Published:Updated:

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!
பிரீமியம் ஸ்டோரி
மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

பீமன் வழிபட்ட பீமேஸ்வரர்

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

பீமன் வழிபட்ட பீமேஸ்வரர்

Published:Updated:
மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!
பிரீமியம் ஸ்டோரி
மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

னிதன் ஒருவன், பெரிய இடத்துக்கு நெருக்கமானவனாக இருந்துவிட்டால், அவன் மனதில் கர்வம் தலைதூக்குவது இயல்பு. சராசரி மனிதர்களே இப்படியென்றால், பகவானுக்கே நெருக்கமாக இருந்த அர்ஜுனனைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

ஒருமுறை அர்ஜுனனுக்கு, ‘தன்னைவிடவும் சிவ பக்தியில் சிறந்தவர்கள் யாருமில்லை’ என்ற எண்ணம் தோன்றி, அந்த எண்ணமே கர்வமா கவும் மாறியது. அவனது கர்வத்தைப் போக்க நினைத்த கிருஷ்ணர், ஒருநாள் அவனை திருக்கயிலைக்கு அழைத்துச் சென்றார். 

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓரிடத்தில், சிவகணங்கள் கூடை கூடையாக சிவ நிர்மால்யப் பூக்களைக் கொண்டு வந்து குவித்தவண்ணம் இருந்தனர். அவர்களிடம் அர்ஜுனன், ‘‘இவ்வளவு நிர்மால்யங்களைக் கொண்டு வருகிறீர்களே, இவை யார் பூஜை செய்த மலர்கள்’’ என்று கேட்டான்.

‘`பூவுலகில் யாரோ பீமசேனனாம். அவன் சிவபெருமானுக்கு அர்ப்பணித்த மலர்களின் நிர்மால்யங்களே இவை’’ என்றார்கள்.

இப்போது கிருஷ்ணன் கேட்டார்: ‘`சரி, அர்ஜுனன் பூஜித்த மலர்களின் நிர்மால்யங்கள் எங்கே?’’

‘`அதோ பாருங்கள்... சிறு குவியலாக கிடக்கின் றனவே, அவைதான் அர்ஜுனன் சமர்ப்பித்த புஷ்பங்களின் நிர்மால்யங்கள்.’’

அர்ஜுனனுக்கு வியப்பு. ‘`கண்ணா, இது என்ன விந்தை? பீமன் சிவ பூஜை செய்தே நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க, எப்படி இவ்வளவு மலர்களை அவன் ஈசனுக்குச் சமர்ப்பித்திருக்க முடியும்?’’ என்று கேட்டான்.

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

‘`உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ கொஞ்சம் மலர்களைச் சிவனுக்கு அர்ப்பணித்து மணிக்கணக்கில் பூஜை செய்கிறாய். ஆனால் பீமனோ, தினமும் காலையில் நந்தவனத்துக்கு வந்து, அங்கிருக்கும் அத்தனை மலர்களையும் மானசீகமாக சிவார்ப்பணம் செய்துவிடுகிறான். மேலும், தான் உண்ணும் உணவு, பருகும் நீர், செய்யும் செயல்கள் ஆகிய அனைத்தையும் சிவார்ப்பணம் செய்துவிடுகிறான். அப்படி அவன் செய்யும் மானஸ பூஜை, நீ செய்யும் பூஜையைவிட உயர்ந்தது’’ என்றார் கண்ணன். அர்ஜுனனின் கர்வம் அகன்றது.

ஆம்! பீமசேனன் சிவ பக்தியில் சிறந்தவன். முற்பிறவியில் அவன் செய்த சிவநிந்தனையின் விளைவாகவே, துவாபர யுகத்தில் தன்னை முழுவதுமாக சிவபக்தியில் அர்ப்பணித்துக் கொள்ளும் நிலை வாய்த்தது.

திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன்.  யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபர யுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவ பக்தியில் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்றொரு தகவல் உண்டு. அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான், இப்போது நாம் தரிசிக்கச் செல்லும் அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்.

குபேரலிங்க தரிசனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டம், சின்ன வெண்மணி என்ற கிராமத்தில் அமைந் திருக்கிறது இந்த ஆலயம். இவ்வூரைச் சுற்றிலுமுள்ள கிராமங்களில், பீமனின் சகோதரர்களும் தாய் குந்திதேவியும் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. தற்போது, பீமேஸ்வரர் ஆலயம் மட்டுமே நித்திய பூஜை, வழிபாடுகளுடன் நல்ல நிலைமையில் உள்ளது. மற்ற ஆலயங்கள் முறையான பூஜைகள் இல்லாமல் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

பீமேஸ்வரர் ஆலயத்தின் தெற்கில் அம்பிகையின் அருள்பார்வை படும்விதமாக ‘பீம தீர்த்தம்’ அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி அழகுத் திருக்கோலத்துடன் சந்நிதி கொண்டிருக்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது.

பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி அமைந்துள்ளது.

கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங் களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது.

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

இதுபற்றி, கோயிலின் அறங்காவலரான பெருமாள் விளக்கிக்கூறினார்.

‘`இந்தக் கோயிலுக்குப் பிற்காலப் பாண்டிய மன்னர்களால் திருப் பணிகள் செய்ததால் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இந்த ஆலயம்  சிதிலம் அடைந்துவிட, ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் பல வருட முயற்சிகளுக்குப் பிறகே கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது தினப்படி பூஜை களும், பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி போன்ற விசேஷங்களும், சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்களும் நடைபெற்று வருகின்றன’’ என்றார் பெருமாள்.

தோஷம் நீக்கும் தலம்

கோயிலில் தினமும் பூஜை செய்து வரும் பெருமாள், ‘`இது மிகச் சிறந்த ராகு - கேது தோஷ பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது.

பிரதோஷ நாள்களில் சுவாமிக்கும், பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கல்யாணத் தடை நீங்கி, சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும். இருவரும் நம் கடன் தொல்லைகளைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் தந்து நம்மை ஆனந்தமாக வாழ்விப்பார்கள்’’ என்றார்.

சூரியன் வழிபடும் பீமேஸ்வரர்

நம்முடன் வந்த அன்பர் தியாகராஜன், ‘`வருடம்தோறும் புரட்டாசி பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள்கள் பின் இரண்டு நாள்கள், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு முன் இரண்டு நாள்கள், பின் இரண்டு நாள்கள் காலை 6.20 முதல் 6.40 மணி வரை, இறைவனைத் தன் ஒளியால் ஸ்பரிசித்து வழிபடுகிறார் சூரியன். முன்பு இந்தக் கோயிலில் 27 நட்சத்திரங் களைச் சேர்ந்தவர்களும் வழிபடக்கூடிய 27 மரங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது எந்த மரமும் இல்லை'' என்று ஆதங்கத்துடன் கூறினார்.

அவரே தொடர்ந்து, ‘‘இந்தக் கோயிலைச் சுற்றிலும் குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட ஆலயங்கள் உள்ளன.  பாண்டவர்கள் தென்பாண்டி தேசத்துக்கு வரும் வழியில் இந்தக் கோயில் களை நிர்மாணித்து வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது’’ என்றவர், அந்தத் திருக்கோயில்களுக்கும் நம்மை அழைத்துச் சென்றார்.

மகா சிவராத்திரி தரிசனம்! - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!

அவற்றில், அர்ஜுனன் வழிபட்ட விஜயேஸ்வரர் கோயில் சிறிய கட்டடம் போன்ற அமைப்பில் உள்ளது. உள்ளே இறைவன் விஜயேஸ்வரர் பிரமாண்ட திருமேனியராகத் திருக்காட்சி தருகிறார். வேறு எந்த தெய்வ மூர்த்தங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.

தர்மர் வழிபட்ட தர்மேஸ்வரர், வீட்டு மனைகளுக்கு நடுவில் ஒரு தகரக்கொட்டகையில் அம்பிகையுடன் காட்சி தருகிறார். நகுலன், சகாதேவன் வழிபட்டஆலயங்கள்கூட முற்றிலும் சிதிலமடைந்து திகழ, வெட்டவெளிக் கொட்டகைகளிலேயே ஐயன் காட்சி தருகிறார். குந்தீஸ்வரர் ஆலயத்திலும் பல பகுதிகள் சிதிலமுற்றுத் திகழ்கின்றன. இவற்றையெல்லாம் கவனிக்கவேண்டிய அறநிலையத்துறை ஏனோ இந்தக் கோயில்களைப் புனரமைப்பதில் சுணக்கம் காட்டுவதாகச் சம்பந்தப்பட்ட ஊர்மக்கள் கூறுகிறார்கள்.

பீமேஸ்வரர் திருக்கோயில் போன்று மற்றுமுள்ள சிவாலயங்களும் புதுப்பொலிவு பெற வேண்டும். ஈசனின் திருவருளால் இப்பகுதி மக்கள் எந்நாளும் செழித்தோங்கித் திகழவேண்டும் என்று அந்தப் பரமனை மனதார வேண்டியபடி விடைபெற்றோம்.

எஸ்.கண்ணன்கோபாலன்

படங்கள்: வீ.நாகமணி

பாண்டவ திருத்தலங்கள்...

பீமேஸ்வரர் கோயில் அமைந்துள்ள வெண்மணி கிராமத்தைச் சுற்றிலும் பாண்டவர் களில் மற்றவர் களும், குந்திதேவியும் வழிபட்ட ஆலயங்கள் உள்ளன.

அவை: வடக்கில் தர்மாபுரத்தில் குந்தீஸ்வரர்; வடகிழக்கில் திருவாதூரில் தர்மேஸ்வரர்; தெற்கில் பெரிய வெண்மணியில் விஜயேஸ்வரர்; நாகமலையில் நகுலேஸ்வரர்; தேவனூரில் சகாதேவீஸ்வரர் ஆகியோர் கோயில் கொண்டிருக்கிறார்கள். அன்பர்கள், இந்தச் சிவாலயங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism