புராண காலங்களில் மட்டுமல்ல, இந்தக் கலியுகத்திலும் அந்த ஆண்டவனின் அற்புதங்கள் நிகழும்; அவர்தம் பெருங்கருணை அடியார்களுக்குக் காப்பாகும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது ஒரு தலம். அதன் பெயர், நடுவக்குறிச்சி.

தண்பொருநையாம் தாமிபரணி பாய்ந்தோடும் நெல்லைச் சீமையில், பாளையங்கோட்டை நகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நடுவக்குறிச்சி. இங்கே புராதனமான திருக்கோயிலில் குடிகொண்டருளும் அருள்மிகு வீரராகவ பெருமாள், வியாபாரி ஒருவரின் வினை தீர சித்தாடல் புரிந்தவராம்.

இவர் அருளும் திருக்கோயில், பல வருடங்களாக சிதிலம் அடைந்து - நித்திய பூஜைகளும் தடைப்பட்டுக் கிடந்தது என்று நண்பர்கள் மூலம் தகவலறிந்து, அந்த ஆலயத்தைத் தரிசிக்க நேரில் சென்றோம். ஆலய மகிமையையும், பக்தனின் துயர் தீர்க்க சித்தாடல் புரிந்த இறைவனின் திருக் கதையையும் கேட்டதும், `இப்படியான கோயிலா இத்தனை காலம் சிதிலமுற்று கிடந்தது' என்ற எண்ணம் ஏற்பட்டு நம் மனதை பெரும் பாரமாக அழுத்தியது. சோகத்திலும் மனதுக்கு இதமான சுகம் தரும் வண்ணம் அமைந்தது, கோயிலின் திருப்பணிகள் தொடங்கிவிட்ட செய்தி!

நம்மிடம் ஆலயம் குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்டார், அன்பர் ஆர்.எஸ்.ரமணி. ‘`இந்தக் கோயிலில் அருள்புரியும் வீரராகவ பெருமாள்தான் எங்கள் குலதெய்வம். வேண்டும் வரமருளும் வரப்பிரசாதி. பக்தரின் துயர் தீர்க்க சித்தாடல் புரிந்த பெருமாள் இவர். ஒருமுறை பிரச்னம் பார்த்தபோதுதான் இந்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது.

சிதிலம் அடைந்துகிடந்த கோயிலுக்குப் பல தோஷங்கள் ஏற்பட்டுவிட்டதாகவும், அந்த தோஷங்களுக்கான பரிகாரங்களைச் செய்தபிறகே கோயில் திருப்பணிகளைத் தொடங்கவேண்டும் என்றும் பிரச்னம் மூலம் தெரியவந்தது. அதன்படி சில பரிகாரங்களையும், சுதர்சன ஹோமம் முதலானவற்றையும் செய்தபிறகே திருப்பணி களைத் தொடங்கினோம்’’ என்றவர், பெருமாளின் சித்தாடல் குறித்த செவிவழித் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

‘`நூறு வருடங்களுக்குமுன், இந்தப் பகுதியில் வசித்த வியாபாரி ஒருவர், இங்கிருந்து கப்பலில் சரக்குகளை ஏற்றிச்சென்று வெளிநாடுகளில் விற்று, அங்கிருந்து எண்ணெய் பீப்பாய்களை வாங்கி வந்து இங்கே விற்பனை செய்துவந்தார். ஒரு கட்டத்தில் வியாபாரம் நொடித்துப்போய் அனைத்து சொத்துகளையும் இழக்க நேரிட்டது. கடைசியாகத் தன்னிடம் எஞ்சியிருந்த சொத்து களை விற்று வியாபாரத்தைத் தொடர முடிவு செய்தார் வியாபாரி. அதன்படி ஏற்பாடுகள் செய்து பயணத்துக்குத் தயாரானவர், முன்னதாக இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்தார். தனது கடைசி முயற்சி வெற்றி பெற்று தனக்கு லாபம் கிடைத்தால், அதில் ஒரு பகுதியைக் கொண்டு கோயிலைப் பிரமாண்டமாக எழுப்புவதாக பெருமாளிடம் வேண்டிக்கொண்டார்.

ஆனால், அவருடைய நேரமோ அல்லது அவரது பக்திக்கு பெருமாள் வைத்த சோதனையோ தெரியாது... அந்த முறை அவர் கொண்டு வந்த எண்ணெய் பீப்பாய்களை வாங்க ஆளில்லை. வாங்கிய விலைக்குக்கூட விற்பனை செய்யமுடியாத நிலை. துக்கம் மேலிட்ட நிலையில், பெருமாளைப் பிரார்த்தனை செய்தபடியே கண்ணயர்ந்தார் வியாபாரி.

அவரது கனவில் தோன்றிய வீரராகவ பெருமாள், அவரை எண்ணெய் கிடங்குக்குச் சென்று பார்க்கும்படி உத்தரவிட்டார். அதன்படி விடிந்தும் விடியாத வேளையில் கிடங்குக்குச் சென்று பார்த்த வியாபாரி, பெருமாளின் கருணைத் திறம் கண்டு வியந்து நின்றார். ஆம்! அவர் வாங்கி வந்த பீப்பாய்களில் இருந்த எண்ணெய் முழுவதும் நெய்யாக மாறிவிட்டதாம். அப்போது நெய்க்கு மிகுந்த தேவை இருந்ததால், அவர் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு விற்பனை ஆனது. இழந்த சொத்துகளை மீட்டதுடன், தான் பிரார்த்தனை செய்துகொண்டபடியே கோயிலைப் பிரமாண்டமாக எழுப்பினார் வியாபாரி’’ என்று சிலிர்ப்புடன் விவரித்த ரமணியிடம் திருப்பணிகள் குறித்து கேட்டோம்.

‘‘தற்போது ஒரு கமிட்டி ஏற்படுத்தி, திருப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். ஊர்மக்களும் பரிபூரண ஒத்துழைப்பு தருகின்றனர். விரைவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் சம்ப்ரோக்ஷணம் நடைபெறவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். வியாபாரிக்கு நல்லருள் புரிந்த பெருமாள், எங்கள் திருப்பணிகள் நல்லபடி பூர்த்தியடைந்து சம்ப்ரோக்ஷணம் நடைபெறவும், தொடர்ந்து நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறவும் அருள்புரிவார் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

அன்பர் ரமணி மற்றும் நடுவக்குறிச்சி அன்பர்களின் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். அவர்களின் அந்த இறைப்பணி இனிதே நிறைவேறிட, நாமும் தோள்கொடுப்போம்; நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்வோம். வியாபாரியின் துயரைக் களைந்து அருள்பாலித்த வீரராகவ பெருமாள் நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்த்துவார். நண்பர்களோடு திருப்பணிகளில் இணைவோம்; வீரராகவ பெருமாளின் திருவருளையும், ‘எக்கணமும் அகலகில்லேன்’ என்ற உறுதியுடன் பெருமாளின் திருமார் பில் உறையும் திருமகளின் அருட்கடாட்சத்தையும் ஒருங்கே பெற்று வாழ்வில் சிறப்போம்.

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

எப்படிச் செல்வது..?

திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரிலிருந்து சீவலப்பேரி செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நடுவக்குறிச்சி.பாளையங்கோட்டையில் இருந்து பேருந்து வசதி உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:

A/c Name: SUBAM,
A/c.No: 800220110000303
Bank Name:
Bank of India,
Branch: Mylapore,
IFSC No: BKID0008002

மேலும் விவரங்களுக்கு:

ஆர்.எஸ்.ரமணி,
செல்: 07667770001