Published:Updated:

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

Published:Updated:
பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

திருவிளக்குபூஜை, வேல்மாறல் பாராயணம்- வழிபாடு, உழவாரப்பணி செய்வோம்... இப்படி, வாசகர்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைச் சிறக்கவேண்டியும் சக்திவிகடன் தொடர்ந்து நடத்திவரும்  இறைப்பணிகளின் வரிசையில், மிக அற்புதமாக இணைந்தது ருத்ராட்ச  லிங்க தரிசனம்!

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழா, உலகப் பிரசித்திபெற்றது. ஸ்ரீஅருணாசலேஸ்வர பெருமான் மகா தீப ஜோதியாக அருளும் அந்தத் திருநாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள். மிக அற்புதமான இந்தத் திருநாளின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் விதம் அமைந்தது, சக்திவிகடனும் காளீஸ்வரி ரீஃபைனரி தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து வழங்கிய ருத்ராட்சலிங்க தரிசன வைபவம்.

`க்ஷணிக லிங்கங்கள்’ என்று ஞானநூல்கள் வகைப்படுத்தும் லிங்க மூர்த்தங்களில் ஒன்று ருத்ராட்ச லிங்கம். ருத்ரனாகிய பெருமானின் நெற்றிக் கண்ணில் உற்பத்தியானது எனும் சிறப்பைப் பெற்ற ருத்ராட்சத்தால் லிங்கம் அமைத்து, ஐவகை எண்ணெய் கலந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் விசேஷமான பலன்கள் கைகூடும் என்பார்கள் பெரியோர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

மகிமைமிகு ருத்ராட்சலிங்கத்தை தரிசிப்பதாலும் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் அஞ்ஞானம் அகன்று ஞானம் பெருகும், கர்மவினைகள் நீங்கும், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும், இம்மையில் வளமும், மறுமையில் சிவனாரின் திருவடி நிழலில் நித்திய வாசம் செய்யும் பேற்றினையும் அருளும் என்கின்றன ஞானநூல்கள். மேலும், ருத்ராட்ச லிங்கத்தின் முன்பாக விளக்கேற்றி, சிவ நாமாக்களைப் பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்கும்; அனைத்துவித நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

இப்படியான பலன்களை நம் வாசகர்களும், சிவனடியார்களும், பக்தர்களும் பெற்று மகிழும் விதம், திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில், ஈசான்ய லிங்கச் சந்நிதியின் எதிரிலுள்ள,  அம்மணிஅம்மன் சித்தர்பீடம் திருக்கோயில் வளாகத்தில், சுமார் 7 அடி உயரத்திலான ருத்ராட்சலிங்கம் அமைக்கப்பட்டது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்குக் கோபுரத்தைக் கட்டியவர் அம்மணிஅம்மாள். அவர் பெயராலேயே அந்தக் கோபுரம் அம்மணி அம்மாள் திருக்கோபுரம் என வழங்கப்படுகிறது.  வடக்கு கோபுரத் திருப்பணியை முடித்த மனநிறைவுடன், ஒரு தைப்பூச நன்னாளில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரில் ஜீவசமாதிகொண்டார். அந்த இடமே இன்று அம்மணி அம்மாள் சித்தர் பீடமாக, அவரின் திருவருள் பெருகும் திருக்கோயிலாக விளங்குகிறது. இந்தக் கோயிலின் பிரசாதத் திருநீறு பக்தர்களின் தீராத நோய்களையும் தீர்க்கும் சஞ்ஜீவி மருந்தாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோயிலின் வளாகத்திலேயே ருத்ராட்சலிங்கம் எழுந்தருள, சிலிர்ப்பும் சிறப்புமாக தரிசித்து  மகிழ்ந்தார்கள் பக்தர்கள். தீபத் திருநாளுக்கு முதல் நாள் நவம்பர்-22 வியாழனன்றே, அகத்தியர் பசுமை உலகம் அமைப்பின் அடியார்கள் மற்றும் தலைவர் சரவணன் ஐயா ஆகியோரின் ஒத்துழைப்புடன் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது ருத்ராட்ச லிங்கம்.

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி நண்பகல் வரை ஐந்து நாள்கள் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் கூட்டம்கூட்டமாக வந்து ருத்ராட்சலிங்கத்தை தரிசித்து வழிபட்டனர்.

ஐவகை எண்ணெய் ஊற்றிய அகல்விளக்குகள், எலுமிச்சை தீபங்கள், மாவிளக்குகள் என விதவிதமாக தீபங்களை ஏற்றிவைத்து பெண்கள் வழிபட்டுச் சென்றார்கள். சிவனடியார்களோ சங்கநாதம் எழுப்பியும், சிவவாத்தியங்களை ஒலிக்கச் செய்தும் வழிபட்டார்கள். ஆன்மிக குழுக்களாக வந்த அன்பர்கள் தங்கள் குழுவினரோடு சேர்ந்து, தேவாரப் பாடல்கள், திருவாசக முற்றோதுதல் எனப் பாராயண வழிபாடுகளைச் செய்து மகிழ்ந்தனர். ருத்ராட்ச லிங்கத்தை தரிசிக்க வந்த அன்பர்கள் அனைவருக்கும் காளீஸ்வரி ரீஃபைனரி - தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனத்தின் சார்பில், அழகிய விசிறி வழங்கப்பட்டது. அம்மணி அம்மாள் கோயிலின் நிர்வாகி அன்பர் ரமேஷ்  மற்றும் அவரின்  மனைவி இருவரும் ருத்ராட்ச லிங்க தரிசனத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை மகிழ்ச்சியுடன் செய்து தந்து ஒத்துழைத்தனர். 

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

பக்தர்களில் பலரும், ‘`இப்படியொரு பிரமாண்ட ருத்ராட்சலிங்கத்தை வேறெங்கும் நாங்கள் தரிசித்ததில்லை. இப்படியொரு பெரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்த சக்தி விகடனுக்கும் காளீஸ்வரி நிறுவனத்துக்கும் மிக்க நன்றி’’ என்று நெகிழ்ச்சியுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்; மகாதீப தரிசனத்தோடு, பிரமாண்ட ருத்ராட்சலிங்க தரிசன மும் கிடைத்ததால் உண்டான பரவசத்தில், அவர்களின் திருமுகம் தீபஜோதியாய் ஜொலிஜொலித்தது. இந்த மகிழ்ச்சியும் பரவசமும் அவர்களின் ஆயுள்பரியந்தம் தொடர, அந்த அண்ணாமலையார் அருள்பாலிப்பார்!

மு.ஹரி காமராஜ் - படங்கள்:  க.முரளி.  ச.மகாவீர், எஸ்.விக்னேஷ்குமார்

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

ருத்ராட்ச லிங்கத்தைக் கண்டு ரசிக்க இங்குள்ள QR Code- ஐ பயன்படுத்தவும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism