. 'ஸ்ரீ.கருமாரி திரிபுரசுந்தரியை, கைகூப்பித் தொழுதால், நம் கவலைகள் அனைத்தையும் களைந்திடுவாள்’ என்கின்றனர் சென்னை வாழ் மக்கள்..
சென்னை அசோக்நகர் ஏழாவது அவென்யூ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் திருக்கோயில். ஒருகாலத்தில், சூலத்தை மட்டுமே பிரதிஷ்டை செய்து அம்பிகையாக வழிபட்டு வந்தனராம். பிறகு, அடியவர் ஒருவரது அருள்வாக்காக, இங்கு அம்மனுக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய உத்தரவானதை அடுத்து, அழகிய கோயிலென உருவெடுத்ததாகச் சொல்கிறார்கள்.

அவதூத சுவாமிகள் என்பவரின் திருச்சமாதி அமைந்துள்ளதால், இந்தப் பகுதியை சாமியார் தோட்டம் என அழைக்கின்றனர். இங்கு அழகிய ஸ்படிக லிங்கமாக சிவனாரும் அருள்பாலிக்கிறார். ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீதிரியம்பகேஸ்வரர். சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூச நன்னாள் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் அம்பிகை சர்வ அலங்காரத்துடன் திருவீதி புறப்பாடு எழுந்தருளும் காட்சியைத் தரிசித்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் எனச் சொல்லிப் பூரிக்கின்றனர், பக்தர்கள்!

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகருமாரி, ஸ்ரீமுருகர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீபிரத்தியங்கிராதேவி, ஸ்ரீசாந்த சரபேஸ்வரர், ஸ்ரீஅகத்தியர் சமேத ஸ்ரீலோபாமுத்ரா ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு என்றாலும் இந்தக் கோயிலின் பிரதான நாயகன் ஸ்ரீஅனுமன்தான்! ஸ்ரீசஞ்ஜீவி வீர சாந்த ஆஞ்சநேயர் எனும் திருநாமத்துடன் அருள் ததும்பக் காட்சி தருகிறார்.

புதன் மற்றும் சனிக்கிழமைகளில், சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீஅனுமனை ஸேவித்துச் செல்கின்றனர். கல்வியில் தடங்கல், திருமணத்தில் சிக்கல், வியாபாரத்தில் நஷ்டம் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக் கொண்டால் போதும்... விரைவில் காரியங்கள் யாவற்றையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் என்பது ஐதீகம்! அனுமத் ஜயந்தியன்று, லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் காட்சி, சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

வரப்பிரசாதியான ஸ்ரீஅனுமன் சந்நிதிக்கு வந்து, உங்கள் குறைகளைச் சொல்லி வழிபடுங்கள்; உங்களை வாழ்வாங்கு வாழவைப்பார் ஸ்ரீஆஞ்சநேயர்!

- பொ.ச.கீதன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்