Published:Updated:

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

‘தொண்டை நாடு சான்றோ ருடைத்து’ என்ற புகழுக்கு நிதர்சனமான சாட்சியாக விளங் கியவர் தளவாய் அரியநாத முதலியார். 

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

தொண்டை நாட்டைச் சேர்ந்த மெய்ப்பேடு (தற்போது மப்பேடு என்று அழைக்கப்படுகிறது) எனும் ஊரில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பிற்காலத் தில் தம்முடைய திறமை மற்றும் சான்றாண்மையின் காரணமா கவும், தெய்வ அனுக்கிரகத்தின் பலனாகவும் நாயக்கர் ஆட்சியில் அமைச்சராகும் வாய்ப்பினைப் பெற்றார்.

தமது உயர்வுக்குக் காரணம் தெய்வ அருள்தான் என்று உறுதியாக நம்பிய அரியநாத முதலியார், தாம் பிறந்த மப்பேடு கிராமத்தில் சிதிலமடைந்திருந்த சிங்கீஸ்வரர் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டியதுடன், அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் பல ஊர்களிலிருந்த சிவன் கோயில்களுக்கும் திருப்பணிகள் செய்திருக்கிறார் என்பார்கள். அப்படி அவரால் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயில்தான், இந்த இதழில் நாம் தரிசிக்கப்போகும் எறையாமங்கலம் அருள்மிகு அமிர்தாம்பிகை சமேத அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் என்கிறார்கள். ஆனாலும் இதுகுறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.

இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் கூவம், இலம்பையங்கோட்டூர், திருவாலங்காடு போன்ற பாடல்பெற்ற சிவத்தலங்கள் அமைந்திருக்கின்றன. ஒருகாலத்தில் இந்த ஆலயம் மிகச் சிறப்பாக இருந்திருக்கக்கூடும் என்பதை, அதன் அமைவிடத்தைப் பார்க்கும்போது அறியமுடிகிறது. ஆனால், பிற்காலத்தில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்கள் அல்லது அந்நியர்களின் படையெடுப்புகளின் காரணமாக ஆலயம் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது போலும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!சிவலிங்கமும், அம்பாள், நந்தி, விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்தங்களும் வெகுகாலமாக வெட்டவெளியிலேயே இருந்தன என்று இவ்வூரைச் சேர்ந்த அன்பர்கள் கூறியபோது, நமக்கு ஏற்பட்ட சோகம் சொல்லி மாளாது. ஏழு வருடங்களுக்குமுன்பு, ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து ‘கல்லுக்குள் தேரைக்கும் சாலப்பரிந்து உணவூட்டும் ஐய’னுக்கு திருக் கோயில் எழுப்ப முடிவு செய்ததும் இறைவனின் திருவுள்ளம்தான்.

அதேநேரம், சுவாமி மற்றும் அம்பாளின் திருப்பெயர்கள் தெரியாமல் எப்படி திருப்பணி தொடங்குவது? மப்பேடு கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சகர் சங்கர் என்பவரின் ஆலோசனைப்படி தெய்வ பிரச்னம் பார்த்தனர். அதன் மூலம் சுவாமியின் திருப்பெயர் தர்மலிங்கேஸ்வரர், அம்பாளின் திருநாமம் அமிர்தாம்பிகை என்று தெரிய வந்தது. உடனே ஐயனுக்கு ஒரு கூரை அமைத்து, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்ததுடன், திருப்பணிகளையும் தொடங்கினர். ஆனால், ஏழு வருடங்கள் கடந்தும் திருப்பணிகள் முடியாமல் தடைப்பட்டு நிற்கின்றன. ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள் எழுப்பப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. விரைவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பது அந்த ஊர்மக்களின் விருப்பம். 

ஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்!

ஆலயங்கள் பொலிவு பெற்றால், தர்மம் சிறந்தோங்கும்; உலகம் தழைத்துச் செழிக்கும். அவ்வகையில், எறையாமங்கலம் ஐயன் தர்மலிங்கேஸ்வரர் ஆலயத் திருப்பணிகள் தடங்கலின்றி தொடர நாமும் கரம்கொடுப்போம்; இந்த ஆலயம் பொலிவுபெற நம்மால் இயன்றதைச் சமர்ப்பிப்போம். அப்படி பொலிவுபெறும் ஆலயத்தில் - ஈசனின் சந்நிதியில் தொடர்ந்து நடைபெறும் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நம்மை வாழ்வாங்கு வாழவைக்கும்.

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: வீ.நாகமணி

எப்படிச் செல்வது..?

சென்னை - பேரம்பாக்கம் சாலையில், மப்பேடு எனும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள எறையாமங்கலம் கிராமத்துக்கு ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம்.

வங்கிக் கணக்கு விவரம்:

Name: M.Mani and Panner selvam

A/c.no: 6689434781

IFSC Code: IDIB000M119

Bank: Indian Bank

Branch: Mappedu

மேலும் விவரங்களுக்கு:

8760341060 (மணி)

9865715429 (மாமல்லன்)  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism