Published:Updated:

திருச்செந்தூரில் தைப்பூசம் - அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!  

திருச்செந்தூரில் தைப்பூச விழாவையொட்டி 21-ம் தேதி அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது.  அறுபடை வீடுகளில்  ஒன்றான இக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் தைப்பூசம்  சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூரில் தைப்பூசம் - அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!  
திருச்செந்தூரில் தைப்பூசம் - அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!  

றுபடை வீடுகளில், முருகப்பெருமான் சூரபத்மனை சம்காரம் செய்த திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்தது. இங்கு தைப்பூசம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா வரும் 21-ம் தேதி  நடைபெற உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பக்தர்கள் தைப்பூசத்தையொட்டி விரதமிருந்து பாத யாத்திரையாகத் திருச்செந்தூர் செல்வது வழக்கம். இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூசத்தன்று தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் பா.பாரதி கூறுகையில், 

``21-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்; 8.30 மணிக்கு தீர்த்தவாரி; 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் ஆகியன நடைபெறும். தொடர்ந்து சுவாமி வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்விக்கப்பட்டுப் பின் தங்கமயில் வாகனத்தில் திருக்கோயிலை அடைவார். 

அதேபோல வரும் 25-ம் தேதி  உத்திர வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இங்குள்ள மூலவர் தை மாத உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இதனால் ஆண்டுதோறும் தை மாதம் வரும் உத்திர நட்சத்திர தினத்தில் இந்த அபிஷேக ஆராதனை மூலவருக்கு நடைபெறுவது வழக்கமாகும்.

அன்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 8 மணிக்கு  விமான கும்பாபிஷேகமும் நடைபெறும். காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்ஷை  தீபாராதனை சேவையும் நடைபெறும். இரவில் மூலவருக்கு புஷ்பாஞ்சலி சேவை நடைபெறும். இந்த வைபவத்தில் பக்தர்கள் திரளான அளவில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற வேண்டுகிறோம்"  எனத் தெரிவித்தார்.