தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

வினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்!

வினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்!
பிரீமியம் ஸ்டோரி
News
வினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்!

வினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்!

வினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்!

க்தி விகடனின் நீண்டநாள் வாசகர்கள் நானும் என் குடும்பத்தாரும். சக்தி விகடனில் வெளிவரும் திருக்கோயில்களுக்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாத்திரையாகச் சென்று வருவோம். வயதான என் தந்தையார் சக்தி விகடன் இதழில் வரும் அபூர்வமான ஆலயங்களைப் பற்றிக் குறிப்பு எடுத்து வைத்து, எங்கள் யாத்திரைக்கு உதவுவார்.

இந்த நிலையில்தான் பெரும் இடியாக ஒரு சோகம் எங்கள் குடும்பத் தைத் தாக்கியது. பி.பி, சர்க்கரை நோய் என அவதிப்பட்டு வந்த என் தந்தை, நோயின் அதிவேகத் தாக்குதலால் பக்கவாதம் வந்து கை, கால்கள் செயலிழந்து, பேச முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

வயதான காரணத்தால் சிகிச்சைகள் பலனிக்காது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். எங்களை வழிநடத்திய பெரியவர் வேரற்ற மரம் போல விழுந்து கிடந்தது, எங்களுக்குள் தாங்க முடியாத சோகத்தை  உருவாக்கியது. செய்வதறியாது திகைத்திருந்த வேளையில், நம் இதழில்  வெளியான ‘ஏற்றங்கள் தருவான் ஏழுமலையான்’ கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சிலிர்த்துப்போனோம். எங்களை அந்த ஏழுமலையானே அழைக்கிறான் என்று உணர்ந்துகொண்டோம். சனிக்கிழமைதோறும் வேங்கடமுடையானை எண்ணி கடுமையான விரதம் இருந்தோம்.

வினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்!

மருத்துவர்களால் கைவிடப்பட்ட என் தந்தையை, மகா தன்வந்திரியான அந்த மலையப்பனே காக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் வேண்டிக் கொண்டோம். வரப்பிரசாதியாயிற்றே அந்த வேங்கடவன்?! விரதம் இருந்த வேளையிலேயே ஆச்சர்யமாக என் தந்தை மெள்ள அடி மேல் அடி வைத்து சிறுவயதுக் குழந்தையைப் போல நடக்க ஆரம்பித்தார். கண்ணீர்மல்க அந்தக்  கோவிந்தனை வேண்டிக்கொண்டு சிகிச்சையைத் தொடங்கினோம்.

பிசியோதெரபி சிகிச்சையும், பேசுவதற்கான பயிற்சியும் தந்தையை மெள்ள குணமாக்கின. முன்பு போல இல்லை என்றாலும் இப்போது பரவாயில்லை. அந்தத் திருமலை தெய்வமே எங்கள் குல தெய்வமாகிவிட்டார் என்றே சொல்லலாம். வேண்டிக்கொண்டபடி, திருமலைக்குச் சென்று அந்தக் கோபாலனுக்கு நன்றி தெரிவித்து வழிபட்டோம்.

- ஜங்கிலி கிஷ்டயா, ஹைதராபாத்