தை மாதத்தை மகர மாதம் என்பார்கள். சூரியதேவனின் வடதிசை பயணம் தொடங்கும் உத்தராயனப் புண்ணியக் காலத்தின் ஆரம்பம் தை மாதம். ஆத்மகாரகனான சூரியனை வழிபட உகந்த மாதமும்கூட. ஆகவே, அந்த மாதத்தின் முதல் நாள் ஆதவனைப் போற்றும் பொங்கல் திருநாளாகத் திகழ்கிறது.

காலச் சக்கரத்தில் மகர ராசிக்குள் சூரியக்கடவுள் பிரவேசிக்கும் இந்தப் புண்ணிய மாதத்தில், சூரியனை வழிபடுவதாலும், சூரியன் வழிபட்ட - வழிபட்டு வரும் திருக்கோயில்களை தரிசிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்; நம்முடைய நல்ல விருப்பங்கள் யாவும் நிறைவேறும் என்கின்றன ஞானநூல்கள்.

சூரிய திருத்தலங்களோடு, தை மாத தரிசனத்துக்குரிய பிரத்யேகமான வேறுசில கோயில்களும் உண்டு. அந்த அற்புத க்ஷேத்திரங்கள் குறித்தும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்...

சூரியக் கோட்டம்!

சூரியனுக்குத் தனியாக ஆலயம் அமைக்கும் வழக்கம் தற்போது இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் சூரியன், சந்திரனுக்குத் தனித் தனியே கோயில்கள் இருந்ததுபற்றிய குறிப்புகள் உண்டு. பூம்புகாரில் இருந்த சூரியனின் ஆலயத்தை `உச்சிக்கிழான் கோட்டம்’ என அழகுத் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றத் தலங் கள் தமிழகத்தில் இருவகையான உள்ளன. முதலாவது வகை - சூரியன், தேவ வடிவில் எழுந்தருளி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்கள். அவை: மங்கலக்குடி, பருதிநியமம், திருநாகேஸ்வரம்.

இரண்டாவது வகை - ஆண்டில் குறுப்பிட்ட சில நாள்களில், சூரிய பகவான் தன் ஒளிக்கிரணங்களால் இறைத் திருமேனியைத் தழுவி வழிபடும் ஆலயங்கள் ஆகும். இவ்வகை ஆலயங்கள் பலவுண்டு.

திருமங்கலக்குடி

சூரியன் வழிபட்ட ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது மங்கலக்குடி அருள்மிகு பிராணவரதேஸ்வரர் ஆலயம். மங்கலனாகிய சூரியபகவான் வழிபட்டதால் இந்த ஊர் மங்கலக்குடி என்றானது.

இங்கு சூரியனும் மற்றுமுள்ள எட்டு கிரகங்களும் வழிபட்டு அருள் பெற்றதாக அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. காலவ ரிஷியின் கிரக தோஷங்களை நவகிரகங்கள் தாமே முன்னின்று தீர்த்ததால், அவர்கள் காலதேவனின் சாபத்தைப் பெற்றனராம். அதனால், பிணிக்கு ஆளான நவகிரகங்கள் மங்கலக்குடிக்கு வந்து ஈசனை வழிபட்டு நிவர்த்தி பெற்றன.

சூரியனால் வழிபடப்பெற்ற மங்கலக்குடி ஈசன், பிராண வரதேஸ்வரர் என்றும் அம்பிகை மங்கல நாயகி என்றும் வணங்கப்படுகின்றனர். மங்கலக்குடி அருகேதான் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. மங்கலக்குடிக்கு வந்து தரிசித்து வழிபட்ட பிறகே, சூரியனார் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும் என்பது நியதியாகும்.

ஆதித்ய அபயப் பிரதாம்பிகை!

ஒருமுறை, தமது கடமையில் இருந்து தவறிய சூரியபகவான் மீது ஈசன் கோபம் கொண்டார். ஈசனின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரியன் அம்பிகையைச் சரண் அடைந்தார். சூரியனைப் பாதுகாத்து அபயம் அளித்த அம்பிகை, திருநீடூர் எனும் திருத்தலத்தில் ஆதித்ய அபயப் பிரதாம்பிகை என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திருநீடூர். தேவாரப்பதிகம் பெற்ற இந்த ஆலயத்தில் ஈசன் சோமநாதேஸ்வரராக அருள்கிறார். இங்கு வந்து வழிபட்டால் சூரியனின் நல்லாசி பெறலாம்; அவரின் திருவருளால் சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள்.

ஆதித்ய சப்த திருத்தலங்கள்

சூரியன் வழிபட்டு பேறு பெற்றத் தலங்கள் ஏழு என்று திருவேதிக்குடி தலபுராணப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம்
பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி
பொற்புற வார்ப்பனங் காட்டூர் நெல்லிக் காவேழும்
பொற்பரிதி பூசனை செய்யூர்.

இப்பாடல் குறிப்பிடும் தலங்கள்: 1.கண்டியூர், 2.வேதிக்குடி, 3.கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், 4.பரிதிநியமம் பருத்தியப்பர் கோயில், 5.திருத்தெளிச்சேரி, 6.பனங்காட்டூர், 7. திருநெல்லிக்கா.

கீழச்சூரியமூலை!

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது கீழச்சூரியமூலை. மிகச் சிறிய ஊர். கோயிலும் மிகச் சிறியதுதான் எனினும் சாந்நித்தியம் நிறைந்தது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழைமையான தலம் இது. நவகிரக தலங்களில் ஒன்றான சூரியனார்கோயில் தலத்தின் ஈசான்ய பாகத்தில், அதாவது கீழ் மூலையில் இருப்பதால்தான், இந்த ஊருக்கு கீழச் சூரிய மூலை என்றே பெயர் வந்தது.

சூரியனுக்கு மூலாதாரச் சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார்கோயிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில்தான் முழுச்சக்தியையும் பெற்றாராம். இங்கே சூரியன் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சூட்சும வடிவில் இறைவனை வழிபடுவதாக நம்பிக்கை.

இக்கோயிலில், கிழக்கு பார்த்த சுவாமி சந்நிதி. உதிக்கின்ற சூரியனை மறைக்கும் என்பதால் ராஜகோபுரம் இல்லை என்பது ஐதீகம். கிழக்குப் பார்த்த சந்நிதியில் அருள்கிறார் சூரியகோடீஸ்வரர். தெற்கு நோக்கிய சந்நிதியில் பவளக்கொடி அம்பாள் அருள்பாலிக்கிறாள். இந்தச் சந்நிதிகள் அமைந்த மண்டபத்திலேயே பைரவரும், சூரியனும் எழுந்தருளி இருக்கிறார்கள். பித்ருக்களின் சாபத்தை நிவர்த்திசெய்யும் தலமாக இது விளங்குகிறது. அது மட்டுமல்லாமல், சூரியன் வணங்கும் இடம் என்பதால் கண் நோய்கள், கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் இருக்கிறது.

காசி தரிசனம்!

சூரியன் சிவபூஜை செய்த வடஇந்தியத் தலங்களில் முதன்மையானது காசி மாநகரம். இங்குப் பன்னிரண்டு இடங்களில் பன்னிரண்டு ஆதித்யர்களாக சூரிய பகவான் வழிபட்டார் என காசிகண்டம் என்ற நூல் குறிப்பிடுகிறது.

அவை, லோலார்க்கர், உத்ரார்க்கர், ஸம்பாதித்யன், திரௌபதி ஆதித்யன், மயூகாதித்யன், கஷோல்காதித்யர், அருணாதித்யர், விருத்தாதித்யர், கேசவாதித்யர், விமலாதித்யர், கங்காதித்யர், யம ஆதித்யர் எனப்படும். இவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வழிபட வேண்டும் என்பார்கள்.

திருக்கழுக்குன்றம்

ஒருமுறை பன்னிரு ஆதித்யர்களுக்கும் இடையே, தங்களில் யார் உலகில் பணி செய்வது என்று போட்டிப்போட்டுக் கொண்டனராம். பிரம்ம தேவன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்துக்கு ஒருவராகப் பணிசெய்யும்படி பணித்தாராம். அப்படி, அவர்கள் பணிசெய்யும் காலத்தில் மந்தேகர் முதலான அசுரர்களால் தடங்கல்கள் ஏற்பட்டன.

அவர்கள் மீண்டும் பிரம்மனைச் சரணடைந்தனர். அவரது அறிவுரைப்படி, பூலோகத்தில் உருத்திரக்கோடியாகிய திருக்கழுக்குன்றம் தலத்தை அடைந்து சிவனாரை வழிபட்டு, தடைகள் நீங்கப் பெற்றனர். இதன் காரணமாக பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி ஆகிய சிறப்புப் பெயர்களோடு திகழ்கிறது திருக்கழுக்குன்றம். சூரியனுக்கு உகந்த தைமாதத்தில், பன்னிரு ஆதித்யரும் வழிபட திருக்கழுக்குன்றம் ஈசனை நாமும் வழிபட்டு வரம்பெற்று வருவோம்.

கற்பகமே அற்புதமே!

கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடிய கருணை மனம் கொண்டவள் கற்பகம். மயிலுருவாக வந்து மகேசனைக் கரம் பிடித்த அற்புதத் தலம் மயிலாப்பூர். தாய்க்குத் தாயாக இருப்பவள்; மஞ்சள் தாலியைக் காப்பாற்றிக் கொடுப்பவள். இப்படி இவளின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம். மதுரையைப் போலவே மயிலையிலும் கற்பகத்தை தரிசித்த பின்னரே கபாலீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பார்கள். அவ்வளவு சிறப்பு இந்த அம்பிகைக்கு!

அடியார்களின் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தும் கற்பகாம்பிகை அருளும் மயிலை, விழாக்களால் புகழ்பெற்றது. அவற்றில் அடியார்கள் அவசியம் தரிசிக்கவேண்டியது தை மாத லட்சார்ச்சனை வைபவம்.ஆயிரமாயிரம் திருநாமங்கள் கொண்டு ஆயிரமாயிரம் ஆலயங் களில் குடிகொண்ட சக்திக்கு லட்சார்ச்சனை நடக்கும் மாதமிது. அதுமட்டுமா? தை மாதத்தில் தைப்பூச தெப்போற்சவத் திருவிழா, அம்பிகை ஊஞ்சல் விழா என அமர்க்களப்படும் மாதமும்கூட. தைப்பூசத்தையொட்டி, மூன்று நாள்களில் கபாலீஸ்வரரோடு அம்பிகை திருக்குள தெப்பத்தில் மிதந்து வருவாள். அடடா... மணிக்குளத்தில், மகேசனுடன் அம்மை அமர்ந்திருக்க மிதந்து வரும் தெப்பம், மானிடரைக் கரை சேர்க்கும் தோணி என செப்பும். அடியார்கள் அவசியம் இந்த வைபவங்களை தரிசித்து வாருங்கள்; அகிலநாயகியாம் கற்பகத்தின் பேரருளைப் பெற்று மகிழுங்கள்.

சூரியன் அருள்பெற... சப்தமி விரதம்!

ஞாயிற்றுக்கிழமையோடு சஷ்டி திதி பொருந்திவந்தால், அதை பானு சஷ்டி என்பார்கள். அதேபோல், சப்தமி திதி பொருந்தி வந்தால் அதை பானுசப்தமி என்பார்கள். இந்த நாள்களில் சூரியனை வணங்கி வழிபட்டால், பிணிகள் இல்லாத வாழ்க்கையைப் பெறலாம்; இம்மைக்கும் மறுமைக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பர்.

இறையின் ஞானசக்தி அருள்சூரியனாக வெளிப்பட்டது சப்தமியில்தான். அவ்வாறு வெளிப்பட்ட சூரியனின் ஆற்றல் அளவுக்கதிகமாக இருந்ததாம். விஸ்வகர்மா அதைச் செம்மைப்படுத்தியதும் ஒரு சப்தமியில்தான். இந்த நாளில் விரதமிருந்து சூரியனையும் சிவபெருமானையும் வழிபடுபவர்கள், நோயற்ற வாழ்வையும், பெருஞ்செல்வத்தையும் அடைவார்கள்.

சூரிய ரதம்!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது, அருள்மிகு கூடலழகர் திருக்கோயில். இந்தக் கோயிலின் அலுவலக அறைக்கு இடப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சூரிய ரதம் விசேஷமானது.

இந்த ரதத்தின் மத்தியில் அறுகோண வடிவ கட்டத்தில் அமர்ந்து அருள்கிறார் சூரியபகவான். அறுகோண மூலைகளும் வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, சிசிர ருது ஆகிய 6 ருதுக்களைக் குறிக்கும் (இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது). அடுத்து, பூ புவ ஸுவ எனும் வியாஹ்ருதிகளைக் குறிக்கும் 3 வட்டங்கள். தொடர்ந்து சூரிய பகவானை இடமிருந்து வலமாகச் சூழ்ந்தபடி 12 ராசிகள். இவை, 12 மாதங்களைக் குறிக்குமாம்!

ஒரு சக்கரத்துடன் கூடிய இந்த ரதத்தை அருணன் செலுத்த, ரதத்தின் இருபுறமும் நாகங்கள். இவை, இரவையும் பகலையும் குறிப்பனவாம். உதய காலத்தில் மட்டுமே அருணன் காட்சி புலப்படுமாம். இத்தகைய எழில்மிகு ரதத்துடன் கூடிய சூரிய நாராயணரைத் தரிசித்து வழிபட களத்திர தோஷம், சர்ப்ப தோஷம் முதலான தோஷங்கள் நீங்கும்; தேக ஆரோக்கியம் பெருகும் என்கிறார்கள்.