Published:Updated:

மாங்காடு காமாட்சியம்மன், வைகுண்டப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா!

மாங்காடு காமாட்சியம்மன், வைகுண்டப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா!
மாங்காடு காமாட்சியம்மன், வைகுண்டப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா!

சென்னையை அடுத்த மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தெப்பத் திருவிழா ஜனவரி 20-ம் தேதி தொடங்கி 22 வரை நடைபெற உள்ளது.

காமாட்சி அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னித் தவம் இருந்த இடம் இது. இங்கு இருக்கும் ஸ்ரீசக்கரம் மிகவும் சக்திவாய்ந்ததெனக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இங்கு 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா சிறப்புப் பெற்றது. சித்திரைத் திருவிழாபோல் எல்லாப் பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.


வரும் தைப் பூசத்தை முன்னிட்டு இங்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 20.1.2019 அன்று இரவு 7.30 மணிக்குக் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருள்வார். 21.1.2019 அன்று தைப்பூசத் திருநாளில் ஸ்ரீவள்ளி தேவ சேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். 22.1.2019 அன்று ஸ்ரீ வைகுண்டப் பெருமாளும் காமாட்சி அம்மனும் தனித்தனியாகத் தெப்பத்தில் எழுந்தருள்வார்கள். மூன்று நாள்களும் காமாட்சி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும்.