தொடர்கள்
Published:Updated:

குழந்தை பாக்கியம்!

குழந்தை பாக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை பாக்கியம்!

குழந்தை பாக்கியம்!

குழந்தை பாக்கியம் யாருக்கு எவ்வாறு அமையும் என்பதை கை ரேகையைக் கொண்டும் கணிக்கலாம். கீழே படத்தில் உள்ளதுபோன்று, சதைப்பற்றுடன் திகழும் செவ்வாய் மேடு சந்திரமேடு நோக்கி விரிவடைய, செவ்வாய் மேட்டில் ஆழமான வெட்டு ரேகை அமைந்து, திருமண ரேகை மிகவும் மெலிந்து, அதில் குழந்தை ரேகைகள் இல்லையெனில், அந்தப் பெண்ணுக்குத் தைராய்டு சுரப்பி கோளாறு காரணமாக குழந்தைப் பிறப்பு தள்ளிப்போகும்.

குழந்தை பாக்கியம்!

ராகு பகுதியில் அநேக குறுக்குக் கோடுகள் மற்றும் தொங்கு ரேகைகள் காணப்பட்டு, சந்திர மேடு கங்கண ரேகையை நோக்கி விரிந்து வீங்கியதுபோல் திகழ, திருமண ரேகை பலவீனமாகவும் ஆயுள் ரேகையிலும் தொங்கு ரேகை அமைந்தும் காணப்பட்டால், கடுமையான வயிற்று வலி இருக்கும். அதீத உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலி கருச் சிதைவுக்கும் காரணமாகிவிடும்.

இவர்கள் திருமண ரேகை வலுவாக உள்ள காலத்தை அறிந்து, உரிய சிகிச்சை பெறுவதுடன், ராகு-கேது பரிகார ஸதலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அத்துடன், கருப்பை ஆரோக்கியத்துக்கு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உயிரணு எண்ணிக்கைக் குறைவினாலும் குழந்தை பாக்கியம் தடைப்படும். இந்த நிலையைச் சுட்டிக்காட்டும் கைரேகை அமைப்பை அறிவோம்.

* குரு மேடு தட்டையாகவும் சுருங்கியும் திகழ, அந்த மேட்டில் குறுக்குக் கோடுகள் காணப்படும்.

*  சுக்கிரமேடும் சந்திர மேடும் ஒடுங்கி, கங்கண ரேகை பாகத்தை நெருக்கி உப்பியதைப்போன்று காணப்படும்.

குழந்தை பாக்கியம்!

*  இருதய ரேகை சனி மேட்டினை அடைந்து, திருமண ரேகை பலவீனமாகக் காணப்படும். இப்படியான ரேகை அமைப்புடைய ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படும்.  மேலும் உயிரணுக்கள் ஆரோக்கியக் குறைவுடனும் இருக்க வாய்ப்பு உண்டு.

இவர்கள், அனுதினமும் குரு காயத்ரீ மந்திரம் சொல்லி பிரார்த்திப்ப துடன், குரு பரிகார திருத்தலத்துக்குச் சென்று குருபகவானை வழிபடலாம். உயிரணுக்களின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிப்பதற்குத் தேவையான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

உணவால் உடலையும், வழிபாடுகளால் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கிக்கொள்ள, தடைகள் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் வாய்க்கும்.