Published:Updated:

நற்றுணையாவது நமசிவாயவே...

நற்றுணையாவது நமசிவாயவே...
பிரீமியம் ஸ்டோரி
நற்றுணையாவது நமசிவாயவே...

நற்றுணையாவது நமசிவாயவே...

நற்றுணையாவது நமசிவாயவே...

நற்றுணையாவது நமசிவாயவே...

Published:Updated:
நற்றுணையாவது நமசிவாயவே...
பிரீமியம் ஸ்டோரி
நற்றுணையாவது நமசிவாயவே...

சென்னையில், கட்டுமானத் தொழிலுக்கான பொருள்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வருகிறேன். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் எனச் சிறிய குடும்பம் என்னுடையது.

நற்றுணையாவது நமசிவாயவே...

15 ஆண்டுகளுக்கு முன்பு, வாடகை வீட்டில் வசித்து வந்தேன். அப்போதுதான் `சொந்த வீடு வேண்டும்' என்ற கனவு எனக்கும் உருவானது. ஈசன் அருளால், சோழிங்கநல்லூர் அருகே ஒரு சிறிய இடத்தை வாங்கினேன். 3 ஆண்டுகள் கடந்தன. இடம் வாங்கியதற்கான கடன்களும் ஓரளவு தீர்ந்தன. ஆகவே, வாங்கிய இடத்தில் வீடு கட்டலாமே என்ற எண்ணத்துடன், கையிலிருந்த பணத்தை வைத்து வீடு கட்ட ஆரம்பித்தேன்.

‘அசைந்து தின்னும் ஆனை; அசையாமல் தின்னும் வீடு' என்பார்கள். அப்படியே நடந்தது. ஆம்! பாதி வீடுகூட எழும்பவில்லை... கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக ஏறத் தொடங்கியது. பணப்பற்றாக்குறை... என்ன செய்வது, யாரிடம் கேட்பது என்ற தவிப்பில், சாப்பாடு இறங்கவில்லை. கண்ணை மூடினால் இனி என்ன ஆகுமோ என்ற திகில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நற்றுணையாவது நமசிவாயவே...உறவினர்களிடம் கடன் கேட்கத் தயக்கம். நண்பர் களிடம் கேட்டு, அவர்கள் இல்லை என்று சொல்லி விட்டால், மனத்தாங்கல் வந்துவிடுமோ என்ற அச்சம்.

அச்சம் கூடகூடத்தானே ஆண்டவனின் தேவை அதிகமாகும். நானும் ஓடினேன். என் வீட்டுக்குப்  பக்கத்திலேயே குடிகொண்டிருந்த ஆழிகொண்டீஸ்வர பெருமான் ஆலயத்துக்குச் சென்றேன். மனமார, என் விழிநீர் வடிய அந்தப் பெருமானை வேண்டினேன்.

“எனது கஷ்டத்தைப் போக்கு பெருமானே! நாங்கள் குடியிருக்க சொந்த வீடு அவசியம் அல்லவா, அதைக் கொடுப்பது உன் கடமை அல்லவா..” என்று பலவாறு தொழுதேன்.

ஈசனைச் சரணடைந்தால் ஆபத்தேது? கோயிலிலிருந்து வெளியே வரவும் செல்போன் ஒலித்தது. பேசியது என் மைத்துனர். 

`‘வீட்டு வேலை நடக்காம இருக்குதுன்னு, சாப்பிடாம தூங்காம இருக்கீங்களாம்... தங்கச்சி சொன்னாங்க... கவலைப் படாதீங்க’ என்று சொன்னதோடு நிற்காமல், ஒரு பெரும் தொகையையும்  கொடுத்து உதவினார். வீடு மளமளவென்று எழுந்தது. அதன்பிறகும், இறுதிக்கட்ட வேலைகளுக்குப் பணம் தேவைப்பட்டது. மீண்டும் மைத்துனரிடம் கேட்க தயக்கம்.

 ‘தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்பார்கள் ஆன்றோர்கள். சத்தியமான வார்த்தை அது. வீட்டு வேலை செய்த தொழிலாளர்கள் பலரும் எனக்குத்  தைரியம் சொல்லி தேற்றியதுடன், பணமே வாங்காமல் வேலை செய்து கொடுத்தார்கள். `சம்பளத்தை மெள்ள வாங்கிக்கொள்கிறோம்' என்றார்கள். அந்த எளிய மக்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனது.  இறையருளால் வீட்டு வேலை முடிந்தது. புதுமனை புகுவிழாவில் அந்தத் தொழிலாளர்களுக்கே முதல் மரியாதை செய்தேன். அதேபோல், ஒரு வருடத்தில் மேஸ்திரி முதற்கொண்டு அனைவருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தைக்  கொடுத்து முடித்தேன்.

அந்த மனிதர்களின் அறக்கருணையும் உதவியும் சிவனருளாலேயே எனக்குக் கிடைத்தன என்றே எண்ணுகிறேன். நம்பியவரைக் காக்கும் அந்த நமசிவாயனை நான் என்றென்றும் மறவேன்.

- சி.சுகுமார், சென்னை 119


ஓவியம்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism