Published:Updated:

திருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு!

திருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு!
திருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், மாசிப் பெருந்திருவிழா அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற  திருவெப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா மற்றும் தேரோட்டத்துடன்கூடிய மாசிப் பெருந்திருவிழாவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவெப்பூர் முத்துமாரியம்மன் கோயில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் - கோகர்ணேசுவரர் ஆலயத்துடன் இணைக்கப்பட்டது. ஆண்டுதோறும், திருவெப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் மற்றும் மாசிப் பெருந்திருவிழா ஆகியன கோலாகலமாகக் கொண்டாடப்படும். 

இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால்,  திருமணத் தடை நீங்கும்; குழந்தை வரம் கிட்டும்;  தீராத நோய்கள்  நீங்கும் என்பது நம்பிக்கை.  முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தின்போது,  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, புதுக்கோட்டையே விழாக்கோலம் பூணும். பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்கள் தேரோட்டம் மற்றும் திருவிழாவைக் காண வருவர். 

தற்போது, கோயில் நிர்வாகம் சார்பில் மாசிப் பெருந் திருவிழாவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

‘மாசி மாதம் இரண்டாவது ஞாயிறன்று ( 24.2.19 ), பூச்சொரிதல் விழா நடைபெறும். மாசி மாதம் மூன்றாவது ஞாயிறன்று ( 3.3.19)  மாசிப் பெருந்திருவிழாவுக்கு காப்பு கட்டப்பட்டு, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். திருவிழாவின் எட்டாம் திருநாளான  10.3.19 அன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும்,  ஒன்பதாம் திருநாளான 11.3.19 அன்று தேரோட்டத் திருவிழாவும் நடைபெறும். 18.3.19 அன்று, காப்பு களைந்து கொடி இறக்கப்பட்டு, விழா இனிதே நிறைவுபெறும்’ என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.