Published:Updated:

சத்யசாயி பொற்பதம் சரணம்!

சத்யசாயி பொற்பதம் சரணம்!
பிரீமியம் ஸ்டோரி
சத்யசாயி பொற்பதம் சரணம்!

கவிஞர் பொன்மணி - ஒவியம்: ம.செ

சத்யசாயி பொற்பதம் சரணம்!

கவிஞர் பொன்மணி - ஒவியம்: ம.செ

Published:Updated:
சத்யசாயி பொற்பதம் சரணம்!
பிரீமியம் ஸ்டோரி
சத்யசாயி பொற்பதம் சரணம்!

கவான் ஸ்ரீசத்யசாயிபாபாவின் பொற்பாதக் கமலங்களுக்கு ஆயிரங்கோடி வந்தனங்கள். பகவானின் 93-வது பிறந்த நாள் வைபவத்தை பாரெல்லாம் கொண் டாடி மகிழும் இந்தப் பரவசப் பொழுதில்,  சக்திவிகடன் வாசகர்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 

சத்யசாயி பொற்பதம் சரணம்!

அவனருளாலேதான் அவன் தாள் வணங்குதலும் சாத்தியமாகும். எனவே, சாயியின் அருளால் சாயி எனக்குள்ளிருந்து எழுதுவதே சத்தியமாகும்!

சாயி வைத்தீஸ்வரன்...

பகவான் சத்யசாயியின் வழிபாட்டுக்கு வந்தபிறகு, என் எண்ணம், சொல், செயல் ஒவ்வொன்றும் அவர் கவனத்துக்குள்ளாகிறது என்ற உணர்வு ஏற்படத் தொடங் கியது. எந்த நிகழ்வுகளிலும் ஸ்வாமியின் இருப்பை உணர முடிந்தது. எதையும் ஸ்வாமியிடம் கேட்டுச் செய்வது என்ற நம்பிக்கை விதையாய் விழுந்தது. அவ்வப்போது, ஒருசில அனுபவங்களை ஸ்வாமி தரத் தொடங்கினார். பக்தர்களுக்குப் பகவான் தரும் அனுபவங்கள் மிக  மேன்மையானவை. அந்த வகையில், ஸ்வாமி எனக்குத் தந்த அனுபவங்களில் ஒன்றிரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்யசாயி பொற்பதம் சரணம்!பகவான் பாபாவை, டாக்டர்களின் டாக்டர் என்று சொல்வது உண்டு. ஒருவர் என்ன வியாதியில் வேதனைப் பட்டாலும், அவருடைய சங்கல்பமொன்றே அந்த வியாதியைத் தீர்க்கிறது. ‘கான்சர் கான்சல்’ என்று அவர் சொன்னதுமே பலருக்குக் கான்சர் காணாமல் போயிருக்கிறது.  பகவானின் விபூதி, மனமாற்றங்களையும் அற்புதங்களையும் புரிவதோடு, நாள்பட்ட பல வியாதிகளை அந்தக் கணத்திலேயே தீர்த்துவைத்திருக்கிறது.

‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற ஸ்வாமியின் தெய்வ சரிதத்தை எழுதிய கஸ்தூரி, `விபூதி மகிமை’க்கு மட்டும் தனி அத்தியாயமே போட்டுக் கொண்டாடியிருப்பார்.  இறந்து கொண்டிருப்பவர் மட்டுமல்ல... இறந்து விட்டவரையும் பிழைக்கவைக்கும் பேரற்புதத்தைச் செய்துவிடுகிறது பாபா விபூதி.

சத்யசாயி வட்டத்துக்கு வந்துவிட்ட பிறகு, நம்பிக்கை யின் அடிப்படையில்... எந்த வியாதி வந்தாலும் ஸ்வாமி பாபா விபூதியை மட்டுமே உட்கொள்வதும் நெற்றியிலிடுவதுமான பழக்கம் எனக்கு வந்திருந்தது. அங்கங்கே பக்தர்கள் வீடுகளில் ஸ்வாமி உருவாக்கும் விபூதியை வாங்கி வைத்திருப்பேன். காய்ச்சல்... இருமல்... தலைவலி... எதுவாக இருந்தாலும் சாயி விபூதிதான் மருந்து. அதிசயமாக அது என்னைக் குணமாக்கியும் வந்தது.

கை நிறைய மாத்திரைகளைச் சாப்பிடும் என் தோழி ஒருவர் சொல்வார், ‘ஆனாலும் ரொம்பக் கொடுத்து வெச்சவ நீ’ என்று. அந்த அதிசயத்துக்குக் கண்பட்டுப்போனது. முதலில்... கண்களுக்குச் சிகிச்சை தொடங்கி முடிந்தது. அதன் பிறகு, சிலநாள்களாக முதுகெலும்பில் தீராதவலி ஏற்பட்டு ஸ்வாமியின் வழிகாட்டுதலில், மருத்துவமனைக்குப் போக வேண்டி வந்தது.

`என் விபூதியை எடுத்துக்கொள்... ஆனாலும் அவசியம் டாக்டரிடம் போயாக வேண்டும்’ என்றார் ஸ்வாமி (என் சாயித்தோழியர் மூலம் ஸ்வாமியிடம் கேட்டுப் பதில் வாங்குவதையே... இவ்வாறு ஸ்வாமி சொல்வதாக அங்கங்கே குறிப்பிடுகிறேன்). எனது கர்மாவை அனுபவிக்க வேண்டிய காலம் தொடங்கியது போலும். மருத்துவ மனைக்குப் போக மனதே இல்லையென்றாலும், `சரி ஸ்வாமி’ என்று கேட்டுக்கொண்டேன்.  சாயிபக்தையாகத் திகழும் பெண் மருத்துவராக இருந்தால் அனுசரணையாக இருக்கும் என்றும் பிரார்த்தித்துக்கொண்டேன்.

பத்தாண்டுகளுக்கு முன்,  ஓர் ஆன்மிகப் பத்திரிகைக்காக நான் பேட்டி எடுத்த, சிறந்த சாயிசேவகியும் சாயி பக்தையுமான டாக்டர். மணிமேகலையை நினைவில் கொண்டுவந்தார் ஸ்வாமி. அந்தத் தோழிக்கு  போன் செய்ததும் மகிழ்ந்துபோனார்.  `இந்த மாதிரி முதுகெலும்புப் பிரச்னை... ஸ்வாமி உங்ககிட்ட பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்’ என்றதும் அவருக்கு இன்னும் மகிழ்ச்சி. `எல்லாமே... நம்ம ஹாஸ்பிடல்ல பாத்துக்கலாம் வாங்க’ என்று சொன்னார்.

சத்யசாயி பொற்பதம் சரணம்!

அந்த வாரம், கே.கே.நகர் சத்யசாயி சமிதியில் பேசவேண்டியிருந்தது. வாசக வட்டத்தில் சொற்பொழிவு.  அதை நல்லபடியாகச் செய்து விட்டு, பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, அவர்களுடைய அன்பான ஆலோசனைகளோடும் உதவியோடும் என் தோழி கலாவோடு மருத்துவமனைக்குச் சென்றேன்.

டாக்டர் மணிமேகலை, அவருடைய குமரன் மருத்துவமனையில் அன்போடு வரவேற்றுப் பேசினார். அவரே அழைத்துச் சென்று அத்தனை பரிசோதனைகளின்போதும் உடனிருந்தார். ஆர்த்தோ டாக்டர் பரிசோதித்துவிட்டு, `இந்த முதுகெலும்புப் பிரச்னை பத்து வருஷமா உங்களுக்கு இருந்திருக்கு’ என்று சொல்லி.... மருந்து மாத்திரைகள்... டிராக்ஷன்... இன்ஜக்‌ஷன் என்று நீளமாக எழுதிக் கொடுத்தார்.

`எல்லாம் முறையாகவும் சரியாகவும் தொடர்ந் தால், குணமாகும். குனியக்கூடாது... அண்ணாந்து பார்க்கக்கூடாது... சட்டென்று பின்னால் திரும்பக் கூடாது... கனம் தூக்கக்கூடாது... முக்கியமாகக் கொஞ்சநாள்களுக்குப் படியேறக்கூடாது... இயன்றவரை படுத்து ஓய்வெடுக்கவேண்டும்... அதிக வேலைகள் கூடாது...’ என்று அவர் ராணுவக் கட்டுப்பாட்டைப் போட்டதும் வேதனையாய்ப் போனது எனக்கு. சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்துகொண்டிருந்த என் இயல்புக்கு, இந்தக் கட்டுப்பாடுகள் வருத்தம் தந்தன. ஆனால், இது நோய்க்கான வைத்தியம்... வழிமுறை. `சரி’ என்று சொன்னேன்.

பத்து நாள்களாக சிகிச்சையில் இருந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு, டாக்டரிடம் சென்றபோது `வலி குறையவில்லை’ என்றேன். பரிசோதித்துவிட்டு, என்னிடம் விவரங்கள் கேட்டுவிட்டு... `ஒரு முன்னேற்றமுமில்லை... சரியாகப் பயிற்சி செய்யவில்லை ஓய்வெடுக்க வில்லை... எப்படிச் சரியாகும்’ என்று கோபித்துக் கொண்டார் டாக்டர். வெளியே வந்ததும் அழுதுவிட்டேன். என் டாக்டரும் தோழியும் சமாதானம் செய்தனர். வீட்டுக்கு வந்ததும் என் சாயித் தோழியிடம் சொல்லி வருத்தப்பட்டேன்.

ஸ்வாமியிடம், `சரியாகுமா இல்லையா’ என்று கேட்டபோது, ‘எதற்கு அழுகிறாய். டாக்டர் சொன்னபடி கேட்கத்தானே வேண்டும்’ என்று அவர் பங்குக்கு ஸ்வாமியும் கோபிக்க... அவரிடம் மீண்டும் கேட்டேன்... ``ஸ்வாமிக்கான வழிபாட்டையும் சேவைகளையும் நல்லபடியாகச் செய்யவேண்டாமா, ஏதாவது அற்புதம் செய்து இந்த வியாதியைக் குணமாக்கிவிடக் கூடாதா ஸ்வாமி’’ என்று கேட்க, ``ஸ்வாமி ஒரு பதிலும் சொல்லவில்லை’’ என்றார் தோழி. வந்த துன்பத்தை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தநிலையில், ஏற்கெனவே வருவதாகச் சொன்ன ஒரு சத்சங்கத் துக்குப் போய்ப் பேச வேண்டிய நாள் நெருங்கியது. இப்போது பேசப் போகலாமா என்று கேட்டபோது, `தாராளமாக பேச்சு சேவைக்குப் போகலாம்’ என்றார் ஸ்வாமி. அடுத்தநாள் ஆர்த்தோ டாக்டரிடம் கேட்டேன். ``போகலாம்... எங்கேயும் படியேற வேண்டாம். அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே பொசிஷன்ல இருக்காதீங்க... உக்கார்ந்திருந்தா எழுந்து நின்னுக்கிட்டு பேசலாம். ஆனால் அரை மணி நேரத்துக்கு மேல பேச வேண்டாம்’’ என்றார். சரி என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆதம்பாக்கம் சத்சங்கத்தில் 2016, ஏப்ரல் 24-ம் தேதி பகவானின் ஆராதனா திருநாளில் (மகாசமாதி டே) போய்ப் பேசுவதாக இருந்தது. பல ஆண்டுகளாக எனக்குப் பழக்கமான சாயிபக்தை ஜனகம் அம்மாவின் வீடு அது. இடையில் 12 வருடங்கள் தொடர்பு விட்டுப் போயிருந்தது. அவர் மகன் கிரிசாயிராம் இப்போது பேச அழைத்திருந்தார். அவரிடம் என் சிகிச்சை குறித்து  விவரித்து, `கீழேயே பேசுற மாதிரி இருக்கட்டும்' என்று நான் சொல்ல, அவரும் சரியென்றார்.

அன்று அவர் மனைவி வந்து அழைத்துப்போக. அவர்களையெல்லாம் பல வருஷங்களுக்குப் பிறகு பார்த்ததில் ஆனந்தம். ``அம்மா... பேசப்போறது இங்கே கீழேயேதானே’’ என்று கேட்டேன்.

 உடனே அவர், ‘‘உன் நிலைமையை எடுத்துச் சொல்லியும்... ‘மீட்டிங் மேலே வழக்கம்போல மாடியிலதான் இருக்கணும். பொன்மணியை படியேறி மேலே வந்து பேசச்சொல். பயப்பட வேண்டாம். நான் பார்த்துக்கறேன்’ன்னு ஸ்வாமி சொல்லிவிட்டார்’’ என்றார். திக்கென்றது எனக்கு. மறுபடியும் கேட்டேன் ``ஸ்வாமி அப்படியா சொன்னார்?’’

``ஆமாம்மா’’ என்றார் அவர்.

``சரி, ஸ்வாமி சொல்லிட்ட பின்னால என்ன செய்ய முடியும். வாங்க மேலே போகலாம்’’ என்றபடி, அவர்கள் உடன்வர... அங்கங்கே நின்று நிதானமாக நீண்ட படிகளில் ஏறி மேலே சென்றேன். அலங்கரிக்கப்பட்ட பெரிய மேடையில் சிம்மாசனத்தில் பேரழகோடு பகவானின் திருவுருவம். மெல்லிய காற்றில் மாலைகளோடு அசைந்தாடிக் கொண்டிருந்தார் ஸ்வாமி. 60 பேருக்கு மேல்... சத்சங்கத்தினர் அன்போடும் பக்தியோடும் பஜன் பாடிக்கொண்டிருந்தனர்.

முதலில் பேச்சு... அதன் பிறகு கிரிகாசங்கர் அவர்களின் இசை நிகழ்ச்சி. ஸ்வாமியை நமஸ்காரம் செய்துகொண்டு, ‘பஜனானாந்தம் பரமானந்தம்’ என்ற தலைப்பில் பேசினேன். பாடினேன். மனதுக்கு நிறைவாக அமைந்தது நிகழ்ச்சி. அனைவருக்கும் மகிழ்ச்சி.

பேசி முடித்து நான் வந்தபின் கிரிசாயிராம் சொன்னார். ``ஆன்ட்டி... ஸ்வாமி பூஜை ரூம்ல உங்களுக்கு தன்வந்திரி விபூதியைக் கடிதத்தோட குடுத்திருக்கார்’’ என்றார். அவர் அம்மா, ``ஓர் அழகான ஆரஞ்சுக் கலர் சேலையும் தந்திருக்கார்... நீ இங்கே பேசிக்கிட்டிருந்தபோது, அங்கே எல்லாம் கொடுத்திருக்கார்’’ என்றார். எப்படியிருக்கும் என் மனநிலை... அப்படியோர் ஆனந்தத்தினால்?!

அங்கேயே எடுத்து வந்து அனைவர் முன்பும்... ஜனகம் அம்மா தந்தார். வாங்கியதும் ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்தபடி நன்றி சொன்னேன். என் மனம் பரவசத்தில் ஆழ்ந்தது.

எல்லாம் முடிந்து விடைபெற்று வீடு வந்து தெய்வப்பிரசாதங்களை ஸ்வாமி பாதத்தில் வைத்து விட்டு எடுத்துப் பிரித்தேன். ஸ்வாமி கைப்பட எழுதிய கடிதம்... ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். ‘My dear child... என் அன்புக்குழந்தையே... இந்த விபூதி உன் வியாதிகளைப் போக்கி குணமாக்கும். விபூதியைத் தொடர்ந்து எடுத்துக்கொள். டாக்டரின் மருந்துகளையும் எடுத்துக்கொள். உன் தாய் நான். இந்தச் சேலை உனக்கு. எந்தச் சூழ்நிலையிலும், நீ என்னை நினைத்ததும் உன் முன் வந்து நிற்பேன். நீ என்னை அழைக்க வில்லையென்றாலும் வந்து நிற்பேன். அன்புடன் பாபா” என்று எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் அன்பையும் விபூதியையும் கொட்டியிருந்தார் ஸ்வாமி. எத்தனைமுறை அந்தக் கடிதத்தைப் படித்தேன் என்று தெரியாது. விபூதியை வாயிலிட்டு நெற்றியிலும் இட்டுக்கொண்டேன். அந்தச் சேலையை, ஸ்வாமி தன் தெய்வக்கரங்களால் எடுத்து வைத்த தனால், சேலையில் அங்கங்கே விபூதி. அந்தச் சேலையை வைத்தபடி மெய்ம்மறந்து நின்றேன். தெய்விக அதிர்வுகளில் நெடுநேரம் மூழ்கியிருந்தது மனம். ஸ்வாமி தந்த சேலையை ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில் உடுத்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

டாக்டர் மணிமேகலை யிடம் எல்லாம் சொன்னேன். மனம் கொள்ளாத மகிழ்ச்சி அவருக்கு. ``இதுக்கு மேல என்ன வேணும் சாயிராம்’’ என்றார். அடுத்து இரண்டு நாள்களுக்குப் பிறகு ஆர்த்தோ டாக்டரிடம் சென்றேன். பரிசோதித்ததும் சொன்னார். ``எப்படி 75 சதவிகிதம் சரியாயிடுச்சி? குட்! ரொம்ப கவனமா, சரியா எல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்’’ என்று பாராட்டினார்.

பரமம் பவித்ரம் பரமம் விசித்ரம் இல்லையா பாபா விபூதி!

முற்றிலுமாக வியாதி சரியாப் போகவில்லை என்றாலும்... முதலில் என் பயம் போனது, பெரும்பாலும் சரியானது.

அன்று ஸ்வாமி சொன்னார் போல படியேறிப் போய் பேச மறுத்திருந்தால், இந்தத் தெய்வப் பிரசாதங்கள் எதுவுமே எனக்குக் கிடைத்திருக்காது. ஸ்வாமியின் சங்கல்பப்படி நடந்தால்போதும். நடக்க வேண்டியதையெல்லாம் ஸ்வாமி பார்த்துக்கொள்வார்.

அடுத்த இதழிலும் அற்புதம் தொடரும்...

சத்யசாயி பொற்பதம் சரணம்!

புட்டபர்த்தி நாதனே!

வா
னளாவிய வழிபாடுகள்... சேவைகள்... வண்ண வண்ண நிகழ்வுகளோடு சாயிபக்தர்கள் அங்கங்கே சந்தோஷங் கொண்டாடும் அற்புதப் பொழுதில்... அந்த ஆரஞ்சுத் தெய்வத்தின் பொற்பதம் வணங்கித் தொழுது, இந்தக் கவிதை மலர்களைத் தூவுகிறேன்.

பொன்னார் மேனியனே! புட்டர்த்தி நாதனே!
அக்ஷய வருஷம் பிறந்த ஆண்டவனே உன்
பொன்னருள் மழையால் பொலிகின்றது பூமி!
அண்ட பேரண்டம் காக்கும் ஆண்டவன் நீ பிறந்ததனால்
பர்த்தி என்னும் குக்கிராமம் கோயிலாகிவிட்டது!
உன்னைப் பெற்றதனால்-
பெத்தவெங்கப்பராஜுவும் ஈசுவரம்மாவும்
தெய்வங்களானார்கள்!
உன் விபூதி
வானுக்கும் மண்ணுக்குமாய் வளர்ந்து
அற்புதம் விளைவிக்கிறது!

நீ பிறந்த பெருமிதத்தால்
நட்சத்திரக் கூட்டத்தில்
சிம்மாசனம் போட்டுக்கொண்டது
திருவாதிரை!

சர்வதேவதா அதீதஸ்வரூபன் என்பதை
அவதரிக்கும்போதே உணர்த்திவிட்டாய்
விநாயகனுக்குரிய சங்கடஹரசதுர்த்தி
முருகனுக்கான கார்த்திகை மாதம்
பலதெய்வ விசேஷங்கொண்ட பௌர்ணமி
சிவனுக்குகந்த சோமவாரம்
சத்யநாராயணனுக்கான வழிபாட்டு நேரம்
தேவதைகள் கானம்பாடும் விடிகாலை நேரம்
ஈசுவரம்மா சக்திக்கு சிவசக்தி நீ பிறந்தாய்!

யோகியரின் பிரார்த்தனை பலம் வெங்காவதூதரின் தவம்
பவபயம் போக்க இறங்கிவந்தாய்
திங்களைச் சூடிய சிவம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism