Published:Updated:

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை தேர்த்திருவிழா கோலாகலம்!

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை தேர்த்திருவிழா கோலாகலம்!
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை தேர்த்திருவிழா கோலாகலம்!

2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாகர்கோவில் நாகராஜா கோயிலில், தை தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இன்று, சுவாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

இந்தியாவில், நாகருக்கு எனத் தனி சந்நிதி கொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில், நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோயில் ஆகும். 2000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், மூலஸ்தானத்தில் நாகராஜா, நாகர் அம்மன் ஆகிய சுவாமிகள் வீற்றிருக்கிறார்கள். இந்தக் கோயிலின் கருவறை ஓலைக் கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலஸ்தானத்தில் உள்ள மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை மாதம் கொண்டாடப்படும் தேர்த் திருவிழா, 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். 

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைத் திருவிழா கடந்த 13 -ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல், சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேர்த் திருவிழா, தை மாதம் பூசம் நட்சத்திரம் தினத்தன்று நடைபெறும். நேற்று, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் நாளான இன்று (22 -ம் தேதி),  சுவாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சியோடு தைத் திருவிழா நிறைவுபெறுகிறது. இந்தக் கோயிலில், தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்து வழிபட்டுச்செல்வது குறிப்பிடத்தக்கது.