Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...

திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...

பின்னத்தூரில் வெளிப்பட்ட அருள்வாக்கு!

திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...

பின்னத்தூரில் வெளிப்பட்ட அருள்வாக்கு!

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...
திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், வாக்கினில் பொய்க்கலப்பில்லாத புண்ணியர். அவரின் வாக்குகள் அத்தனையும் சத்தியமானவை. இன்றைக்கும் அவரின் பாடல்கள், அவற்றைப் பாராயணம் செய்யும் பக்தர்களை ரட்சித்து வருகின்றன.

நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்
கான் பாடு வண்டறையும் கழுகுமலை முருகா
தேன் பாகு கண்டென வந்து என்னுள் நனி சேராய்
மேன் பாடு மல்குகந்த வெற்பிருக்கும் வேளே


- என்று ஸ்ரசுவாமிகள் முருகப்பெருமானிடம் வேண்டிக்கொள்கிறார். தன்னுடையப் பாடல்களைப் பாடும் அடியவர்களுக்கு நல்லருள் செய்யும்படி பிரார்த்திக்கிறார் அவர். அதன்படியே, அவருடைய பாடல்களைப் பாராயணம் செய்து அன்பர்கள் பலரும் பலன் அடைவது, இன்றும் பிரத்தியட்சமாக நடந்துவருகிறது.

ஸ்ரீசுவாமிகளின் வாக்குகளில் மிகவும் பிரபல மானது, ‘எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல்’ என்பது. இதுவும் முருகப்பெருமானிடம் அவர் வேண்டுகோளாக வைத்ததே.

இதோ அந்தப் பாடல்:

எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல்              
கனைத் தண்டை சிலம்பவரும் கழுகுமலை முருகா
தினைத் தனையு நீங்காத திருவில் எனை வையாய்
நினைத்த வரம் நல்குகந்த கிரி்க்கருணை நிதியே...


இதன்படியே நடந்த நிகழ்வுகள் பலவுண்டு. அவற்றில், ஸ்ரீசுவாமிகளின் வாக்கு சத்தியவாக்கு என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...

சிதம்பரம் தலத்துக்குக் கிழக்கில் உள்ளது பின்னத்தூர். ஒருமுறை அந்த ஊருக்குச் சென்ற ஸ்ரீசுவாமிகள், அங்கே சிவநிஷ்டையில் இருந்தார்.

அவ்வூர்வாசிகள் அவரை தரிசிக்க வந்தனர். அவர்களில் சிலர், “சுவாமி! இந்த ஊர் பின்னத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் ஏன் வந்தது என்பது தெரியவில்லை. தாங்கள்தான் விளக்கிக் கூறியருள வேண்டும்” என வேண்டிக்கொண்டார்கள்.

ஸ்ரீசுவாமிகள் யோசிக்கவில்லை. உடனடியாகப் பதிலுரைத்தார்.

“இந்தத் தலம் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் பௌத்தர்களுடன் வாதிட்டு, ஈழ அரசனின் மகளான ஊமைப் பெண்ணைப் பேசும்படிச் செய்து, பௌத்தர்களின் கர்வத்தைப் பின்னப்படுத்திய தலம் எனும் பெருமையைக்கொண்டது. ஆகவேதான், `பின்னத்தூர்’ எனப் பெயர் பெற்றது” என்றார்.

அவ்வூரில், புராதனமான சிவ ஆலயம் ஒன்று பழுதடைந்து கிடந்தது. வ. இரத்தினம் பிள்ளை என்ற அன்பர், அந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்ய முனைந்தார். அத்துடன் அவர், ஸ்ரீசுவாமிகள் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பதையும் அறிய விரும்பினார்.

ஆகவே, ஜோதிடத்தில் சிறந்த அரங்கசாமிப் பிள்ளையைச் சந்திக்கச் சென்றார். அன்றை தினம் குரோதி வருடம், மாசி மாதம், ஒன்பதாம் நாள், திங்கள்கிழமை.

ஜோதிடர் அரங்கசாமிப் பிள்ளையிடம், “என் மனதில் இருப்பதை அறிந்து நீங்கள் பதில் கூற வேண்டும்” என வேண்டிக்கொண்டார் இரத்தினம் பிள்ளை. அவர் பேசியது இவ்வளவுதான்.

அந்த ஜோதிடரோ தெய்வ அருள் கைகூடியவர். ஆகவே, ஒருசில விநாடிகளிலேயே காகிதம் ஒன்றில் விவரத்தை எழுதியே கொடுத்துவிட்டார்.

படித்துப்பார்த்த திருப்பணிக்காரரான இரத்தினம்பிள்ளை வியந்துபோனார். அந்தக் காகிதத்தில் இருந்த வாசகங்கள் இவைதாம்...

திருவருள் செல்வர்கள்! - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...

‘வ. இரத்தினசாமி, ஆலயச் சிந்தை, சீரண ஸ்தலம், புது திருப்பணி, குளம் வடக்கில், விக்கிரகப் புதையல் பின் அகப்படும், திருவாதவூரர் ஈழதேசப் பெண்ணைப் பேசுவித்த மகாத்மியம், பின்னஞ்செய்ததால் பின்னத்தூர் என வழங்கல்.’

இரத்தினம்பிள்ளை சிலிர்த்துப் போனார். அத்துடன் ஸ்ரீசுவாமிகள் சத்தியசந்தர்; அவர் வாக்கு சத்தியம் என்பதையும் உணர்ந்தார்!

ஸ்ரீசுவாமிகள் பின்னத்தூரில் தங்கியிருந்த வேளையில்தான்... சிவதூஷணை பெருகியதன் விளைவாக சிலர் அவரை வாதுக்கு அழைத்தனர். ஸ்ரீசுவாமிகள் வாதில் பெற்றார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவருக்குத் தீங்குகள் பல இழைத்தனர் பகைவர்கள். அவர்கள் அவமானப்படும் வகையிலும் ஸ்ரீசுவாமிகள், ‘சைவசமய சரபம்’ முதலான அற்புதமான நூல்கள் எழுதிய நிகழ்வுகளெல்லாம் நடைபெற்றன.

ஸ்ரீசுவாமிகளின் மகிமைகளில் நாம் கண்டது, எறும்பின் வாயில் உள்ள சர்க்கரைத்துளி அளவுதான்! தொடக்கத்தில் (சென்ற இதழில்) ஒரு பெண்மணிக்கு, ஸ்ரீசுவாமிகள் நோய் தீர்த்த வரலாறு ஒன்றைப் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்மணி, அடியேனின் மனைவியே.

இமவான் பேரனாம் முருகப் பெருமானிடம் நமக்காக வேண்டிய ஸ்ரீமத் பாம்பன்சுவாமிகள் இன்றும், திருவான்மியூர் மயூரபுர ஆலயத்தில், சமாதிக்கோயிலில் இருந்தபடி அருள்மழை பொழிந்து வருகிறார்.

நீங்களும் ஒருமுறை அந்தத் திருக்கோயிலுக்குச் சென்று குருவருளைப் பெறுவதுடன், முருகப் பெருமானின் திருவருளையும் பெற்று வாருங்கள். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளை தரிசிக்கும் விநாடியிலேயே உங்கள் பிரச்னைகள் தீர்வதற்கான மார்க்கங்கள் புலப்படுவதை உணர்வீர்கள்.

- திருவருள் பெருகும்...

 சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன்  -  படங்கள்: வி.நாகமணி