Published:Updated:

தீப ஜோதியே நமோ நம!

தீப ஜோதியே நமோ நம!
பிரீமியம் ஸ்டோரி
தீப ஜோதியே நமோ நம!

தீப ஜோதியே நமோ நம!

தீப ஜோதியே நமோ நம!

தீப ஜோதியே நமோ நம!

Published:Updated:
தீப ஜோதியே நமோ நம!
பிரீமியம் ஸ்டோரி
தீப ஜோதியே நமோ நம!

கணம்புல்லர் குருபூஜை!

சே
லம் மாவட்டத்தின் ஆத்தூருக்கு அருகே உள்ளது பேலூர். இது, அந்நாளில் இருக்குவேளூர் எனப்பட்டது. இந்த ஊரில் புகழ் வாய்ந்த செல்வக்குடியில் பிறந்தவர் கணம்புல்லர். ஈசனின் மீது மாளாத அன்பு கொண்டு, திருவிளக்கிடும் தொண்டினைச் செய்து வந்தார் இவர். 

தீப ஜோதியே நமோ நம!

காலத்தின் கோலம், தாங்கமுடியாத பஞ்சத்தால் கணம்புல்லரின் செல்வங்கள் யாவும் குறைந்தன. பச்சை மலைக்குச் சென்று அங்கு விளைந்த கணம் புற்களைக் கொண்டுவந்து விற்று, திருவிளக்கிடும் பணியைத் தொடர்ந்தா கணம்புல்லர்.சிலநாள்களில் புல்லும் கிடைக்காமல் போகவே, அந்த ஊரைவிட்டு விலகி தில்லைக்கு வந்தார். அங்கும் திருப்புலீச்சரம் (சிதம்பரம் - இளமையாக்கினார் கோயில்) ஆலயத்தில் திருவிளக்கிடும் பணியைச்
செய்து வந்தார்.

ஒருநாள், எண்ணெய் வாங்க பணமில்லாததால் கணம்புற்களை எரித்து ஈசனை வழிபட்டார். நீண்ட நேரம் நின்று எரியும் புற்கள், அன்று சீக்கிரமாகவே எரிந்து தீர்ந்துவிட்டன. வெளிச்சம் இல்லாமல் திருக்கோயில் இருண்டுவிட, கணம்புல்லர் தவித்துப்போனார். கணமும் தாமதியாமல் தனது தலைமுடிகளை எரித்து விளக்கேற்றினார். முடிகளோடு அவரது வினைகளும் எரிந்தன. ஈசனின் கருணையும் பிறந்தது. ஆம், விடையேறும் பெருமான் சக்தியோடு காட்சி தந்து கணம்புல்லரை ஆட்கொண்டார்.

ஒரு கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திர நாளில்தான் (தீபத் திருநாளில்) கணம்புல்லர் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டார். அதனால் புலீச்சரம் எனும் இளமையாக்கினார் கோயிலில் தீபத்திருநாளில் உச்சி வேளையில் இவரது குருபூஜை நடைபெறுகிறது. ஆலய பிராகாரத்தில் உள்ள இவரது திருமேனிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிளக்கிட்டுத் தெய்வத் தொண்டாற்றிய கணம்புல்லரை, நாமும் தொழுது அருள் பெறுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவல் பொரி தீபம்!

கா
ர்த்திகை தீப நாளன்று, அவல் பொரியோடு வெல்லப்பாகு சேர்த்து கூம்பு போலாக்கி, அதன் உச்சியில் குழி செய்து நெய் விட்டுத் தீபமிடுவர். அதையே சிவனாக எண்ணி வழிபடுவர். அவல் பொரி ஆன்மாக்களையும், வெல்லம் அமிர்தத்தையும், தீபம் சிவனையும் குறிப்பதாக ஆன்றோர்கள் குறிப்பர். திருவண்ணாமலை தீபத்தைக் காண முடியாதவர்கள், அந்நாளில் இவ்வாறு தீபமேற்றி  ஈசனை வழிபடுவர்.

கஸ்தூரித் திலகம்!

மா
னின் உடலிலிருந்து கிடைக்கும் வாசனைப் பொருள் கஸ்தூரி. மான் ஏந்தியவர் மகேசன். அதனாலேயே அவருக்குக் கஸ்தூரித் திலகம் விருப்பமானதாயிற்று என்று சிறப்பிப்பார்கள் பெரியோர்கள்!

கஸ்தூரியுடன் பச்சைக் கற்பூரம், குங்கமப்பூவை இழைத்துத் திலகமிடுவார்கள். மானின் மத நீரே கஸ்தூரி என்பதால், அதை `மான்மதம்’ என்றும் `மான்மதச் சாந்திடல்’ என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. அண்ணாமலையாரின் திவ்ய நாமங்களில் ஒன்று `மருகமகேஸ்வரர்' என்பதாகும். இதற்கு `மானின் கஸ்தூரித் திலகத்தை விரும்புபவர்' என்பது பொருள்.

விளைச்சலைப் பெருக்கும் தோட்ட தீபம்!

தொ
ன்மையான கார்த்திகை தீபப்பெருவிழா சிவாலயங்களில் கார்த்திகை நாளிலும், ரோகிணியில் விஷ்ணு ஆலயங்களிலும், மிருகசீரிடத்தில் பிற ஆலயங்களிலும் கொண்டாடுவார்கள். முதல் நாள் சர்வ சிவாலய தீபமென்றும், அடுத்த நாள் விஷ்ணு தீபமென்றும், மூன்றாம் நாளை நாட்டுக் கார்த்திகை என்றும், நான்காம் நாளைத் தோட்டக் கார்த்திகை என்றும் கூறுவர். தோட்டங்களில் வளரும் செடி, கொடிகளைக் காத்து வளர்க்கும் தெய்வங்களை, தோட்டக் கார்த்திகை நாளன்று விளக்கிட்டு வழிபட்டால், அவை மகிழ்ந்து போய் விளைச்சலைப் பன்மடங்காக்கும் என்பது நம்பிக்கை. தோட்டக் கார்த்திகையை `பேய்க் கார்த்திகை' என்றும் கிராமத்தினர் அழைப்பர்.

கார்த்திகை தீபத்துக்கு முந்தின நாள் ஏற்றப்படும் தீபம் பரணி தீபம். இது காளி, பைரவர், சரபர் போன்ற உக்கிரத் தெய்வங்களுக்கு தீபம் ஏற்றப்படும் நாளாகும். ஆக, பரணி தொடங்கி தோட்டக் கார்த்திகை வரை கார்த்திகை தீபத் திருநாள்
5 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

தொகுப்பு: பூசை ச.ஆட்சிலிங்கம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism