Published:Updated:

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கன்னியாகுமரி கடற்கரை ஓரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட உள்ளதாகத் திருப்பதி கோயில் அதிகாரி தெரிவித்தார்.

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கன்னியாகுமரி கடற்கரையையொட்டி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22.5 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோயில் கட்ட விவேகானந்தா கேந்திர நிர்வாகம் 5.5 ஏக்கர் நிலத்தை வழங்கியது. 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் பூமி பூஜையுடன் கோயில் கட்டும் பணி தொடங்கியது.

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிகையில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. குமாபிஷேக விழாவுக்கு தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் வெங்கடாஜலபதி சந்நிதி, பத்மாவதி தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, கருட பகவான் சந்நிதி ஆகியவை உள்ளன. கருவறையில் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் அதே நாள்களில் கன்னியாகுமரி திருப்பதி கோயிலிலும் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இந்தக் கோயிலின் கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்தகட்டமாகக் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள், முடிகாணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மண்டபம், கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, இணைப்பு சாலைகள், அலங்கார தோரண நுழைவு வாயில், கோசாலை, தெப்பக்குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கன்னியாகுமரி திருப்பதி கோயில் கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்த திருமலை திருப்பதி கோயில் தலைமை அதிகாரி அனில்குமார் சிங்கார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``திருப்பதி வெங்கடாசலபதிக்கு பெங்களூரில் 3 கோயில்கள், தமிழகத்தில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இரண்டு கோயில்கள் உள்ளன. மேலும், சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்படுகிறது. கல்கத்தா மற்றும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் திருப்பதி கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.