Published:Updated:

நாமே தொட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யும் ஜோதிர்லிங்கத் தலம் குசுமேசம்!

நாமே தொட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யும் ஜோதிர்லிங்கத் தலம் குசுமேசம்!

நாமே தொட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யும் ஜோதிர்லிங்கத் தலம் குசுமேசம்!

நாமே தொட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யும் ஜோதிர்லிங்கத் தலம் குசுமேசம்!

நாமே தொட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யும் ஜோதிர்லிங்கத் தலம் குசுமேசம்!

Published:Updated:
நாமே தொட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யும் ஜோதிர்லிங்கத் தலம் குசுமேசம்!

லகப் புகழ் பெற்ற குடைவரைகள் நிறைந்த எல்லோராவிலிருந்து 1 கி.மீ தொலைவில் இருக்கிறது வெருள் கிராமம். இந்தக் கிராமத்தில் அருள்புரிகிறார் கருணையே வடிவான கிரிஸ்ணேஸ்வரர். இவருக்குக் குஷ்மேஸ்வரர், குஸ்ருணேஸ்வரர், துஷ்மேசுவரர் போன்ற திருப்பெயர்களும் உண்டு. சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இந்தத் தலமும் ஒன்றாகும். இறைவன் ஜோதி வடிவத்தில் பார்வதி தேவிக்கு அருள்பாலித்த அற்புதத் தலம் இது.

குஸ்ருணேசுவரர்  என்றால் குங்குமமேசுவரர் என்று பொருள். இந்தப் பகுதியில் பாயும் ஏலா எனும் நதியில் நீராடி சிவபெருமானைக் குங்குமத்தின் மூலம் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் பார்வதி தேவி. ஒருநாள் ஏலா நதியில் நீராடிவிட்டு, தன்னுடைய இடது உள்ளங்கையில் இருந்த குங்குமத்தை, வலது கை மோதிர விரலால் எடுத்தபோது, கயிலையில் ஒரு ஜோதிப்பிழம்பு தோன்றி, தேவியின் கரத்தில் இருந்த குங்குமத்துடன் ஐக்கியமாகி, பிறகு அம்பிகை வழிபட்டு வந்த சிவலிங்க மூர்த்தியில் சங்கமித்தது. அதன் விளைவாக அந்தச் சிவலிங்க மூர்த்தம் குங்குமம் போன்று சிவந்து, ஜோதியைப் போன்ற பிரகாசத்துடன் காட்சி அளித்தது. பார்வதி தேவி குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்தபோது தோன்றியதால், இந்தத் தலம் `குஸ்ருணேசுவரம்' (குங்குமமேசுவரம்) என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் மற்றும் கோயில் தலவரலாற்றில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சி இது.

முற்காலத்தில் இந்தக் கிராமத்தில் போசலே என்ற பெயர் கொண்ட சிவபக்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை பாம்புப் புற்றின் பக்கமாக அவன் சென்றபோது, புற்றிலிருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டதைக் கண்டான். உடனே, தான் சேர்த்து வைத்த செல்வம் அனைத்தையும் செலவிட்டு, சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினான். பின்னர் இந்தத் தலம் 16-ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜியின் தாத்தா மல்ரோஜி ராஜே போஸ்லே என்பவரால் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு 18 - ம் நூற்றாண்டில் அகில்பாய் ஹோல்கர் என்பவர் தற்போதிருக்கும் எழில் மிகு ஆலயத்தை எழுப்பினார். கோயில் முழுக்க முழுக்க சிவப்புக் கற்களால் ஐந்து நிலைகளில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள தூண்கள் கலையழகுடன் காணப்படுகின்றன. 

PC : https://commons.wikimedia.org/Author:Rashmi.parab

கிரிஸ்னேஸ்வரருக்குக் குஷ்மேஸ்வரர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. குஷ்மேஸ்வரர் என்றால் கருணையே வடிவானவர் என்று பெயர். சிவபெருமான் குஷ்மேஸ்வரர் என்று பெயர் பெற்றதன் பின்னணியில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தை கிராம மக்கள் சிலிர்ப்புடன் கூறுகிறார்கள்.   

ஒரு காலத்தில் சுதர்மன் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி சுதேஹா. இருவருக்கும் குழந்தைப் பேறு இல்லாததால் தனது தங்கை குசுமா (Kusuma) என்பவளைத் தனது கணவனுக்கு இரண்டாவது தாரமாகத் திருமணம் செய்து வைத்தாள். குசுமா அதிதீவிர சிவபக்தை. தினமும் களிமண்ணால் சிவலிங்கத்தைச் செய்து, வழிபட்டு ஏரியில் போட்டுவிட்டுச் செல்வாள். சிவபெருமானின் அருளால் குசுமாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் சுதர்மனுக்கு சுதேஹாவிடம் அன்பு குறைந்து, குசுமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினான். அதுவரை தனது தங்கையை மகிழ்ச்சியுடன் கவனித்துக்கொண்ட சுதேஹா, மன வேதனை அடைந்து குசுமாவின் மகனைக் கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி சிவாலய ஏரியில் வீசி விட்டாள். 

இதைக் கேள்விப்பட்ட குசுமா, சிவபெருமானிடம் தனது மகனைக் காப்பாற்றும்படி வேண்டினாள். சிவபெருமானின் அருளால் இறந்த குசுமாவின் குழந்தை உயிர் பெற்று ஏரியில் நடந்து வந்த அதிசயம் நடந்தது. குசுமாவுக்கு அருள்புரிந்த காரணத்தினால்தான் இந்தத் தல இறைவன் குஷ்மேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். குஷ்மேசுவரர் என்றால் இரக்கமுள்ளவர் என்றும் அர்த்தமாம். இதனால் குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் கிரிஸ்னேசுவரைத் தரிசித்து, வணங்கிச் செல்கிறார்கள்.

கோயிலுக்கு யார் வழிபடச் சென்றாலும் வரிசையில் நின்றே செல்ல வேண்டும். கோயிலுக்குள் நுழையும் ஆண்கள் யாரும் மேலாடை அணிந்து செல்லக் கூடாது. காசியைப் போன்று இங்கும் யார் வேண்டுமானாலும் கருவறைக்குச் சென்று கிரிஸ்னேசுவரரைத் தொட்டு வணங்கி, அபிஷேகம் செய்து மகிழலாம். குங்குமத்தைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். மனதில் என்ன நினைத்து லிங்கத்தைத் தொடுகிறோமோ அது நமக்கு நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மனதில் நல்ல எண்ணங்களுடன் இறைவனைத் தொட்டு வழிபட்டால் நமக்கும் நல்லது நிகழுமாம்.

PC : https://commons.wikimedia.org/Author: Ms Sarah Welch

* ஔரங்காபாத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும், புகழ்பெற்ற எல்லோரா குகைக் கோயிலிலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

* கோயிலுக்குள் செல்போன், கேமரா போன்ற எந்தவித எலெக்ட்ரானிக் சாதனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

* கோயில் கருவறையில் உள்ள சிவபெருமானுக்குக் குங்குமம் மற்றும் வில்வம் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்து வழிபட முடியும். பால் முதலான அபிஷேகப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. 

* கோயில் முழுக்க முழுக்க சிவப்புக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. ஐந்து அடுக்குக் கோபுரத்தைக் கொண்டது. கோயிலும், கோயிலுக்குள் இருக்கும் லிங்கமும் சிவப்பு நிறத்தில் காணப்படும். 

* சிவபெருமான் ஜோதி வடிவங்களில் அருள்பாலித்த தலங்கள் ஜோதிர்லிங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

* குங்குமம் கொண்டு குசுமேசுவரரை வழிபடுகிறவர்கள் மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.


* பார்வதிதேவிக்கு ஜோதி வடிவில் காட்சியளித்த சிவபெருமான், தேவியைத் திருமணம் செய்துகொண்டு கயிலாயத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாராம். அதனால் திருமணத் தடை உள்ளவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.