Published:Updated:

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

Published:Updated:
நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!
நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

ந்ததும் வராததுமாக நம் மேஜையின் மீது அல்வாப் பொட்டலத்தை வைத்தபோதே, நாரதர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரிந்து விட்டது.

‘`என்ன நாரதரே, திருநெல்வேலிச் சீமையில் ஏதும் விசேஷமோ?’’ என்று கேட்டோம்.

‘`திருக்கோயில்களில் திருவிழா நடத்தினாலும் சர்ச்சை; நடத்தாவிட்டாலும் சர்ச்சை’’ என்ற நாரதரை இடைமறித்து, ‘`என்ன திருவிழா... என்ன சர்ச்சை... விளக்கமாகச் சொல்லும்'' என்று கேட்டுக் கொண்டோம்.

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!‘`திருநெல்வேலியில், நெல்லையப்பர் கோயில் தைப்பூச உற்சவம் மிக விசேஷம் என்பதை அறிவீர்தானே? அந்த விழாவை தரிசிக்கவே சென்றிருந்தேன். உற்சவத்தின் 12-ஆம் நாளான ஜனவரி 23-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற்றது. அதில்தான் சர்ச்சை’’ என்ற நாரதர்,  அதுபற்றி தொடர்ந்து பேசினார்.

‘`கடந்த பல வருடங்களாகவே தெப்பக் குளத்தில் தண்ணீர் போதுமான அளவுக்கு இல்லை. முறைப்படி சரியாகப் பராமரிக்காததால், குளத்துக்குத் தண்ணீர் வரும் பாதைகள் அடைபட்டுவிட்டனவாம். எனவே, திருக்குளத்துக்கு வெளியில் ‘நிலைத் தெப்பம்’தான் கடந்த பல வருடங் களாக நடைபெற்று வருகிறது’’ என்றவரை இடைமறித்துக் கேட்டோம்.

‘`சமீபத்தில்தானே கோயிலுக்குத் திருப் பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகமும் நடந்தது. அப்போதுகூட தெப்பக்குளத்தைச் சீரமைக்க நிர்வாகம் முன்வரவில்லையா?’’

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

‘`அப்போதும் 6 மாத கால அவகாசத்தில் - அவசரகதியில் திருப்பணிகளை மேற்கொண்டு, அரைகுறைப் பணிகளோடுதான் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தார்கள் என்று பக்தர்கள் குறைபட்டுக்கொண்டார்கள். அதுபற்றியும் அப்போது சர்ச்சை எழுந்தது.

கும்பாபிஷேகப் பணிகளை மேற்கொண்ட வேளையிலும், தெப்பத்தைச் சீரமைக்க - அதில் விழா நிகழும்விதம் பராமரிப்பு முன்னேற்பாடுகளைச் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு மனமில்லாமல் போய் விட்டதாகவும் கடந்த சில வருடங்களாகவே இதே நிலைமைதான் என்றும் பக்தர்கள் குமுறுகிறார்கள்'' என்ற நாரதர் தொடர்ந்தார்.

‘`தெப்பத் திருவிழாவுக்கு முதல் நாள்... அதாவது, 11-ம் நாள் விழாவின்போது சௌந்தர சபையில் அம்பாள் எழுந்தருளவேண்டும். அப்போது, கேடயத்திலிருந்து அம்பாளை மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்ய ஆள் இல்லையென்று காரணம் காட்டி, கோயில் அர்ச்சகர் அல்லாத வேறொரு ஊழியர் ஒருவர் அம்பாள் விக்கிரகத்தைப் பிடித்துத் தூக்கியதாக வும் ஒரு சர்ச்சை வெடித்தது. இப்படி, கோயில் விவகாரங்களிலும் ஆகம விதிகளைக் கடைப் பிடிப்பதிலும் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்போக்குடன் நடந்துகொள்வதாக பக்தர்கள் பொருமித் தள்ளிவிட்டார்கள்’’ என்ற நாரதர் வேறொரு விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார். நாம் இடையில் குறுக்கிடாமல் கவனமாகச் செவிமடுத்தோம்.

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

‘`இதையெல்லாம்விட இன்னொரு சம்ப வமும் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி யதாக பக்தர் ஒருவர் கூறினார். 11-ஆம் விழாவின்போது அம்பாள் சந்தி விநாயகர் கோயிலுக்கு எழுந்தருள்வது வழக்கம்.

மேளக்காரர் உரிய நேரத்தில் வராததால், அம்பாள் சற்று நேரம் வீதியிலேயே காத்திருக்க நேரிட்டதாம். பின்னர் வீதியுலா புறப்பட்டுச் சென்றபோது, எதிரில் ஒரு பிரேத ஊர்வலம் வந்தது. அதனால் அம்பாளைச் சற்று பின்னால்  கொண்டு வந்திருக்கிறார்கள். இப்படிச் செய்வது விதிகளுக்கு முரணானது என்று சொல்லும் பக்தர்கள், வீதியுலா புறப்படுவதற்கு முன்பே ஓர் ஊழியரை அனுப்பி ரத வீதிகளில் பார்வையிடச் செய்திருந்தால், இந்த அசம்பா விதத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும் ஆதங்கப்படுகிறார்கள்'' என்ற நாரதர்,  சென்னைவாசியான நெல்லையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் சொன்ன குறிப்பைப் பகிர்ந்து கொண்டார்.

`‘தெப்பக்குளத்துக்கு அருகில் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் நயினார்குளம் நிரம்பி வழியும் நிலையில் இருக்கிறது. அங்கிருந்து தெப்பக்குளத்துக்குத் தண்ணீர் வரக்கூடிய வழியைச் சீரமைத்து, தெப்பத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் அவர்'' என்ற நாரதரிடம் அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.

``நெல்லையப்பர் கோயிலில் நவகிரக சந்நிதி யில் சந்திரன் சிலை பின்னமடைந்திருப்பதாக சோர்ஸ் ஒருவர் தெரிவித்தாரே... அது பற்றி எதுவும் விசாரித்தீரா?’’

நாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்!

‘`கும்பாபிஷேகத்தின்போதுதான் சந்திரனின் கை பின்னமாகி இருப்பதைக் கண்டுபிடித் தார்கள். அப்போதைக்கு மாலை போட்டு மறைத்துவிட்டார்கள். ஆனால், அதற்குப் பிறகு பல மாதங்கள் சென்றும் பின்னமான சிலையை மாற்றாமல் அப்படியே வைத்திருக் கிறார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.''

‘`கோயில் நிர்வாகத் தரப்பில்  என்ன சொல்கிறார்கள்?’’

‘`கோயிலின் தெப்பக் குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால்தான் நிலைத் தெப்பம் நடத்தினோம். கடந்த சில வருடங் களாகவே நயினார்குளத்திலிருந்து தண்ணீர் வரக்கூடிய வழியில் கழிவுநீர் செல்லும் கால் வாய் இருக்கிறது. கழிவு நீர் தெப்பக்குளத்துக்குள் வராமல் இருப்பதற்காக ஓடையை அடைத்து வைத்திருக்கிறோம். அதேபோல் அம்பாள் வீதியுலாவின்போது நிகழ்ந்த விவகாரத்திலும் எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள். தற்செயலாக நடந்த சம்பவத்துக்குக்கூட, சிலர் வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்து கிறார்கள். கோயில் விவகாரங்களில் ஒருசிலர் திட்டமிட்டு தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்று சலித்துக் கொண்டார்கள்’’ என்ற நாரதர் சொல்லி முடிக்கவும், ‘`நாகைக்குச் செல்லப் போவதாகக் கூறினீரே?’’ என்று ஞாபகப்படுத்தினோம்.

‘`அட, ஞாபகம் வைத்திருக்கிறீரே! இன்னும் சில தகவல்களை சேகரிக்கவேண்டி இருக்கிறது. விரைவில் சேகரித்து வருகிறேன். செந்தூர் தகவலும் சேர்ந்தே வரும்’’ என்று கூறியபடி விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...