Published:Updated:

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

Published:Updated:
‘சொந்த வீடு’ யோகம் உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

? எனக்குச் சொந்த வீடு வாங்கி அதில் வசிக்கும் யோகம் உண்டா?

- எஸ்.மாதவன், சென்னை-18

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

நீங்கள் மீன லக்னத்தில் பிறந்துள்ளீர்கள். சொந்த வீடு, வாசல் ஆகியவற்றைக் குறிப்பிடுவது, 4-வது பாவம் ஆகும். அந்தப் பாவத்திலிருக்கும் கிரகத்தைப் பொறுத்தே சொந்த வீடு அமைவதும் சொந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்வதும் சாத்தியமாகும்.

உங்கள் லக்னத்துக்கு 4-ம் வீடான மிதுனத்தில் சுக்கிரன் இருக்கிறார். பொதுவாக 4-ம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால், நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் ஆகியன தாமாகவே  அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். அதேபோன்று எத்தகைய அமைப்புள்ள வீடும் இவர்களுக்குத் துன்பம் தராது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?உங்கள் லக்னத்துக்கு 4-ம் வீட்டுக்கு உரிய புதன் 7-ல் அமைந்துள்ளார். எனவே, சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால் தனுசு, மீனம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும், 4-ல் சுக்கிரன் இருந்து, நல்ல வீடுவாசல் அமைந்தாலும், வீட்டில் அமைதிக் குறைவு காணப்படும். இதற்கு வாஸ்து சாஸ்திரம் பயன்படாது. நீங்கள் மீன லக்னத்தில் பிறந்திருப்பதால், சுக்ர ப்ரீத்திக்குரிய பரிகாரம் செய்யலாம். வெள்ளிக் கிழமைகளில், அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று, அங்கு அருளும் தாயாருக்கு மலர்மாலைகள் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்.

? எனக்குக் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில், அட்டைப்பூச்சி என்னைக் கடிப்பதுபோல் கனவு கண்டேன். இதனால் எனக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமா?

- ரகுராமன், ஸ்ரீபெரும்புதூர்


கனவுகள் மனிதனுடன் பின்னிப் பிணைந்தவை. அடிமனதில் அமுக்கப்பட்ட ஆசைகளே கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ்மனதில் புதைந்திருக்கும் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் கனவுகளைப் பற்றி பல்வேறு கருத்துகள் உண்டு.

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

பொதுவாக கனவுகள் உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தாதுக்களின் மாறுபாட்டால் ஏற்படுகின்றன என்கிறது ஆயுர்வேதம். பிரச்ன மார்க்கம் 31-வது அத்தியாயத்தில், `உடலிலுள்ள தாதுக்கள் பாதிக்கப்படுவதாலும், ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருத்தல் மற்றும் உடலுக்குள் மறைந்திருக்கும் நோய்கள் ஆகியவற்றின் காரணமாகவும் கனவுகள் ஏற்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வாதம் அதிகமானால் மலையுச்சி மற்றும் மரங்களில் ஏறுதல், ஆகாய மார்க்கமாகப் பயணித்தல் போன்ற கனவுகள் ஏற்படும். பித்தம் அதிகமானால் தங்கம் போன்ற பளபளப்பான பொருள்களைக் காணுதல், சிவப்பு நிற மலர்கள், நெருப்பு, சூரியன் ஆகியவை கனவில் தோன்றும். கபம் அதிகமானால் சந்திரன், நட்சத்திரங்கள், வெண்ணிற மலர்கள், நதிகள் ஆகியவை கனவில் வந்துபோகும். அதேபோல், குறிப்பிட்ட கிரகங்களின் தசாபுக்தி காலங்களில், அந்தந்தக் கிரகங்களின் தொடர்புடையதான கனவுகள் தோன்றும். அவற்றுக்குப் பலனும் குறைவுதான். அதேபோல் கவலையின் காரணமாக ஏற்படும் கனவுகளுக்கும் பலன் இல்லை.

தங்களை அட்டைப்பூச்சி கடிப்பதுபோல் கனவு கண்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதனால் நன்மையே ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைப்பது, செல்வச் செழிப்பு ஏற்படுவது போன்ற நற்பலன்களே கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் தாங்கள் இந்தக் கனவைக் கண்டிருந்தால், ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று சொல்வார்கள். நல்லதே நடக்கும்.

? எனக்கு மருத்துவ மேற்படிப்பு படிக்க வாய்ப்பு உண்டா? உண்டு எனில், எப்போது இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கவும். மேலும் திருமணம் எப்போது நடைபெறும்?

- சு. பிரகதீஷ், காரைக்கால்


நீங்கள் மகம் நட்சத்திரம் தனுசு லக்னத்தில் பிறந்துள்ளீர்கள். உங்கள் லக்னத்துக்கு தனம், குடும்பம், வாக்குஸ்தானத்துக்கு அதிபதியான சனி 3-ல் இருக்கிறார். மேலும், குரு
10-ல் இருந்து, 4-ம் பார்வையால் மீனத்தைப் பார்க்கிறார். அந்த இடத்தில் சுக்கிரனும் உச்சம் பெற்று காணப்படுகிறார். எனவே, மருத்துவ மேற்படிப்புக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், தற்போது சூரிய தசையில், கேது புக்தி 2019 ஜனவரி வரை உள்ளது. அதற்குப் பிறகு மேற்படிப்புக்கு நீங்கள் முயற்சி செய்யலாம். நல்லமுறையில் தேர்ச்சி பெறுவீர்கள்.

? எனக்கு இன்னும் சரியான வேலை அமைய வில்லை. திருமணமும் தடைப்படுகிறது. எனக்கு எப்போது நல்ல வேலை அமையும், திருமணம் எப்போது நடைபெறும் ?

- கணேஷ் ராவ், சென்னை - 82. 


தங்கள் ஜாதகத்தில் 7-ம் வீட்டுக்கு உரிய செவ்வாய் 8-ல் அமைந்திருப்பது பலமான செவ்வாய் தோஷமாகும். மேலும் 10-ம் வீட்டுக்கு உரிய சனி 12-ல் நீசம் பெற்றிருக் கிறார். இந்த நிலை அவ்வளவு உசிதமானதல்ல. சனி தசை 2029 வரை உள்ளது. லக்னாதிபதி சுக்கிரன் 11-ல் உச்சம் பெற்றிருப்பதாலும், 7-ல் குரு அமர்ந்து சுக்கிரனைப் பார்வை செய்வதாலும் ஓரளவு நன்மை உண்டாகும். 8.9.20-க்கு மேல் நல்ல நேரம் ஆரம்பிக்க உள்ளது. நன்மைகள் ஏற்பட சாத்தியம் உண்டு. மேலும், தற்போது தங்களுக்கு ஏழரைச் சனி நடப்பதால், பொறுமை அவசியம்.

? நான் அரசுத் துறையில் பணிபுரிந்து கடந்த 2017-ம் வருடம் ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஓய்வூதியம் போன்ற பலன்கள் கிடைக்க வில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு எப்போது முடிந்து எனக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும்?

- து.பார்த்தசாரதி,


தங்களின் ஜாதகத்தில் 6-ல் கேது அமைந்திருக்கிறார். 6-ல் பாவக் கோள் அமையப்பெற்றிருப்பதால், அவ்வளவு அனுகூலமான பலன்களைச் சொல்வதற்கில்லை. தற்போது அஷ்டமச் சனி நடைபெறுகிறது. பிறக்கும்போதும் அஷ்டமச் சனி நடைபெற்றது. தற்போது சனி தசையில் கேது புக்தி நடைபெறுகிறது. சனி 3-லும், கேது 6-லும் இருப்பதால், 2019 ஆகஸ்டுக்குப் பிறகு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

-பதில்கள் தொடரும்...


வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் - படம் : கே.எம்.பிரசன்னா

‘சொந்த வீடு’ யோகம் உண்டா?

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism