Published:Updated:

பிணி தீர்த்தார் பூவராகர்!

பிணி தீர்த்தார் பூவராகர்!

பிரீமியம் ஸ்டோரி

தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைப்பவர் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகப்பெருமாள். சகலமானவர் களுக்கும் பேதமின்றி தாயாக நின்று ரட்சிப்பவர் இந்த தீனதயாளன். இவர் அருளிய அற்புதங்களில் இதோ ஒன்று!

பிணி தீர்த்தார் பூவராகர்!

இந்தப் பகுதியில் வாழ்ந்த பூராஸாஹிப் என்ற அன்பருக்கு முதுகில் ராஜபிளவை எனும் கட்டி உண்டானது. திறமை வாய்ந்த மருத்துவர்கள் பலர் வைத்தியம் பார்த்தும், பலன் இல்லாமல் போனது. நாளாக நாளாக வலி அதிகமானது; தாங்க முடியாமல் துடித்தார் பூராஸாஹிப். தெரிந்தவர்கள் அனைவரிடமும் தன் துயரத்தைச் சொல்லி, ‘‘இது தீர ஏதாவது வழி உண்டா’’ என்று விசாரித்தார்.

‘‘ஸ்ரீமுஷ்ணத்தில் வெங்கட்ராவ் என்ற உப்பு இலாகா அதிகாரி இருக்கிறார். உத்தமமான வைஷ்ணவர். விஷ்ணு பக்தியில் ஊறிப் போனவர். அவரிடம் கேட்டால், ஏதாவது வழி பிறக்கும்’’ என்று பதில் வந்தது.

சற்றுத் தயங்கினார் பூராஸாஹிப். ஆனால், அவரது நோயின் கொடுமை அவரைக் கொண்டு போய் வெங்கட்ராவின் முன்னால் நிறுத்தியது. தனது துயரத்தை விரிவாகச் சொல்லி, ‘‘என்னைப் பீடித்து வரும் ராஜபிளவையில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். வழிகாட்டுங்கள்’’ என்று கண்ணீர் வடித்தார் பூரா ஸாஹிப்.

வெங்கட்ராவ் பதில் சொல்லவில்லை. ஆனால், ‘விறுவிறு’வென்று துளசி தீர்த்தத்தைக் கொண்டு வந்து பூராஸாஹிப்பிடம் தந்தார். ‘‘இதைச் சாப்பிட்டுவிட்டு வீடு செல்லுங்கள்’’ என்றார் வெங்கட்ராவ். ஸ்வாமியின் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார் பூராஸாஹிப்.

அன்று இரவு... பூராஸாஹிப் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது கனவில் - ஒரு பன்றி வந்து முதுகைக் குத்துவதைப் போன்ற காட்சி வந்தது. ஒன்றும் புரியாவிட்டாலும் பூரா ஸாஹிப்புக்கு மெய்சிலிர்த்தது.

பிணி தீர்த்தார் பூவராகர்!

மறு நாள் அவரது ராஜபிளவை நோய் பூரணமாகக் குணமடைந்தது. பூராஸாஹிப் முகம் மலர்ந்தார். ‘‘ஸ்ரீமுஷ்ணத்து வராகசாமி அருளால்தான் என் நோய் பூரண குணமடைந்தது!’’ என்று சொல்லி, 150 ஏக்கர் நன்செய் நிலத்தை அந்த ஸ்வாமிக்கு எழுதி வைத்தார்.

ஆண்டுகள் பல கடந்தன. பூரா ஸாஹிப்பின் வாழ்நாள் முடிந்தது. ஸ்ரீமுஷ்ணத்தின் அருகில் இருக்கும் கிள்ளை என்ற ஊரில் அவரது சமாதி அமைந்தது.

ஸ்ரீவராக ஸ்வாமியின் அருளால் பூரா ஸாகிப்பின் துயர் தீர்ந்ததை நினைவுபடுத்துவதற்காகவும், ஸ்வாமியின் அருளைப் பெறுவதில் எந்தவித மான வேறுபாடும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், இப்போதும் மாசி மக உற்சவத்தின்போது, உற்சவரை பூரா ஸாகிப்பின் சமாதி அருகில் எழுந்தருளச் செய்து தீபாராதனை செய்யப்படுகிறது.

பூரா ஸாஹிப்பின் குடும்பத்தாருக்குப் பிரசாதங் கள் அளிக்கும் வழக்கமும் உள்ளது. மானிடரில் எந்த பேதமும் இல்லை என்று உணர்த்தும் ஸ்ரீபூவராகரை நாமும் தரிசித்து நலம் பெறுவோம்.

தொகுப்பு: மா. திருமலை, திருச்சி-2

‘மாசி மக’ அற்புதங்கள்!

மாசி மகத்தன்று உபதேசம் பெறுவது மிகச் சிறந்தது. மந்திர உபதேசம் முதலானவற்றை இந்த நாளில் பெற்றால், அதற்குத் தனிச் சிறப்பும் பலனும் உண்டு. புதிதாக ஏதாவது படிக்க விரும்புபவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிக்கலாம். உதாரணமாக சங்கீதக்கலை, பரதம், கணிணிப் பயிற்சி, வாகனம் ஓட்டுதல் போன்றவற்றுக்கான பயிற்சிகளைத் தொடங்கலாம்.

ம்பிகை திரு அவதாரம் செய்த மங்கலத் திருநாள் மாசி மகம். எனவே, இந்த நாளில் அம்பிகையை வழிபட்டு வளங்கள் பெறலாம். குறிப்பாக, சுமங்கலிக்கு மங்கலப் பொருள்களைத் தானமாக வழங்கினால், அம்பிகை அகம் மகிழ்ந்து நல்லருள் புரிவாள்.

மாசி மகத்தன்று கும்பகோணத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம். இதனால் ஞானமும் முக்தியும் கிடைக்கும் என்பார்கள். மேலும் மாசிமகத் திருநாளில் கடலாடும் விழாவாகவும் தொன்று தொட்டு  கொண்டாடப்பட்டு வருகிறது. அறியாமல் ரிஷி ஒருவரைக் கொன்ற பாவத்தால் அவதிப்பட்டுக் கிடந்த வருணனுக்கு, ஈசன் ஒரு மாசி மக நன்னாளில் விமோசனம் அளித்தார். இதை யொட்டி வருணன் வேண்டிக்கொண்டபடி, மாசிமக நாளில் ஈசன் கடற்கரைக்கு எழுந்தருளுவார். அன்று கடற்கரையில் நீராடிய வர்களின் துன்பக்கட்டுகளை எல்லாம் நீக்கி, அவர்களுக்கு முக்தியும் தந்தருளுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு