வித்யாகாரகனான புதனின் முதல் நட்சத்திரம் இது. ஜோதிட பிரகாசம், காலப் பிரகாசிகை, நாரத மகரிஷியின் கர்ணாம்ருதம் உள்ளிட்ட பல நூல்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் புகழ்கின்றன.

நட்சத்திர மாலை, ‘கடுகென நடக்க வல்லன், கன்னியர் மனத்தனாகும், அடவது வித்தை கற்கும், ஆயில்யமாளினானே...’ என்கிறது. அதாவது, வேகமாக நடப்பவர்களாகவும், இளகிய மனதுடையவர்களாகவும், கல்வி மீது நாட்டம் உள்ளவர்களாகவும், சரளமாகப் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று அர்த்தம்.

ஜாதக அலங்காரம், ‘செஞ்சொற் சாதுர்யன், சத்ரு நேயன், அன்னை, பிதாக்கினியன்...’ என்கிறது. அதாவது எதிரிகளையும் நேசிப்பவர்களாகவும், மாதா- பிதாவை வணங்குபவர்களாகவும், அழகிய கண்கள், பரந்த நெற்றி, சுருண்ட கேசம் ஆகியவை உள்ளவர்களாகவும் திகழ்வார்கள் என்று அர்த்தம். பிருகத்ஜாதகம், ‘பிறர் மனதை எளிதில் கவர்பவர்கள்’ என்று கூறுகிறது. யவன ஜாதகம், ‘ஸுரூபஸ் ஸுபக...’ எனும் பாடலில், இவர்கள் தோற்றப் பொலிவு உடையவர்கள் என்றும், ரகசியமாக சிலவற்றைச் செய்பவர்கள் என்றும் பலவாறாகக் கூறுகிறது.

ஆயில்ய நட்சத்திரத்துக்குப் புதனும் சந்திரனும் அதிபதிகள். இதில் பிறந்த நீங்கள் சமயோசித புத்தி உள்ளவர்கள். கனிவான பேச்சால் கல் மனதையும் கரைப்பவர்கள். மற்றவர்களின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பவர்கள்.

கலகலப்பான பேச்சால் அருகில் இருப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பீர்கள். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது என்று பலர் கூறுகின்றனர். பண்டை நூல்களில் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. ஆகவே இது உண்மையல்ல.

உடல் வலிமையும் மன வலிமையும் உங்களிடம் ஒருங்கே காணப்படும். மன வலிமை பெற்றவர்கள் ஆதலால், நாளை நடப்பதை இன்றே அறியும் நுண்ணிய ஆற்றல் உண்டு. பகை பல வந்தாலும் பதறாமல் இருப்பீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை எளிதில் ஏற்கமாட்டீர்கள். கண்களாலேயே பேசி, பல காரியங்களை சாதிக்கக் கூடியவர்கள். சில ஆண்கள், சற்றே பெண் சாயலை உடையவராக இருப்பார்கள். சற்றே சஞ்சல குணம் உண்டு. காடு, மலை, கடல் போன்ற இயற்கை வளங்களை அதிகம் ரசிப்பவர்கள் ஆதலால், அதுபோன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள். பயணப் பிரியர்களாக இருப்பீர்கள்.

பாலால் ஆன இனிப்பை அதிகம் விரும்பி உண்பீர்கள். திடீரென்று கார வகை உணவு களுக்கு மாறி சிறிது காலம் கழித்து மீண்டும் இனிப்பை ருசிப்பீர்கள். நொறுக்குத் தீனி விரும்பிகள். ஒரு காரியத்தைத் தொடங்கும் போதே, ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்று வேறொன்றிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

இளமையிலேயே சுக்கிர தசை வருவதால், 23, 24 வயதிலேயே சிலருக்குத் திருமண வாழ்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள், ஆதலால் மருந்து, மாத்திரைகள் தேவைப்படாது. பள்ளிப் பருவத்தில் வறுமை இருக்கும். இருந்தாலும் மத்திய வயதிலிருந்து யோகம் அடிக்கும். மனைவி, பிள்ளைகள் மீது பிரியமுடன் இருப்பீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டிய எல்லா வசதி, வாய்ப்புகளையும் செய்து கொடுப்பீர்கள். குடும்பத்துக்காக அதிகம் செலவுசெய்வீர்கள்.

வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்பவர்கள் நீங்கள்தான். வேலை செய்யும் நிறுவனத்தில் நேர்மை, நாணயத்துடனும் நிறுவனத்துக்கு விசுவாசமாகவும் நடந்துகொள்வீர்கள். அதனால் ஓய்வு பெறும் வரை ஓரே நிறுவனத்தில் பணியாற்றுவீர்கள். மனசாட்சிக்கு மீறி நடக்கவே மாட்டீர்கள். கெட்டவர்களுக்குத் துணை போகவே மாட்டீர்கள். தைரியம் மிக்கவர்கள். பெற்றோரிடம் அதிக பாசம் உடையவர்கள். பேச்சு வன்மையால் எந்தக் காரியத்தையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவீர்கள். எனினும், தகிடுதத்தங்களில் இறங்கிப் பணம் சம்பாதிக்கமாட்டீர்கள்.

படிக்கின்றபோதே கலைக் கழகம், விளையாட்டு ஆகியவை தொடர்பான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவீர்கள். தினசரி படிப்பது குறைவாக இருந்தாலும் தேர்வு நேரத்தில் குறைந்த நேரத்தில் நன்கு படித்து அதிக மதிப் பெண்களைப் பெற்று பெற்றோரை ஆச்சர்யப்படவைப்பீர்கள்.

உங்கள் நட்சத்திரக்காரர்களில் பலர் கல்லூரிப் பேராசிரியராகவும், ஆய்வுக் கூட அறிவியல் அறிஞராகவும், குழந்தை நல மருத்துவராகவும், காவல் அதிகாரியாகவும் விளங்குவார்கள். பேசும்போதெல்லாம் இடைச்செருகலாகப் பழமொழியைப் பயன்படுத்துவீர்கள். மற்றவர்களைப் போல் பேசியும் நடித்தும் காட்டுவதில் வல்லவர்கள். சிலநேரங்களில் சோம்பலாகவும் அலட்சியமாகவும் இருப்பீர்கள். மச்சக்காரன் என்று பிறர் நையாண்டி செய்யும் அளவுக்கு பல இடங்களில் மச்சம் இருக்கும். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துகள் வாங்குவீர்கள்; அந்தஸ்து பெருகும், அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். நீண்ட ஆயுள் உண்டு.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரத் தலங்கள் ஏதாவது ஒன்றில், சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.

முதல் பாதம் (புதன் + சந்திரன் + கோதண்ட குரு)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி, குரு பகவான். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் பேச்சில் வல்லவர்களாகவும் செயலில் துருதுருப்பானவர்களாகவும் இருப்பார்கள். பொன், பொருள் சேர்க்க விரும்புவார்கள். சிலரின் குரல், பெண் குரலின் சாயலில் இருக்கும்.

இவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் உயர்வான சிந்தனையும் நல்ல பண்பும் வெளிப்படும். பலவற்றிலும் வெற்றி காணும் இவர்களை நம்பி மற்றவர்கள் தங்களுடைய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எப்போதும் சந்தோஷமாக இருப்பதுடன் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடியவர்கள்.

குழந்தை பருவத்திலேயே இவர்களின் அறிவாற்றலைக் கண்டு அனைவரும் வியப்பார்கள். பல தொழில்களைச் செய்யும் அளவுக்கு இவர்களிடம் திறமை மண்டிக் கிடக்கும். பணியாள்களை அடிமையாக நடத்தாமல் தனக்குச் சமமாக நடத்துவார்கள். காதலில் இவர்களுக்கு விருப்பம் இருக்காது. இருந்தாலும் காதலிப்பார்கள். கல்யாணத்தையும் வருடக்கணக்கில் இழுத்தடிக்காமல் உடனே முடிப்பார்கள்.

பிள்ளைகளை சமுதாயம் மதிக்கும் அளவுக்கு நன்னடத்தையுடன் வளர்ப்பார்கள். நெருங்கிய உறவினர், நண்பர் ஆகியோரிடம்கூடக் கையேந்தாத தன்மானம் மிக்கவர்கள். 21 வயதிலிருந்து பெரிய முடிவுகள் எடுப்பார்கள். சவால்களில் வெற்றியடைவார்கள். 42 வயதில் திடீர் யோகம் உண்டாகும். 50 முதல் 55 வயதில் நாடாளும் யோகத்தை சிலர் அடைவார்கள். நிம்மதியான வாழ்வு உண்டு.

பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகருடாழ்வாரையும் அரங்கநாயகி சமேத ஸ்ரீஅரங்கநாதரையும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம் (புதன் + சந்திரன் + மகர சனி)

இரண்டாம் பாதத்துக்கு அதிபதி மகர சனி. இதில் பிறந்தவர்கள் பரம்பரை சொத்தையும் பாரம்பர்ய பண்பாட்டையும் பேணிக் காப்பார்கள். இப்படித்தான் வாழ வேண்டுமென்ற கொள்கையுடன் வாழ்வார்கள். தாய், தந்தையை அதிகம் நேசிப்பவர்கள்; அவர்களை இறுதிவரை கண் கலங்காமல் பாதுகாப்பார்கள்.

பழைய காதலை நினைத்து ஏங்கும் தருணமும் ஏற்படும். மனைவி, பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சியே இவர்களுக்கு முக்கியம். ஈகைக் குணம் இருக்கும். சிறுவயதில் பிடிவாதமாக இருப்பார்கள்.

கடினமான வேலையாக இருந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்கமாட்டார்கள். சிந்தனைச் சிற்பிகள். ஆகவே, எந்த நேரமும் கற்பனையில் மூழ்குவார்கள்.

இவர்கள் தொழிலாளியாக இருந்தால் முதலாளிக்கு ஏற்ற தொழிலாளியாகவும்; முதலாளியாக இருந்தால் தொழிலாளிக்கு ஏற்ற முதலாளியாகவும் இருப்பார்கள். சிலநேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதும் உண்டு.

மற்றவர்களின் வளர்ச்சியுடன் தங்களை ஒப்பிட்டு, `தன் திறமைக்குத் தனக்கு வாய்த்தது போதாது’ என்று வருந்துவார்கள். ஆடம்பர வாழ்க்கை இருக்காது. ஆகவே, அவமானப்படாமல் தன்மான வாழ்க்கை வாழ நினைப்பார்கள். சாந்த குணம் இருந்தாலும், எதிரிகளை முறியடிக்க சில நேரங்களில் அதர்ம வழிகளிலும் செல்வார்கள். சுக, துக்கங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்.

இவர்களில் பலர், 18 வயதிலிருந்தே குடும்பப் பாரத்தை சுமக்க வேண்டி வரும். 45 வயதிலிருந்து வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதித்துத் தொழிலதிபராவார்கள். சிலருக்கு அமைச்சர் அந்தஸ்தும் கிட்டும்.

பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வீற்றிருக்கும் கோதைநாச்சியார், ஸ்ரீவடபத்ரசாயி (ஸ்ரீரங்கமன்னார்) புஜங்கசயன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம் (புதன் + சந்திரன் + கும்ப சனி)

மூன்றாம் பாதத்துக்கு அதிபதி கும்ப சனி. இதில் பிறந்தவர்கள் அநியாயங்களைத் தட்டிக் கேட்பார்கள். சில செயல்களை முன்யோசனையின்றிச் செய்துவிட்டுப் பின்னால் அவதிப்படுவார்கள்.

இவர்களுக்கு நாசூக்காகப் பேசத் தெரியாது. குடும்பத்தில் இருப்பவர்களை வெளிப்படையாகப் புகழவே மாட்டார்கள். ஆனால் பாசத்தை உள்ளுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருப்பார்கள். பிள்ளைகளை அரும்பாடுபட்டு உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்தவுடன், பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். இவர்களைச் சுற்றி நல்ல நண்பர்களைக் காட்டிலும் நன்றி அல்லாதவர்களே அதிகம் புழங்குவார்கள். ஆன்மிகத்தில் இவர்களுக்கு நாட்டம் இருக்காது.

காரம், இனிப்பு இரண்டையும் அதிகம் விரும்புபவர்கள். ஆடையில் அதிக ஈடுபாடு இருக்காது. வெள்ளை, வெளிர் சாம்பல் நிறங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.

வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள். அதனால் மற்றவர்களின் தூற்றுதல்களுக்கு ஆளாவார்கள். சிறுவயதிலேயே ஏமாற்றங்களாலேயே வாழ்க்கை செல்லும்; ஆகையால் செல்வந்தராக உயர்ந்தாலும் கர்வம் கொள்ள மாட்டார்கள். சோம்பல் இவர்கள் கூடவே பிறந்தது. அதனால் அருமையான வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

27 வயதிலிருந்துதான் வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு வரும். 39 வயது முதல் எதையும் சாதிப்பவர்களாக இருப்பார்கள். அதன்பின், ஏற்றமான வாழ்வு இவர்களுக்கு உண்டு.

பரிகாரம்: திருப்புறம்பியத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீபிரளயம் காத்த பிள்ளையாரை, தேனாபிஷேகம் நடைபெறும் விநாயக சதுர்த்தி திருநாளில் தரிசித்து வழிபட்டு வருவது சிறப்பு.

நான்காம் பாதம் (புதன் + சந்திரன் + மீன குரு)

நான்காம் பாதத்துக்கு அதிபதி மீன குரு. இதில் பிறந்தவர்கள் பழமையிலும் புதுமை காணும் வல்லவர்கள். உடுத்தும் உடையிலிருந்து உள்ளங்கை வரைக்கும் எதிலும் தூய்மையையே விரும்புவார்கள்.

தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு தடபுடலாக செலவு செய்வார்களே தவிர, கொஞ்சமும் சேமித்து வைக்கமாட்டார்கள். குடும்பத்திலுள்ளவர்கள் சொல்லும் புத்திமதியை உடனே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

கடுஞ் சொற்களைப் பிரயோகிப்பார்கள். சிலர் புலம்பல் மன்னனாகவும் இருப்பார்கள். 12 வயது வரையில் இவர்களை ஏதேனும் ஒரு நோய் பாதித்துக்கொண்டே இருக்கும். 15 வயது முதல் அழகும் ஆரோக்கியமும் கூடும்.

யார், எவர் என்று சீர்தூக்காமல் இரக்கப்பட்டு ஏமாந்துவிடுவார்கள், ஆதலால் இவர்கள் தீயவர்களை அருகில் சேர்க்காமல் இருப்பது நல்லது. சிறுவயதிலேயே பெற்றோரை விட்டு விலக வேண்டி வரும். விடுதியில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை சிலருக்கு உருவாகும்.

இவர்களில் பலரும் ஆடிட்டிங், வங்கிப் பணி, மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் ஒன்றில் சிறந்து விளங்குவார்கள். 25 வயது முதல் தன்னம்பிக்கை பெருகும். 36 வயது முதல் எதிலும் வெற்றி உண்டு.

பரிகாரம்: திருவாரூருக்கு அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணியரை வணங்கி வழிபட்டு வருவதால், சகல நன்மைகளும் உண்டாகும்.

‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ஆயில்ய நட்சத்திரத்தில்...

கிணறு, குளம் வெட்டுதல், ஆயுதப் பயிற்சி, மந்திரப் பிரயோகம், உடற்பயிற்சி, கிணற்றைச் சுற்றிக் கட்டடம் கட்டுதல், நவகிரக சாந்தி ஆகியவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்தால் நன்மை உண்டாகும்.

பரிகார ஹோம மந்திரம்

இதஹும் ஸர்ப்பேப்யோ ஹவிரஸ்து ஜுஷ்டம்| ஆ ச்ரேஷா யேஷாமனுயந்தி சேத:||
யே அந்தரிக்ஷம் ப்ருதிவீம் க்ஷியந்தி|
தே ந: ஸர்ப்பாஸோ ஹவமாகமிஷ்ட்டா: |
யே ரோசநே ஸூர்யஸ்யாபி ஸர்ப்பா:| யே திவந் தேவீ மனு ஸஞ்சரந்தி | யேஷாமாச்ரேஷா அனுயந்தி காமம்|
தேப்ப்ய: ஸர்ப்பேப்ப்யோ மதுமஜ்ஜுஹோமி |

நட்சத்திர தேவதை : மூன்று கண்களையும் சிவந்தமேனியையும் கொண்ட ஆதிசேஷன்.

வடிவம் : பாம்பைப் போன்ற வளைந்து நெளிந்து திகழும் வடிவத்துடன் கூடிய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமைப்பு.

எழுத்துகள் : டி, டு, டே, டோ.

ஆளும் உறுப்புகள் : நுரையீரல், வயிறு, கல்லீரல்.

பார்வை : கீழ்நோக்கு.

பாகை : 106.40 - 120.00

நிறம் : சிவப்பு.

இருப்பிடம் : பொட்டல் காடு.

கணம் : ராட்சச கணம்.

குணம் : தீட்சண்யம்.

பறவை : கிச்சிலி.

மிருகம் : ஆண் பூனை.

மரம் : பாலுள்ள புன்னை மரம்.

மலர் : நீலக் குவளை.

நாடி : வாம பார்சுவ நாடி.

ஆகுதி : தயிர், எள்.

பஞ்சபூதம் : நீர்.

நைவேத்யம் : கொழுக்கட்டை.

தெய்வம் : ஆதிசேஷன்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே சர்ப்பராஜாய தீமஹி
தந்நோ அனந்த: ப்ரசோதயாத் ||

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 6.

அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் சிவப்பு, கரும் பச்சை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : திங்கள், புதன்.

அதிர்ஷ்ட ரத்தினம் : மரகதம்.

அதிர்ஷ்ட உலோகம் : பித்தளை.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

லட்சுமணன், சத்ருக்னன், தர்மபுத்திரர்.