Election bannerElection banner
Published:Updated:

கைகூப்பி நின்றருளும் சிரஞ்சீவி : மார்கழி மாத இறையருள் மின்னிதழ் #EBook

கைகூப்பி நின்றருளும் சிரஞ்சீவி : மார்கழி மாத இறையருள் மின்னிதழ் #EBook
கைகூப்பி நின்றருளும் சிரஞ்சீவி : மார்கழி மாத இறையருள் மின்னிதழ் #EBook

கைகூப்பி நின்றருளும் சிரஞ்சீவி : மார்கழி மாத இறையருள் மின்னிதழ் #EBook

வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் மட்டுமல்லாமல், சிரஞ்சீவி ஆஞ்சநேயரின் ஜயந்திகூட இந்த மார்கழி மாதத்தில்தான் வருகிறது. மனிதர்கள், தெய்வத்தை கைகூப்பிக் கும்பிடுகிறார்கள். தெய்வங்கள் அபய ஹஸ்தம் காட்டி ஆட்கொள்கின்றன. ஆனால், தெய்வத்தினுள் கைகூப்பிக் கும்பிட்ட வண்ணமே காட்சிகொடுப்பவர் ஆஞ்சநேயர் மட்டும்தான். அனுமன் சிரஞ்சீவி. ராமபக்திதான் அவர் பலத்தின் ரகசியம். அதனால், சதா சர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்தபடி தன் மனத்துள் குடிகொண்டிருக்கும் சீதா ராமரை கைகூப்பி வணங்கியபடியே இருக்கிறார். 

ராமாயணத்தில் அனுமன் செய்த பராக்கிரமங்கள் ஏராளம். பாரதப் போரில் அர்ஜுனனின் தேரில் கொடியாக இருந்து, பார்த்தசாரதியின் ரதத்தை அலங்கரித்து, தர்மத்தின் வெற்றிக்குத் துணை நின்றான். 

புராணங்களில் அவர் தொடர்பான கதைகள்  அநேகம். நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட, ஆஞ்சநேயரே அருமருந்து. ஆஞ்சநேயரின் பக்தர்களைத் தீண்ட தீவினைகள் அஞ்சும். மார்கழி மாதத்து அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய தினத்தில் அனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. ராம பக்தரான ஆஞ்சநேயரின் தலங்கள் சிலவற்றை மார்கழி மாத இறையருள் மின்னிதழில் தரிசித்து அருள் பெறுவோம்!

இதுவரைக்கும் `இறையருள்' மின்னிதழை நேரடியாக லிங்க் மூலம் டிரைவிலிருந்து டவுண்லோடு செய்து படித்துவந்தீர்கள். இனிமேல் நேரடியாக விகடன் ஆப்பிலேயும் படிக்கலாம்.  

bit.ly/2EL4PL7 - இந்த லிங்க்கை க்ளிக் செய்து, முதலில் விகடன் ஆப்பை டவுண்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே, லேட்டஸ்ட் 'இறையருள்' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை 'க்ளிக்' செய்து டவுண்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுண்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படிக்கலாம். முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுண்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

மார்கழி மாத `இறையருள்’ மின்னிதழ், ஒரு பக்திபூர்வமான, பரவசம் நிறைந்த அனுபவத்தை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறோம். இதழ்குறித்த உங்கள் கருத்துகளை bodynsoul@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு