
தேனி : தேனியில் உள்ள உலக புகழ் பெற்ற வீரப்பாண்டி கெள மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவிழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றத்தை காண சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அக்னி சட்டி, ஆயிரம் கண் விளக்கு போன்றவற்றை ஏந்தியும் அங்க பிரேதசம் செய்தும் நேர்த்திக்கடன் செய்து வழிப்பட்டனர்.

தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், கம்பம், போடி, வருசநாடு, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பகதர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க தேனி - கம்பம் நெடுஞ்சாலை, குச்சனூர் வழியாக மாற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

எட்டு நாள் நடக்கும் இந்த திருவிழாவில், வரும் 10ஆம் தேதி தேரோட்டம்
##~~## |