Published:Updated:

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!
பிரீமியம் ஸ்டோரி
உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

Published:Updated:
உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!
பிரீமியம் ஸ்டோரி
உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

‘`மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்கவேண்டாம் என்பர். மனமது செம்மையாக இறைப்பணிகளே உதவும் என்று வழிகாட்டியிருக்கிறார் திருநாவுக்கரசப் பெருமான். அந்த வகையில், சக்தி விகடனின் உழவாரத் திருப்பணிகள் மனமதைச் செம்மைப் படுத்தி வாழ்க்கையையும் வளமாக்க உதவுகிறது. 

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

வினைப்பதிவு எனும் சுமைகளை விடுத்து, மனம்  தூய்மை பெறுவதே ஆன்மிகத்தின் இலக்கு. தூக்கியெறிந்தாலும் உருவாகிக் கொண்டே இருக்கும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த நல்ல காரியங்கள் பயன்படும், அந்த நல்ல காரியங்களில் இந்த உழவாரப் பணியும் ஒன்று” என்று உழவாரப்படையைச் சேர்ந்த அன்பர் முத்து கருப்பன் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்ள, அவரது இந்தக் கனிவான பாராட்டைச் சுமந்தபடி, கத்தாரிக்குப்பம் சிவாலயத்தில் தொடங்கியது, நம் வாசகர்களின் உழவாரத் திருப்பணி.

வேலூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே அமைந்துள்ள கிராமம் கத்தாரிக்குப்பம். வேலூர் மாவட்டம் ஆற்காட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது லாலாபேட்டை. இந்த ஊரைத் தாண்டியதும் 2 கி.மீ தொலைவில் கத்தாரிக்குப்பம் கூட்ரோடு வருகிறது. அங்கே வலப்புறமாகப் பிரியும் சாலையில் 2 கி.மீ. பயணித்தால் கத்தாரிக்குப்பம் கிராமத்தை அடையலாம்.

மிக அழகான இந்தக் கிராமத்தின் மையமாக அமைந்திருக்கிறது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்; சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது இக்கோயில் என்கிறார்கள்.

இங்குதான் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தின் 13-வது மடாதிபதி ஸ்ரீஸ்ரீ ஸத்சித் கணேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இவரது காலம் கிபி 235 - 272 ஆம் ஆண்டு வரை என்று குறிப்பிடுகிறார்கள் பக்தர்கள். இந்த ஸ்வாமிகளின் சீடராகத் திகழ்ந்த மகாசித்தபுருஷர் ஒருவரது ஜீவசமாதியும் சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் திருக்குளத்தின் அருகே அமைந்துள்ளது. சகல பிணிகளையும்... குறிப்பாக மனோ வியாதிகளைக் குணமாக்கும் சமய சஞ்ஜீவியாக இந்தச்  சித்த புருஷர் அருள்பாலித்து வருகிறார் என்று இந்தப் பகுதி மக்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

இந்தச் சித்தர் இன்றைக்கும் சாந்நித்தியத்துடன் திகழ்வதாகவும், இவரின் பீடத்துக்கருகே அமர்ந்து தியானம் செய்தால் நிச்சயம் அவரது திருவருளைப்பெற முடியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். உழவாரப் பணிக்கு வந்திருந்த வாசகர்களோடு நாமும் சிறிது நேரம் தியானத்தில் லயித்தோம். மிக அற்புதமான அதிர்வை உணரமுடிந்தது.

ஒற்றைப் பிராகாரத்துடன்கூடிய சிறிய கோயில்தான் என்றாலும் மிக சாந்நித்தியத்துடன் திகழ்கிறது. ஸ்வாமியும் அம்பாள் மீனாட்சியும் தனித் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்க, முருகப்பெருமான், விநாயகர், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளும் தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள். மூலவர் கருவறையில் லிங்கமூர்த்தமாக தரிசனம் தருகிறார் மீனாட்சிசுந்தரேஸ்வரர். வட்டவடிவ ஆவுடை. `நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேற அருள்பாலிக்கும் தெய்வம்’ என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். வரம் அருள்வதில் ஸ்வாமிக்கு நிகரெனத் திகழ்கிறாள் அம்பிகை. இவளின் சந்நிதியில் மனமுருகி வேண்டிக்கொண்டால், எவ்வித பிரச்னைகளானாலும் சடுதியில் தீர்வு கிடைக்கும். திருமணத் தடைகள், குழந்தை பாக்கியமின்மை ஆகிய சங்கடங்களை நீக்கி சந்தோஷத்தை வாரி வழங்கும் அன்னை இவள் என்பது நம்பிக்கை.

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!இந்தக் கோயிலையும் சித்தர் சமாதியையும் நிர்வகித்து திருப் பணியாற்றி வரும் ராஜப்பாவும் அவரின் துணைவியாரும் காஞ்சி மகாபெரியவரின் திருவடி தொழும் சீரிய பக்தர்கள். மகா பெரியவரின் அனுக்கிரகத்தாலேயே  இந்தச் சித்தர்பீடத்தைக் கண்டறிந்து மண்டபம் அமைத்து வழிபட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இந்த ஆலயம் மற்றும் திருக்குளத்தை மட்டுமின்றி, அருகிலுள்ள கிருஷ்ணர் கோயிலையும் புனரமைத்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி.

மிக அற்புதமான இந்த ஆலயத்தின் திருக்குளத்தை ஆழப்படுத்தி சீராக்கவும், நந்தவனத்தைப் புனரமைத்து புதிய மரங்களை நடவும்தான் சென்ற இதழில் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். கடந்த 18.11.18 ஞாயிறன்று, கொட்டும் மழையில், வந்துபோக சிரமமான நிலையிலும் திரளான  வாசகர்கள் வந்து கலந்துகொண்டு, ஈசனுக்கான திருப் பணியில் தங்களை ஆட்படுத்திக்கொண்டார்கள்.

திருக்குளத்தைத்  தூர் எடுத்தல், களைகளை அப்புறப்படுத்தல், குளத்தின் படிகளைச் சுத்தம் செய்தல்... என நாள் முழுவதும் உழவாரப் படை அன்பர்களோடு இணைந்து, அவர்கள் ஆற்றிய தொண்டைச் சிறப்பிக்க வார்த்தைகளே இல்லை. சிவனடியார் சரவணன் ஐயா தலைமையில் ஒரு குழு கோயிலின் திருக்குளத்தைச் சீர்செய்துகொண்டிருந்த அதேநேரம், மற்றொரு குழுவினர் திருக்குளத்தின் எதிரிலுள்ள ஓரிடத்தில் மிக அற்புதமாக நந்தவனம் ஒன்றை சிருஷ்டித்துக்கொண்டிருந்தார்கள். ஆம், முறைப்படி வேலியிட்டு, உள்ளே நாகலிங்கம், வில்வம், மகிழம் என விதவிதமான 40 மரக்கன்றுகளை நட்டனர். 

இங்கே இப்படியொரு திருப்பணி நடந்து கொண்டிருந்த தருணத்தில், கத்தாரிக் குப்பத்துக்கு அருகிலுள்ள ஏகாம்பரநல்லூர் சிவாலயத்திலும் பெருங்குழு ஒன்று நந்தவனம் மற்றும் அல்லிக்குளம்  அமைத்துப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள்.

வந்திருந்த வாசகர்கள் மற்றும் உழவாரப்படை யினருக்கு சுவையான மதிய விருந்தை தனது வீட்டிலேயே தயாரித்து வழங்கினார் ராஜப்பா. சேலம், சென்னை, காஞ்சிபுரம் என பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த வாசகர்கள், மழையென்றும் பாராமல் மிக உற்சாகத்தோடு பணியாற்றி மகிழ்ந்தார்கள். அவர்களின் மனம் மகிழும் வண்ணம், திருக்கோயிலில் உச்சிக்கால பூஜையாக அருள்மிகு மீனாட்சியம்மை அருள்மிகு சுந்தரேஸ்வரர் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மையையும் அப்பனையும் கண்ணார தரிசித்து மனதாரத் தொழுது வேண்டிக் கொண்டோம்... `உலகம் சிறக்க உங்களின் திருவருள் வேண்டும்; இறையின் சிந்தை மகிழ எங்களின் உழவாரம் தொடரவேண்டும்’ என்று! நமது வேண்டுதலை ஆமோதிப்பதுபோல் ஒலித்தது ஆலயமணி; விடைபெற்றோம் மனநிறைவோடு!

மு.ஹரிகாமராஜ் படங்கள்: ச.மஹாவீர்

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

வணங்குகிறோம்!

செ
ன்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சீராளன் - தேவி தம்பதி சக்திவிகடனின் பெருமைக்குரிய வாசகர்கள். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சீராளன்.

நமது முதல் உழவாரத் திருப்பணி நிகழ்ந்த இலம்பையங்கோட்டூருக்கு இருவருமே வந்திருந்தனர். அங்கே அருளும் தெய்வநாய கேஸ்வரரை வழிபட்டதுடன், அவருக்கு உழவாரப்பணி செய்ததன் பலன் கைமேல் கிடைத்தது என்று மகிழ்கிறார்கள் இந்தத் தம்பதி. ஆம்!  அந்த உழவாரப்பணி நிறைவுற்று ஓரிரு தினங்களிலேயே... சீராளன் ஐயாவின் அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, அவருக்கு  காரைக்கால் துறைமுகத்தில் வேலை கிடைத்ததாம்.

அவசரமாகப் பணியில் சேரவேண்டிய நிலையில், தன் மனைவி தேவியம்மாவை கத்தாரிக்குப்பத்துக்குக் காரில் அனுப்பி வைத்திருந்தார் சீராளன். இங்கே மிக அற்புதமாக திருத்தொண்டாற்றிய  தேவியம்மா, ``வயதாகிறது என்றாலும் என் உடல் ஒத்துழைக்கும் வரை சக்திவிகடனின் உழவாரப்பணியில் தவறாமல் கலந்து கொள்வேன்’’ என்று நெகிழ்ந்தவர், 3,500 ரூபாயை உழவாரப்பணியில் கலந்துகொள்ளும் உணவுச் செலவுக்காகக் கொடுத்து நம்மையும் நெகிழவைத்தார். இவர்களைப் போன்ற வாசகர்களின் அன்பும் அர்ப்பணிப்புமே சக்தி விகடனின் பலம்.

இவர்கள் மட்டுமா? ஆரம்பம் முதலே எங்களோடு உழவாரத் திருப்பணியில் கைகோர்த்து செயல்படும் ஜெயமணி அம்மா, பார்வதி அம்மா, உமா அம்மா ஆகியோரும் எங்களின் வணக்கத்துக்கு உரியவர்களே.

உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்!

ழவாரத் திருப்பணியை கண்டு ரசிக்க இங்குள்ள QR Code- ஐ பயன்படுத்தவும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism