ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'கடமையைச் செய்தால் சனி பகவான் அருள்வார்!'

'கடமையைச் செய்தால் சனி பகவான் அருள்வார்!'

'கடமையைச் செய்தால் சனி பகவான் அருள்வார்!'
##~##
'ச
னிப் பெயர்ச்சியால், பிணி உண்டாகுமோ என்றுதான் எல்லோரும் பயப்படுகிறார்கள். இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. சனி பகவானும் அப்படியே!’ என்பதை தன் சொற்பொழிவில் அற்புதமாக விளக்கினார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து...

''முதலில் ஒரு விஷயத்தை நாம் திடமாக நம்பவேண்டும். நம் வாழ்வில் வருகிற ஒவ்வொரு நாளும் நல்ல நாள்தான்! பொது நலனை மறந்து, சுயநலத்துடன் மாறி, தர்மத்தையும் அன்பையும் எவரொருவர் விடுகிறாரோ அவருக்கு அந்த வாழ்க்கையே தீயதாகி விடுகிறது. காலங்காலமாக, தர்மத்தையும் இறை பக்தியையும் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்து வந்த பரம்பரையினர் நாம். அதையெல்லாம் மறந்து, பண்பாட்டையும் கலாசாரத்தையும் சிதைத்து, இன்பமான வாழ்வுக்குப் பணமே பிரதானம் என நினைத்து, இந்தத் தலைமுறையினர் வாழ்கின்றனர் என்பதுதான் வேதனை!

உணவை உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும். இன்றைக்குக் கல்யாண வீடுகள் உள்பட எங்கும் நின்றுகொண்டே சாப்பிடும் முறை வந்துவிட்டது. நாகரிகம் என்கிற பெயரில், சாஸ்திர - சம்பிரதாயங்களை நாம் மீறக்கூடாது. நாம் செய்கிற தர்மங்களுக்குத் தக்கபடியே பலன்கள் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

'கடமையைச் செய்தால் சனி பகவான் அருள்வார்!'

எல்லோருக்கும் சனிப்பெயர்ச்சியையட்டிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. எந்தக் கிரகமும் நல்லதை மட்டும் அல்லது கெடுதலை மட்டுமே கொடுக்காது. உயர்ந்த நட்சத்திரங்களில்கூட, சனியின் நீட்சி இருக்கும். சனி பகவானின் பங்கு, தொடர்பு இல்லாத காலமே இல்லை என்பதே உண்மை!

ஆகவே, ஸ்ரீசனீஸ்வரரை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. அவரின் திருப்பாதத்தில் மானசீகமாக விழுந்து, 'பகவானே, எனக்கான கடமைகளை நான் செவ்வனே செய்கிறேன். எனக்கு நீதான் அருள்புரியணும்’ எனப் பிரார்த்தித்தால், சனீஸ்வர பகவான் நிச்சயம் நமக்கு அருள்வார்!'' என முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.  

  - பொ.ச.கீதன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்