Published:Updated:

ஆந்திரா: தமிழர்களின் கோவில் திருவிழாவில் சாதி மோதல்!

ஆந்திரா: தமிழர்களின் கோவில் திருவிழாவில் சாதி மோதல்!
ஆந்திரா: தமிழர்களின் கோவில் திருவிழாவில் சாதி மோதல்!

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அந்த பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.

குண்டூர் மாவட்டம் ராமாபுரத்தை சுற்றி எட்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருப்பவர்கள் அனைவரும் தமிழ் பேசக்கூடியவர்கள். இதில் ஏழு கிராமங்களில் வன்னியர்களும், ராமாபுரம் காலனியில் தலித்துகளும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கடந்த 10 நாட்களாக ராமாபுரத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பத்தாவது நாளான இன்று சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது தலித்துகளின் ஊருக்குள் சாமி ஊர்வலத்தை கொண்டு செல்ல மாட்டோம் என மற்ற கிராம மக்கள் கூறியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்.

பிரச்னைக்குப் பிறகு வன்னியர்கள் சாமியை ஊர்வலமாக தலித் பகுதிக்குள் எடுத்து சென்று வைத்துவிட்டு, அங்குள்ள வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

இந்த மோதலில் தலித் இளைஞர்கள் பாண்டியன், ரஜினி, முத்துகுமார், குமார் ஆகிய நான்கு பேரையும் வன்னிய கிராமத்தை சேர்ந்தவர்கள் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நான்கு பேரும் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

##~~##
இந்த சம்பவத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆந்திர மாநில ஆர்.டி.ஓ., மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-கவிமணி