சபரி சந்நிதானமும் திருவிதாங்கூர் சமஸ்தானமும்

திப்பு சுல்தான் காலத்தில் கேரளப்பகுதிகளை திப்புவின் படைகள் ஆக்கிரமித்தது. அப்போது, போர் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்த சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசிடம் அடகுவைத்தது.

அவற்றை மீட்க முடியாததால், சபரிமலை சந்நிதானம் உள்ளிட்ட மொத்த சொத்துக்களும் திருவிதாங்கூர் அரசின் வசமாயின. இப்படிதான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் வசமானது. ஐயப்பனின் திருவாபரணங்களை மட்டும் பந்தள அரசர் வசமே அளித்து, சம்பிரதாயங்கள் தொடரும்படி திருவிதாங்கூர் அரசு கேட்டுக்கொண்டது.

அவதார ரகசியம்!

மகாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவவிஷ்ணு சக்திகள் சங்கமமாக - கர்ப்ப வாசம் புரியாமல் சங்கல்ப மாத்தரத்தில் அவதரித்தவர் ஸ்ரீமகாசாஸ்தா. கயிலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் தேவியரை மணந்து அருளாட்சி நடத்திவந்த ஸ்ரீமகாசாஸ்தா, மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, பூவுலகில் மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்தார்.

ஆகாய கங்கை வழியாக பம்பையாற்றங்கரை அடைந்து, அங்கே ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமேஸ்வரன் கொடுத்த நவரத்தின மாலையை கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால், ஸ்ரீமணிகண்டன் என்று அவருக்குத் திருப்பெயர் வாய்த்தது.

இந்த இடத்தில் ஓர் உண்மையை நாம் அறிவது அவசியம். மணி என்றால்... பெரும்பாலும் எல்லோரும் கருதுவது போல் கோயில் மணி அல்ல. பொதுவாக `மணி’ என்றால், நவரத்தின மணி என்றே பொருள்.கழுத்தில் நவரத்தினங்கள் ஜொலித்த காரணத்தால், அவருக்கு `மணிகண்டன்’ என்று திருப்பெயரிட்டு வளர்த்து வந்தான், ராஜசேகர பாண்டியன்.

அவதார நோக்கத்துக்காக பால பிரம்மச்சார்யாகவே வாழ்ந்த மணிகண்டன், மஹிஷியை சம்ஹாரம் செய்தபிறகு, கலியுக வரதனாக கோயில் கொள்ளத் தீர்மானித்தான். சாஸ்தாவின் அவதாரமான ஸ்ரீமணிகண்டனை, மஹா யோகபீடமாக விளங்கும் ஸ்தலமான சபரி பர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

உலக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன், வருடத்தில் ஒருநாள் - மகர ஸங்க்ரமத்தன்று கண் விழித்து பக்தர்களை அனுக்ரஹிப்பேன் என்று வாக்களித்தார். பாண்டியர்களின் குருவான அகத்திய மாமுனிவரே சபரி மலைக்கான விரத வழிமுறைகளை வகுத்தளித்தார். ஒரு மண்டல காலம் பிரமாச்சார்யாதி விரதங்களை மேற்கொள்ளும் அன்பர்களே சபரிமலைக்குச் செல்ல தகுதி உடையவர் என்று வகுத்தளித்தார் அவர். சபரி மலைக் கோயிலின் ஸ்தல புராணம் இதுவே. பிரமாண்ட புராணத்தின் பூதநாதோபாக்யானம் என்ற கேரள கல்பப் பகுதியில், நமக்குக் கிட்டும் புராண சரிதம் இது.

நெய் அபிஷேகம் கிடையாது!

1800-ம் ஆண்டுவரையிலும் `தாரு சிலை’ எனப்படும் மரத்தாலான விக்கிரக வடிவத்திலேயே இருந்தார் சுவாமி ஐயப்பன். அதனால் அப்போது அவருக்கு நெய்யபிஷேகம் நேரடியாகச் செய்யும் வழக்கம் இல்லை. அதனால் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை, நெய்த்தோணியில் கொட்டிவிடும் பழக்கம் இருந்தது. இன்றைக்கும் பழைமையான கேரள பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் நெய்யை நேரடியாக பகவானுக்கு அபிஷேகிக்கக் கொடுக்காமல், நெய்த் தோணியில் கொட்டிவிடுகிறார்கள். அதிலிருந்தே சிறிது நெய்யைப் பிரசாதமாகக் கொண்டு செல்கிறார்கள்.

வரலாற்று நாயகன் ஐயப்பன்

புராண சரிதம் கடந்து பல நூற்றாண்டுகள் தாண்டி, பத்தாம் நூற்றாண்டில், பாண்டிய வம்சம் கேரளத்துக்குப் புலம்பெயர்ந்தது.செங்கோட்டை, இலத்தூர், பூஞ்சார், பந்தளம் ஆகிய இடங்களில் பாண்டிய ராஜ வம்சம் குடியேறியது.

தங்கள் பாண்டிய வம்ச திலகமாக விளங்கிய சபரிமலை சாஸ்தாவையே அண்டி ஒரு கிளை உருவானது. பத்து பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியமாக அது விளங்கியதால், பத்து தாமரை இதழ்களை உருவகித்து, பத்ம தளம் என்ற பெயர் அதற்கு விளங்கியது. இதுவே பின்னாளில் பந்தளம் என்றானது. சபரிமலை சாஸ்தாவைப் போற்றி உருவான பாண்டிய ராஜ பரம்பரை நாளடைவில் பந்தள ராஜ வம்சம் என்றே அறியலாயிற்று.

அப்போது சபரி மலைப் பகுதி, தமிழக கேரளா எல்லைப் பகுதியாக விளங்கிய காரணத்தால், வணிகர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அப்போது அப்பகுதி கொள்ளையர் வசமானது. ஒருமுறை, கொள்ளையர் தலைவன் உதயணன் என்பவன், சபரிமலை ஆலயத்தைத் தீக்கிரையாக்கினான்.

பாண்டிய வம்சமான பந்தள ராஜா குடும்பத்தில், ராஜகுமாரிக்கு தெய்வாம்சத்துடன் ஒரு மகன் பிறந்து, உதயணனை வீழ்த்தியதோடு, சபரிமலைக் கோயிலை புனர் நிர்மாணம் செய்து, முடிவில் சபரிமலை சாஸ்தாவுடன் இரண்டறக் கலந்துவிடுகிறான். ஆர்ய கேரள வர்மன் என்ற அந்த ராஜகுமாரனின் பெயரும் ஐயப்பன்! சபரிமலையில் மணிகண்ட சாஸ்தாவின் பெயரே கேரள வர்மனுக்கும் இருந்ததால் பின்னாளில் சிலபல குழப்பங்கள் உண்டாயின. `வாவர்’ என்ற கதாப்பாத்திரம் கதைக்குள் நுழைந்ததும் இந்த காலகட்டத்தில்தான். அது புராணக் கதை அல்ல.

ஐயன் நிகழ்த்திய அற்புதம்!

அது 1903-ம் வருடம். அப்போது ஏற்பட்ட தீ விபத்தின்போது, மேல்சாந்தியின் முயற்சியால் ஸ்வாமியின் விக்கிரகம் காப்பாற்றப்பட்டு, 1904-ல் புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழு ஆலயமும் சீரமைக்கப்பட்டது. அப்போது வேறுபாதை கிடையாது. கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் பெரிய பாதை வழியாகவே சந்நிதானம் வந்தடையவேண்டும். இந்த நிலையில், பந்தளம் அரண்மனையிலிருந்து திருப்பணிக்காக மரங்கள் கொண்டுவரப்பட்டன. கல் தூண்களைப் போன்று மிகவும் கனத்த அந்த மரங்களை அழுதை வரையிலும் கொண்டுவந்துவிட்ட தொழிலாளர்கள், மேற்கொண்டு மலையேற முடியாது என்று கைவிரித்துவிட்டனர். அப்போது, திடீரென எங்கிருந்தோ அங்கு வந்துசேர்ந்த அடியவர் ஒருவர், ஆவேசம் வந்தவராக உரக்கக் குரல் கொடுத்தார்... ‘இனி இந்தத் தூண்களைச் சுமப்பவர்கள், சந்நிதானத்தை அடையும்வரை, எந்தச் சுமையையும் உணரமாட்டார்கள்’ என்று.

அதனால் உந்தப்பட்ட தொழிலாளர்கள், அந்த அடியவரின் சத்திய வாக்குக்கு ஏற்ப, மரங்களை சுமையே இல்லாமல் மயிலிறகுபோல் சுமந்து சென்றார்களாம். சந்நிதானத்தை அடையும் வரை, அவர்களுடன் வந்த அந்த அடியவர் அதன்பிறகு மாயமாக மறைந்துபோனாராம். அப்படி உருவாக்கப்பட்டதே, இன்று நாம் காணும் சபரிமலை அமைப்பு.

பம்பா பாதை...

1960-ம் ஆண்டு வரை பெரிய பாதை மட்டுமே பக்தர்களுக்காக இருந்து வந்தது. 1960-களில் வி.வி.கிரி கேரள ஆளுநராக இருந்து வந்தார். அப்போது அவர் சபரிமலைக்குச் செல்ல விரும்பினார். பெரிய பாதையில் அவரால் செல்ல முடியாத என்ற காரணத்தால் `சாலக்காயம் பாதை’ எனும் சின்ன பாதை உருவானது. அதுவே பம்பா பாதை எனப்பட்டது.

ஐயனின் திருமேனி!

1904-ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டது. 1950-ம் ஆண்டிலும் பெருநெருப்பால் கோயில் சேதமாகி பின்னமானது. நாம் தற்போது வழிபடும் ஐயப்பனின் திருமேனி விக்கிரகம் 1952-ல் பி.டி.ராஜனும் நாவாப் ராஜ மாணிக்கம் பிள்ளையும் செய்து கொடுத்ததே.