முத்தமிழ் முருகனைப் போற்றும் உத்தம நூல்கள் ஏராளம் உண்டு இவ்வுலகில். அவற்றில் குறிப்பிடத்தக்கது - குவிபா ஒருபது. மகான் வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளால் அருளப்பட்டது. தமிழ் எழுத்துகளில், உதடுகள் குவிவதாலும் ஒட்டுவதாலும் வரும் 119 எழுத்துக்களை மட்டும் கொண்டு உருவான 10 பாடல்களைக் கொண்ட தொகுப்பு என்பதால், `குவிபா ஒருபது' எனப் பெயர்பெற்றது. இந்தப் பாடல்களுக்கு தண்டபாணி ஸ்வாமிகளின் சீடரான சோழவந்தானூர் கந்தசாமி ஸ்வாமிகள் உரை வகுத்துள்ளார்.

அற்புதங்களை நிகழ்த்தவல்ல `குவிபா ஒருபது' பாடல்கள் உங்களுக்காகவும்...

நூல் காப்பு ...

ஒருபது குருபா ஓதுவ கோடு
மருவுபேர் உவாவும் மாவடும் வேலுமே!

கருத்து: விநாயகரான யானையும், கயமுகாசுரனைக் கொன்ற அவரது ஆயுதமும், முருகப்பெருமானின் வேலும் இந்த நூலைக் குற்றமறப் பாடுவிக்கும் திறனை அருளட்டும்.

துதிப்பாடல்கள்...

முருகோ விபவா மூவா மேலோர்
உருவா வருவாய் ஓதோ(து) ஓமூ(டு)
ஒருவா துறும்ஆ வூமா வேமா
குருகோ லும்அவை கொளுமால் உகுமே.

கருத்து: பெருமையுடைய முருகக்கடவுளே, பெரியோர் வடிவமாக அன்பரின் முன் வருபவரே, பிரணவத்தின்கண் உள்ள அகார, உகார, மகாரங்களின் பொருளை உபதேசிப்பீராக. அதனால் சகலரின் மயக்கமும் நீங்கட்டும்.

கூவா வருமா குருகும் வேலும்
பாவால் நுவலும் பவம்ஈ குவையோ
கோவாழ் ஒருவா குவவாம் வாகு
ஓவா ஏவா உமைகோ வதுவே

கருத்து: மலைகளில் வசிக்கும் ஒப்பில்லாதவரே, புஜத்தின்கண் அம்புடைய சிவகுமாரரே, உமது சேவற்கொடியும் வேலாயுதமும், தமிழோதும் பிறவியை அளிக்காதோ அல்லது முக்தியைத்தான் கொடுப்பாயோ. அல்லது வேறு அருள் யாது செய்வாயோ அறியேன்!

கோகோ அருளோ கொடுமைப் படுமோ
மாகோ துறும்எம் மைவவா கொளுமோ
ஆகோ டுமுவா அதுகூ டுகுகோ
போகோ வுருவப் புதுமா வுருவே

கருத்து:  விநாயகர் விரும்பி நட்புகொள்ளத்தக்க குகக்கடவுளே, பிரணவ வடிவமான மயில் வாகனத்தையுடைய தெய்வமே, உமது அருள் எங்களை ஆட்கொள்ளுமா?

பாவம் படுமிப் பரும்நோ வறுமா
கோவம் பொயொடோ டுறுகோ வுகொடா
மாவம் புறுமா துமைபால் உணுவா
வாவம் புகுமெம் முளும்ஆம் விபுவே

கருத்து: உமாதேவியின் திருப்பாலையுண்ட இளமை வடிவினரே, கண்ணீர் விடுத்து இரங்கும் எமது உள்ளத்தில் நிறைந்தவரே, பெருந் துன்பம் நீங்கும்படி ஞானக் கண்ணை அருள்வீராக!

உருவோ அருவோ உறுமா றுறுவாய்
உருகோம் உயுமா ஒருவா வருவாய்
ஒருவே றுமையோ குளுவார் உளுள்ஓர்
ஒருவா குருவா உவவா விகுவே

கருத்து: ஆட்டு வாகனத்தில் ஏறும் கடவுளே, தியானிப்பவர்களின் மனதுள் எழுந்தருளும் ஒப்பற்றவரே, பரம குருநாதனாய் இருந்தும் அதனால் இறுமாப்பு அடையாத கம்பீரம் கொண்டவரே, உருவ மாயினும் அருவமாயினும் அன்பர் விரும்பியவாறு வரும் பண்புடையீர் நீர். ஆதலால் எங்கள் முன் ஒரேவிதமாக வருதல் வேண்டும்.

ஓவா வேலோ(டு) ஒருதூர் வல்உறோம்
மாவா மதுமீ வருகோ முருகோ
வீவா குவனோ வீணோ விதுவே
ஊவா வருளோய் உறுமே றுதுவே

கருத்து: வீணே வாழ்ந்து பயன்கெட்டு மடிவேனோ என்று அஞ்சுகிறேன். துஷ்டருக்கு இடியேறு போன்ற அச்சம் தரும் கருணை கொண்ட முருகப்பெருமானே, உமது வாகனமான மயில் மீதேறி வந்து, எம்மைக் காத்தருளவேண்டும்.

குவ்வூ டுறுவா குபலோ புவிமே(வு)
அவ்வூ மனுமாம் அதுலோ வவமே
வெவ்வூ றுகொளோம் வழுவோ விழுமம்
மிவ்வூ ழொடுமே விடுமா தொகுவே

கருத்து: முருகனே! `கு’ எனும் மந்திர எழுத்தின் உட்பொருளாய்த் திகழும் பெருமையைக் கொண்டவரே, மதுரையில் உருத்திரசன்மர் என்ற வாய்ப்பேச இயலா பிள்ளையாக அவதரித்த குமரக்கடவுளே, பெரும்பயன் விழைந்த சிறப்பை இப்பிறப்பிலேயே அருள்வீராக!

வாளோ வெனுமை வாகோ மதுவீ
வேளோ டுபல்நோ மிகுமோ சுடுமா
கோளோ வுவையோ குமவே வுவையோ
ஆளோ வருகோ அறுகோ ணொருமே

கருத்து: மலைகளுக்கும் அறுகோணத்துக்கும் சூட்சுமமான கடவுளே, மாதர்களாலும் மன்மதனாலும் உண்டாகின்ற பெருந் துன்பங்களை நீக்கி அருளவேண்டும்.

கோவோ டுவமா குருகோ வுவணோ
மாவே யுணுமா மறுகோ ருருவா
கூவே குகுகூ குகுகூ நுவலும்
வீவே றுவமை வெலுமே ணுதுவே

கருத்து: வள்ளிநாயகி தந்த தினை மாவை உண்பதற்காக, மனமயக்கமுடைய ஒரு வடிவு கொண்டவரே, சேவற் கொடியானது தனக்குத் தானே சமமானது. அதன் பெருமையை உலகறியும்படி செய்யவேண்டும்.

ஒப்பா வொருவேல் உறுதோ ளுறுமீ
முப்பா விடுமா முருகோ முருகு
துப்பா மருவு தொடுபூ மிகுவா
அப்பா பவநோ வணுகோ வெதுவே

பொருள் : வேலாயுதம் தாங்கிய புஜத்தில் முத்தமிழ் பாமாலைகளை அணியும் முருகக்கடவுளே, தேன்மிக்க பூமாலைகளை மிகப் புனைந்த எந்தையே, எங்கள் பிறவியைப் போக்கத்தக்க மாலை யாது? சொல்வீராக!

கந்தனின் பெருமை சொல்லும் - விந்தைகள் நிகழ்த்தும் இந்தப் பாடல்களைப் படித்து முருகனைத் துதிப்பவர்களுக்கு இப்பிறவியில் சகல போகங்களும் உண்டாகும். அத்துடன் பெறுதற்கரிய முக்திப் பேறும் வாய்க்கும்.