தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!

நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!

நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!

தழ் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட, நாரதரின் வருகைக்கா கவே காத்திருந்தோம். முன்னிரவுப் பொழுதில் வந்துசேர்ந்தார் நாரதர். வந்ததும் வராததுமாக ஒரு கேள்வியை வீசினார்.

நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!

‘‘கோயில்களில் கல்வெட்டுகள் எதற்காகப் பதிக்கிறார்கள் தெரியுமா?’’

தேநீரைக் கோப்பைகளில் நிறைத்து, கோப்பைகளில் ஒன்றை நாரதரிடம் நீட்டியபடி பதில் சொன்னோம்:

‘`இது என்ன கேள்வி? கோயில்களின் வரலாறு, கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் கொடுத்த மானியங்கள் போன்ற விவரங்களை பிற்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கல்வெட்டுகள் பதிப்பது வழக்கம். இதிலென்ன சந்தேகம் உமக்கு?’’

நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!தேநீரைப் பருகியபடியே நாரதர் தொடர்ந்தார்.

‘`நீர் சொல்வது சரிதான். அதுமட்டுமல்லாமல், கல்வெட்டுகள் மூலம்தான் குறிப்பிட்ட கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள்-சொத்து கள் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தச் சொத்து களை வேறு எவரும் அபகரித்துக்கொள்ளாமல் இருக்கவும் கல்வெட்டுகள் துணைசெய்யும்... இல்லையா?’’

‘‘ஆமாம்... ஆமாம்...’’ - தலையாட்டி ஆமோதித்தோம்.

‘‘ஆனால், இதுபோன்ற கல்வெட்டுகளின் அருமை தெரியாமல், அவற் றைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் ஒரு கோயிலில்...’’

‘‘ஆமாம்... சென்றமுறை வந்தபோதே முன்னோட்டம் கொடுத்தீரே... அதுபற்றி விசாரித்துவிட்டீரா... முழுத் தகவலையும் சொல்லும்’’

நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!

‘`என் சோர்ஸ் ஒருவர் தெரிவித்த தகவலை அப்படியே சொல்கிறேன் கேளும்...’’ என்ற நாரதர் கல்வெட்டு கதையை விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

``நாமக்கல் மாவட்டம், மூனுசாவடி என்ற ஊரில் அமைந்திருக்கிறது ஒரு சிவாலயம். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயமாம் அது. தற்போது, அந்தக் கோயில் சிதிலமடைந்திருந்தாலும், ஒரு காலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்திருக்கவேண்டும். அந்தக் கோயிலுக்கான கல்வெட்டுகள்தான், ஏகே சமுத்திரம் என்ற ஊரிலுள்ள ஒரு விநாயகர் கோயிலில் வேலியாகவும் பின்னர் படிக்கட்டுகளாகவும் பயன்படுத்தப்பட்டதாம்’’

‘`இப்போதும் அங்கேயே படிக்கட்டுகளாகத்தான் கிடக்கின்றனவா?’’

நமது குறுக்கீட்டைப் பொறுக்காத நாரதர், ‘`அவசரப்படாதீர். முழுவதையும் சொல்லி முடித்துவிடுகிறேன்...’’ என்றபடியே பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘இதுகுறித்து பாச்சல் என்ற ஊரைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் தனசேகரனிடம் பேசினேன். ‘நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான்.விஷயம் அறிந்து நானும் அந்தக் கோயிலுக்குச் சென்று பார்த்தேன். அதன்பிறகு, தமிழாசிரியரும் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படிப்பவருமான அன்பர் துரைசாமியை அழைத்துச் சென்று காட்டினேன். அவர்தான், இந்தக் கல்வெட்டுகள் மூனுசாவடி பரமேஸ்வரன் கோயில் கல்வெட்டுகள் என்று தெரிவித்தார்’ என்றார் தனசேகரன். கல்வெட்டுகளின் சிறப்பு பற்றி அவர் எடுத்துக்கூறியதும், விநாயகர் கோயிலின் நிர்வாகிகள் கல்வெட்டு களை எடுத்து ஓரமாகப் போட்டுவைத்திருக்கிறார்களாம்’’ என்ற நாரதர், இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

‘`தனசேகரன் குறிப்பிட்ட அன்பர் துரைசாமியையும் சந்தித்தேன்.அவர், ‘ராஜேந்திர சோழன் ஆண்டு வந்த இந்தப் பகுதியில், 1025-ம் வருடத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டில், ‘உலகளத்தான் சதுர்வேதி மங்கலத்து திருவாச்ராமமுடைய பரமேச்வரருக்கு, இவ்வூர் சபையாரிடம் இரு கழஞ்சு பொன் கொடுத்து வாங்கியது’ என்று ஒரு கல்வெட்டில் விவரம் உள்ளது. அதேபோல் 1034-ஆம் ஆண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டில், முக்கழஞ்சு பொன் கொடுத்து, கிராம சபையாரிடம் மேலும் சிறிது நிலம் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்வெட்டுகளே, மூனுசாவடி பரமேஸ்வரன் கோயில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக உள்ளன.

தற்போது, அந்தச் சிவாலயத்தின் விமானத்தில் கலசங்கள் இல்லை; வெறும் கம்பிகள் மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கின்றன. அதேபோல் தெய்வச் சிலைகளும் இல்லை. ஒருசாரார், இந்தக் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டு, பின்னர் கடும் போர்களின் விளைவினால் பணிகள் தடைப்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்’ எனப் பகிர்ந்துகொண்டார்.’’

கல்வெட்டு தகவல்களை விவரித்த நாரதர், சில கணங்கள் பேச்சை நிறுத்தி ஏதோ யோசித்தவர், பிறகு, அவராகவே தொடர்ந்தார்...

நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!

‘‘அவர்கள் கூறுவதுபோல், அந்தக் காலத்தில் கோயில்பணிகள் ஆரம்ப நிலையிலேயே தடைப்பட்டிருக்கலாம் என்றால், கல்வெட்டில் உள்ள தகவல்களை என்னவென்பது? எது எப்படியோ...  பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய கல்வெட்டுகள் கவனிப்பாரின்றி இருப்பது வேதனை தருகிறது’’ என்றார்.

‘`நீர் கல்வெட்டுகளைப் போய் பார்த்தீரா?’’

‘`குறிப்பிட்ட விநாயகர் கோயிலுக்குப் போய் பார்த்தேன். கல்வெட்டு களை ஓர் ஓரத்தில் போட்டுவைத்திருக்கிறார்கள். இப்படியே அங்கே எத்தனை நாள்கள் அவை கிடக்குமோ தெரியாது’’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்ட நாரதரிடம், நைனாமலை பெருமாள் கோயிலுக்கு மலைப் பாதை அமைக்கும் பணி தடைப்பட்டிருப்பது குறித்த விஷயத்தை நினைவூட்டினோம்.

‘`நானும் பலமுறை நிர்வாக அலுவலரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. விரைவில் நேரிலேயே விசாரித்துவருகிறேன்’’ என்ற நாரதர், அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

‘‘திருச்செந்தூர் பற்றிய தகவல்கள் ஏதேனும் உமது கவனத்துக்கு வந்ததா?’’

‘‘கட்டணக் கொள்ளை என்ற ரீதியில் ஒரு வீடியோ உலா வந்ததே அதுபற்றி கேட்கிறீரா..?’’

‘‘அதுமட்டுமல்ல... செந்திலாண்டவனின் பக்தர்கள் வேறு பல தகவல் களையும் பகிர்ந்துகொண்டார்கள். குறிப்பாக... வெளிச் சுற்றுப் பிரகார திருப்பணி குறித்து பக்தர்கள் தரப்பில் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். 

ஒரு வருடத்துக்கு முன்பு வள்ளிக்குகைக்கு எதிரிலிருந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துவிட, பாதுகாப்பு கருதி கோயிலைச் சுற்றியிருந்த பிராகார மண்டபங்கள் இடிக்கப் பட்டன. அதற்கான திருப்பணிகள் தாமதமாவது குறித்து ஏற்கெனவே விவரித்திருந்தோம். இன்னமும் அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை.

அதேநேரம், சில கடைகள் கட்டிமுடிக்கப்பட்டு, திறந்தும்விட்டார்களாம். இதுகுறித்து ஆன்மிக அமைப்பினர் மற்றும் பக்தர்கள் தரப்பில் கேள்வி எழுப்புகிறார்கள். அதேபோல், முன்னறிவிப்பு இல்லாமல் தரிசனக் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்...’’ என்ற நாரதரை இடைமறித்துக் கேட்டோம்.

‘‘ஆக, அடுத்த பயணம் திருச்செந்தூருக்கா?’’

‘‘அங்கு மட்டுமல்ல, நாகை மாவட்டத்தின் ஒரு க்ஷேத்திரமும் பயணத் திட்டத்தில் உண்டு’’ என்றபடியே விடைபெற்றுக்கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்...