Published:Updated:

ஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...!’

ஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...!’
பிரீமியம் ஸ்டோரி

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கோயில்

புது
ச்சேரி நகரில், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, புகழ் பெற்ற  மணக்குள விநாயகர்  திருக்கோயில். இவரை மையமாக வைத்து பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு எதிராக, நெசவாளர்கள் போராடி, அதுவே விடுதலைப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. பாண்டிச்சேரி அன்னை, அரவிந்தர்,  மகாகவி பாரதியர் என எண்ணற்ற  பிரபலங்களைத் தன் பக்தர்களாக்கிய பெருமை கொண்டவர் இவர். இந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய சில அற்புதங்கள் உண்டு.

முரட்டாண்டி சித்தர்!

பொ
துவாக, பெரும்பான்மை யான சிவாலயங்கள் மகான்களின் அதிஷ்டானம் எனப்படும் ஜீவ சமாதிகளை வைத்தே  சிவலிங்கம் அமைந்திருக்கும். அந்த வகையில் தொள்ளைக்காது சுவாமிகளின் ஜீவ சமாதி, கருவறைக்குள் அமைந்துள்ளது பலரும் அறிந்திராத  செய்தியாகும். பிரெஞ்சு  ஆட்சியில் புதுச்சேரியையடுத்த,  முரட்டாண்டி என்ற ஊரில் இருந்து தினமும் புதுச்சேரி மணக்குள விநாயகரிடம் வந்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார், சுவாமிகள்.  முரட்டாண்டிச் சித்தரின்  காதுகள் அமைப்பினால், தொள்ளைக்காது சுவாமிகள் என அழைக்கப்பட்டார். பிரெஞ்சு  நாட்டினர் அதிகம் வசித்த பகுதியில் விநாயகர் வழிபாட்டுக்கு ஏராளமான சிரமங்கள் இருந்தன. “வெள்ளைக்காரர்கள் வீதியில் தொள்ளைக்காதர் அமைந்து விட்டார்’ என்ற பழமொழி அக்காலத்தில் பிரசித்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...!’

கருவறையில் நீர் சுரக்கும் அற்புதம்!

ருவறையில்  மூலவராக  வீற்றிருக்கும்  மணக்குள விநாயகர்  மணற்குளத்தின் கரையோரம்  எழுந்தருளியதால், மணல்குள விநாயகர்  என்று அழைக்கப்பட்டார்.  இப்பெயர் மருவி, மணக்குள விநாயகர் எனப் பெயர்பெற்றார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக,  மூலவர் விநாயகரின் முன்புறம் சிறிய குழி அமைந்துள்ளது.  அதில் ஏந்நேரமும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும். இதனை உறுதி செய்ய விரும்புவோர்  ஆலய அர்ச்சகரிடம் வேண்டுகோள் வைத்தால், அந்தக் குழிநீரை இறைத்துக் காட்டுவார்.

ஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...!’

ஸ்ரீஅன்னையிடம்  இடம் கேட்ட ஆனைமுகன்!

க்கோயில்  அமைந்திருக்கும்  இடம்  தவிர, சுற்றியுள்ள இடங்கள் அனைத்துமே, அரவிந்தர் ஆஸ்ரமத்திற்குச்  சொந்த மானவை. என்றாலும், அரவிந்தர் ஆசிரமத்து  அன்னை  மணக்குள விநாயகர் மீது மிகுந்த  அன்பு கொண்டிருந்தார்.

இந்நிலையில்  விநாயகர் கருவறையின்  தென்புறம் சுற்றிவர குறுகலாக இருந்ததால்,  பக்தர்களுக்கு  இடையூறாக இருந்தது.  ஆஸ்ரமத்தாரிடம் பலமுறை முயற்சி செய்தும் பயன் கிடைக்கவில்லை.  தங்கள் கோரிக்கையை மணக்குள விநாயகரிடமே  விட்டுவிட்டனர். இதன்பின்  ஒருநாள் அன்னையின்  கனவில்  தோன்றிய  விநாயகர், தென்புறச் சுவரின் பக்கம் தனக்கு இடம் வேண்டுமென  கேட்டதாகவும், திடுக்கிட்டு எழுந்த  அன்னை அன்றைய தினமே (25.12.1968) கோயிலுக்குத் தேவையான இடத்தை தானமாக பட்டயம் எழுதிட ஏற்பாடு செய்தார் எனக் கூறப்படுகிறது. இந்தப் பட்டயம் குறித்த செய்தி  இன்றும் தென்புறச் சுவரில் காணப்படுகிறது.

- பனையபுரம் அதியமான்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism