்துக்கு பிளவுபட்ட நாக்கு இருப்பது போல, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரண்டு விதமாகப் பேசும் ஆற்றல் உள்ளவர்கள்.

அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!

நட்சத்திர மாலை எனும் நூல், ‘புகழ்பெற வாழ நல்லன், திறமொடு காரியங்கள், சிறப்பொடு பூசை செய்யும்...’ என்கிறது. அதாவது சிறந்த சிவ பூஜை செய்யும் பக்திமான்களாக வாழ்வார்கள்  என்பது அர்த்தம். ஜாதக அலங்காரம், ‘கீர்த்திமான்... சுத்தவான், உயர்ந்திருக்குந் துண்டமுள்ளான்...’ என்கிறது. அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு மூக்கு உயர்ந்திருக்கும்; பிரபலமாக இருப்பார்கள் என்று அர்த்தம்.

பிருஹத் ஜாதகம், ‘சடகர்விதௌ...’ என்று தொடங்கும் பாடலில் `இவர்கள் கொஞ்சம் மூர்க்கமானவர்கள்’ என்கிறது. ‘அவிசார...’ என்று தொடங்கும் யவன ஜாதகப் பாடல், சொத்து விற்பது, வாங்குவதில் இவர்கள் வல்லவர்கள் என்று கூறுகிறது.

சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பேசுபவர்களாக, பலசாலிகளாக, எளிதில் கோபவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆதலால், மற்றவர் பார்வைக்கு முரட்டு சுபாவம் உள்ளவர்போல் தெரிவார்கள். சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெற்றிகொள்ளும் சூரத்தனமும், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் பிடிவாதமும் நிரம்பியிருக்கும். அதனால் தங்களின் திறமை மீது வித்யா கர்வம் கொண்டிருப்பார்கள்.

‘தன் குடும்பம், தன் பிள்ளை’ என்று குடும்பப் பற்றுடன் வாழ்வார்கள். தங்களின் தரப்பை நியாயப்படுத்த, சற்றும் தயங்காமல் வாக்குவாதத்தில் இறங்கிவிடுவார்கள். தெரியாததைத் தெரிந்ததைப் போலப் பேசி எதிராளியை நம்பவைப்பார்கள். நல்லவர்களுக்காகவும் நன்மைக்காகவும் பொய்சொல்லவும் தயங்க மாட்டார்கள்.

கல்வியில் எப்போதாவது ஆர்வம் காட்டுவார்கள். உட்கார்ந்து கஷ்டப்பட்டு படிக்கமாட்டார்கள். இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம் இருப்பதால், வகுப்பில் ஆசிரியர் நடத்தும்போதே உன்னிப்பாகப் பாடத்தை கவனித்து, தேர்வு நேரத்தில் மட்டும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்கள். உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆகவே நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.

காண்பதைக் கவிதையாக்கும் அளவுக்கு கற்பனை வளம் இருக்கும். காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்களாகவும், மனைவியை அதிகம் நேசிப்பவர்களாகவும், வாழ்க்கையை ருசித்து ரசிப்பவர்களாகவும் இருப்பார்கள். காரம் அதிகமுள்ள உணவுகளை ருசித்து உண்பார்கள். சமயோஜித புத்தி இருக்குமாதலால், உங்களில் பலர், புகழ் பெற்ற நிறுவனங்களின் பொருட்களை சாதுர்யமாக விற்பவர்களாகவும், நிலம், வீடு விற்க - வாங்க உதவும் தரகர்களாகவும் இருப்பார்கள். மக்கள் தொடர்பு, காவல், சுற்றுலா, தொலைபேசி, கனரக மின் ஆற்றல், நிலக்கரிச் சுரங்கம் ஆகிய துறைகளில் பெரிய பதவிகளை வகிப்பார்கள். வாகனம், வாகன உதிரி பாகம், ஹார்ட்வேர் பொருள் ஆகியவற்றை விற்பவர்களாக இருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை!இவர்களில் பலர் நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி ஆகியவற்றைப் பெரிய அளவில் நடத்துவார்கள். அரசுப் பணி, தனியார் துறை எதுவாக இருந்தாலும் மிக உன்னிப்பாக கவனித்து வேலை செய்யக்கூடியவர்கள். மேலதிகாரியின் மனதைப் புரிந்துகொண்டு அவர்கள் விருப்பம் போல் நடந்து குறுகிய காலத்திலேயே அவர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

21 வயது வரை அதிகம் சிரமப்படுவார்கள். சிறு வயதிலேயே குடும்பப் பாரத்தை சுமக்க வேண்டி வரும். அதனால் கல்வி தடைபடும். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டீர்கள். பலர், மடாதிபதிகளாக, பள்ளி - கல்லூரி தாளாளர்களாக விளங்குவார்கள். 39 வயதிலிருந்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வார்கள்.

முதல் பாதம் (ராகு + புதன் + குரு)

மு
தல் பாதத்தின் நவாம்ச அதிபதி குரு. ஆகவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் ஆசார சீலர்களாகத் திகழ்வார்கள். முன்பின் அறியாதவர்களுடனும் பல வருடங்கள் பழகியதைப் போல் பேசுவார்கள். அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கை இருக்கும். சூட்சும சக்திகளை உணரும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். இவர்களில் பலர், வேத விற்பன்னர்களாகவோ மத குருமார்களாகவோ சாதி, இயக்கத் தலைவர்களாவோ விளங்குவார்கள்.

வயதில் மூத்தவர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பார்கள். சிறு வயதிலிருந்தே கொஞ்சம் முரட்டுத் தனம் இருக்கும். அன்னிய மொழிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். தயிரும் காரமும் பிடித்த சுவைகள். தோல்விக்குப் பிறகு கல்வியில் தீவிர கவனம் செலுத்துவார்கள்.சட்டம், நிர்வாகம் ஆகிய துறைகளில் மிளிர்வார்கள். எந்தப் பொருளையும் எளிதாக விற்கும் தந்திரமுள்ள வியாபாரியாகத் திகழ்வார்கள். பிரசங்கம், கதாகாலட்சேபம் செய்வதில்  வல்லவர்கள். பட்டிமன்றத்தில் இவர்களது துடுக்கான பேச்சைக் கேட்கலாம். காதலித்தவரைக் கரம் பிடிப்பார்கள். பிள்ளைகளுடன் குழந்தைத்தனமாக விளையாடுவார்கள். 33 வயதிலிருந்து சமூக அந்தஸ்து கிட்டும்.

பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரத்தன்று திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரரை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்  (ராகு + புதன் + சனி)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மகர சனி. இதில் பிறந்தவர்கள் ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பதற்கேற்பப் பொறுமைசாலிகளாக இருப்பார்கள்.

நெறிமுறைகளை மீறமாட்டார்கள். சிறுவயதில் கூச்ச சுபாவமும் இருளைக் கண்டு அஞ்சும் சுபாவமும் உள்ளவர்களாக இருப்பார்கள். தனிமையில் இனிமை காணும் இவர்கள் மற்றவர்களிடம் சுலபத்தில் பேசமாட்டார்கள். ஆனால் விவாதமென்று வந்துவிட்டால் வெளுத்துவாங்குவார்கள். தன் கருத்துகளை அதிக படபடப்புடன் கூறுவதால், சில நேரங்களில் சங்கடங்களைச் சந்திப்பார்கள்.

பேரின்பம் என்றாலும், பெருந்துயர் என்றாலும் அளவாக எடுத்துக்கொள்வார்கள். இனிப்பை அதிகம் விரும்பி உண்டாலும் துவர்ப்பு, புளிப்பு ஆகியவையும் இவர்களை அதிகம் ஈர்க்கும். நாரத்தங்காய், மாவடு, புளியம் பழம் ஆகியவை இவர்கள் நாவைச் சுண்டி இழுக்கும்.

கால் பந்து, கைப்பந்து விளையாட்டில் அணியின் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடுவார்கள். மனதைக் கவர்ந்த ஆசிரியர் நடத்தும் பாடத்தில் மட்டும் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். தட்டச்சு, சுருக்கெழுத்து, ரயில்வே, கடல், தபால் தந்தி ஆகிய துறைகளில் பெரிய பதவி வகிப்பார்கள். 28 வயதிலிருந்து இவர்களுடைய வாழ்வில் வசந்தம் வீசும்.

பரிகாரம்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அருளும் ஸ்ரீயோக பைரவரை அஷ்டமி திதியில் சென்று வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்  (ராகு + புதன் + சனி)

மூ
ன்றாம் பாதத்துக்கு அதிபதி கும்ப சனி. இதில் பிறந்தவர்கள் பலரையும் நம்பி ஏமாறுவார்கள். நல்லவர்களைத் தேடி அலைவார்கள். சிறுவயதிலேயே கஷ்டங்களை அனுபவிப்பதால் பண்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் யாராவது இவர்களை இழிவுபடுத்தினால் தக்க பதிலடி தருவார்கள். தெய்வ பலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்புவார்கள். பிறவி ரகசியங்களை அறிய சித்தர்களை நாடுவார்கள்.

மூலிகை, ரசவாதம் ஆகியவற்றில் ஆர்வம் பிறக்கும். ஏரோநாட்டிகல், சாட்டிலைட், மெக்கானிகல், பயோடெக் போன்ற பாடப் பிரிவில் நாட்டம் இருக்கும். இவர்களில் சிலர், ராணுவத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பார்கள். இவர்களின் ஆழ்மனதுக்குள் இருக்கும் ரகசியங்களை எவரும் கண்டறிய முடியாது.

குத்துச் சண்டை, கோழிச் சண்டை, ஆட்டுக்கடாச் சண்டை, மஞ்சு விரட்டு ஆகியவற்றை ரசிப்பார்கள். குடும்பத்தில் சில நேரங்களில் பற்றில்லாமல் இருப்பார்கள். இவர்களுக்குச் சகோதரரைவிட சகோதரிகள் அதிகம் உதவுவார்கள். நாற்பது வயதிலிருந்துதான் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.

பரிகாரம்: சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரில் அருளும் ஸ்ரீவடிவுடையம்மை உடனுறை ஸ்ரீ படம்பக்கநாதர் மற்றும் மாணிக்கத் தியாகேஸ்வரரை வணங்கி வந்தால், வாழ்வில் வளம் உண்டாகும்.

நான்காம் பாதம்  (ராகு + புதன் + குரு)


நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மீன குரு. இதில் பிறந்தவர்களுக்கு தெய்வ அருள் அதிகம் இருப்பதால், திடீர் திடீரென்று அதிர்ஷ்டம் அடிக்கும். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். தர்க்கங்களில் இவர்களை வெற்றிகொள்ள முடியாது. அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்கு பாத யாத்திரை செல்வார்கள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ் ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் அளவுக்கு உயர்ந்த கல்வி வாய்க்கும். பத்திரிகை மற்றும் மீடியா துறையில் முத்திரை பதிப்பார்கள். எல்லோருடனும் பழகிவிட மாட்டார்கள். தராதரம் அறிந்து பழகுவார்கள்.

அதிக காரமில்லாத உணவையும் காய்-கனிகளையும் விரும்புவார்கள். கையூட்டுப் பெறும் வாய்ப்பு உருவானாலும் தவறான பாதையில் அடியெடுத்துக்கூட வைக்க மாட்டார்கள். பெற்றோரை மிகவும் நேசிப்பார்கள். பிள்ளைகளே தவறு செய்தாலும் தண்டிக்கத் தயங்கமாட்டார்கள். சொந்த வீடு, வாகன வசதிகளெல்லாம் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும். 34 வயதிலிருந்து பெரிய முன்னேற்றங்கள் இருக்கும்.

பரிகாரம்: ராஜமன்னார்கோவிலுக்கு அருகிலுள்ள திருத்தலம் `பாமணி’ க்ஷேத்திரம் (திருப்பாதாளேச்சுரம்). இங்கே கோயில் கொண்டிருக்கும் - ஆதிசேஷனும் நாகலோகத்தாரும் பூஜித்த ஸ்ரீஅமிர்தநாயகியம்மை உடனுறை ஸ்ரீ சர்ப்பபுரேஸ்வரரை வணங்கி வாருங்கள்; வாழ்வில் வளம் கொழிக்கும்.

‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

சிவபெருமான், திருமாலின் வாகனமான கருடன், ஆதிசங்கராசார்யர், பகவத் ராமாநுஜர், புட்டபர்த்தி சத்ய சாயிபாபா, தஞ்சை மாமன்னன் சரபோஜி, லாலா லஜபதிராய், மொரார்ஜி தேசாய்.

திருவாதிரை நட்சத்திரத்தில்...

காது குத்துதல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், தெய்வப் பிரதிஷ்டை செய்தல், தூது செல்லுதல், சூளைக்கு நெருப்பிடுதல், ஆயுதப் பயிற்சி, நீண்ட நாள் பூட்டியுள்ள கதவைத் திறப்பது, சிராத்தம், வியாதியஸ்தர்கள் குளித்தல், மந்திரம் ஜபித்தல் ஆகியவற்றை இந்த நட்சத்திர நாளில் தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.

ஹோம மந்திரம்

ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமா ந ஏதி|
ச்ரேஷ்டோ தேவானாம் பதிரக்னியானாம்|
நக்ஷத்ரமஸ்ய ஹவிஷா விதேம|
மாந: ப்ரஜாஹும் ரீரிஷன்மோதவீரான்|
ஹேதீ ருத்ரஸ்ய பரிணோ வ்ருணக்து|
ஆர்த்ரா நக்ஷத்ரஞ் ஜுஷதாஹும் ஹவிர்ந:||
பரமுஞ்சமாநௌ துரிதானி விச்வா|
அபாகசஹும் ஸந்நுததாமராதிம்|

நட்சத்திர தேவதை    : சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட 11 பேரில் சிவ அம்சம் கொண்ட ருத்ரன்.

வடிவம்        : ரத்தினம் போலவும் தாமரை மொட்டு  போலவும் வடிவமுடைய ஒரே நட்சத்திரம்.

எழுத்துகள்        : கு, க, ங, ச.

ஆளும் உறுப்புகள்        : தொண்டை, தோள், கைகள்.

பார்வை        : மேல்நோக்கு.

பாகை        : 66.40 - 80.00

நிறம்        : சிவப்பு.

இருப்பிடம்        : சூன்யம்.

கணம்        : மனுஷ கணம்.

குணம்        : தீட்சண்யம்.

பறவை        : சிட்டுக் குருவி.

மிருகம்        : ஆண் நாய்.

மரம்        : பாலில்லாத செங்கரு மரம்.

மலர்        : ஊமத்தை.

நாடி        : தட்சிண பார்சுவ நாடி.

ஆகுதி        : தேன், நெய்.

பஞ்சபூதம்        :
நீர்.

நைவேத்யம்        : வெல்லம், நெய்.

தெய்வம்        : சிவபெருமான்.

அதிர்ஷ்ட எண்கள்    :
1, 4, 6.

அதிர்ஷ்ட நிறங்கள்    : கரு நீலம், பச்சை.

அதிர்ஷ்ட திசை        : தென்மேற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வெள்ளி, சனி.

அதிர்ஷ்ட ரத்தினம்    : கோமேதகம்.

அதிர்ஷ்ட உலோகம்    : பித்தளை.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹா தேவாய தீமஹி தந்நோ ருத்ர: பிரசோதயாத் | 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism