ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'தை' மாதத்தில்..!

'தை' மாதத்தில்..!

'தை' மாதத்தில்..!

ஞ்சை மாவட்டம்- சூரியனார் கோயிலில் தை மாத பிரம்மோற்ஸவம் விசேஷம். விழா வின் 10-ஆம் நாள் சூரியதேவன், காவிரிக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். அதன் பிறகு திருக்கல் யாண விழாவும், தேர்த் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.

##~##
வடமாநிலங்களில் சில பகுதிகளில், தை மாதம் முதல் நாளன்று, எமகண்ட நேரத்தில் காலன் பூஜை நடைபெறும். எமதருமனின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, மலர் சூடி, எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபடுவர். இதனால் எமபயம் நீங்கும், துர்மரணம் மற்றும் விபத்துகள் நிகழாது என்பது நம்பிக்கை. தமிழகத்தில், திருப்பைஞ்ஞீலி, திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், திருக்கடையூர், திருச்சிற்றம்பலம் ஆகிய தலங்களில் எமதருமனுக்குச் சந்நிதிகள் உண்டு.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப ஸ்வாமி திருக்கோயிலில், ஆறு வருடத்துக்கு ஒருமுறை சிறப்பு ஜபமும் பூஜையும் நடைபெறுமாம். அந்த வருடத்தில் வரும் மகர சங்கராந்தி தினத்தில், லட்ச தீபம் ஏற்றுவர்; கோயில் தீப ஓளியால் ஜொலிக்கும். அன்று ஸ்வாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, தரிசனம் தருவார்!

- ஆர்.துர்கா, ஏற்காடு