Published:Updated:

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

Published:Updated:
கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

? நாங்கள் குடியிருக்கும் வீட்டில் இரவு, பகல் எப்போதும் வௌவால்களின் நடமாட்டம் உள்ளது. இது தோஷம்தானா? ஆம் எனில், ஏதேனும் பரிகாரம் கூற வேண்டுகிறேன்.

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

- கூந்தலூர் வி.சந்திரசேகரன், கும்பகோணம்

வௌவால்கள் நடமாட்டம் வீடுகளில் இருப்பது சரியானதல்ல. எனவே, எல்லாம்வல்ல இறைவனிடம், `எங்களது வீட்டில் உள்ள வௌவால்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று விட வேண்டும்' என்று வேண்டி, தினசரி தூபம் இட்டு வழிபட்டு வாருங்கள். கடவுளின் அருளால் விரைவில் வெளவால்களின் நடமாட்டம் நீங்கும்.

? பக்தர்களால், நேர்த்திக்கடன் பொருட்டு தெய்வத் துக்கு உடைக்கப்படும் சிதறுகாயை (தேங்காய்) மற்ற அன்பர்கள் எடுத்துச் சாப்பிடுவது, தோஷம் ஆகுமா?

நம்முடைய கர்ம வினைகள் இந்தப் பிறவியோடு  முடிந்து போகுமா அல்லது அடுத்தப் பிறவியிலும் தொடருமா?

-கோ.ஞானசேகரன், நாச்சியார்கோவில்

நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பணம் செலுத்துகிறோம். அந்தப் பணம், கருவூலத் துக்குச் சென்றுவிடும். நாம் பணம் செலுத்தும் அதேநேரம், வேறொருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுப்பதற்கு விண்ணப்பித் தால், நாம் செலுத்திய பணம் அவருக்குக் கொடுக்கப்படவும் சாத்தியம் உண்டு. ஆனால், அதற்காக நமது சேமிப்பிலிருந்து பணம் குறைந்துவிடப் போவதில்லை.

அதேபோல், ஒருவர் நேர்த்திக் கடனாக சிதறு தேங்காய் உடைத்தால், அதன் மூலம் அவருக்கு உரிய பலன் கிடைத்துவிடும். `அதை எடுத்துச் சாப்பிடவேண்டும்' என்று ஒருவருக்கு விதியிருப்பின்,  அவர் அதை எடுத்துச் சாப்பிடவே செய்வார். இதனால் அவருக்கு எந்த தோஷமும் ஏற்படாது.  சிலர், பிராயச்சித்தத்துக்காகச் செய்யும் கர்மாக்களினால் ஏற்படும் தோஷங்களைக்கூட, நல்ல உபாசனை உள்ள வேதியர்கள், தங்கள் தபோ பலத்தினால் போக்கிக் கொள்வார்கள். எனவே, வீணான அச்சம் தேவையில்லை.

உலகத்திலுள்ள அனைத்தும் கடவுளுக்கு உரியவையே. கடவுள் நமக்கு அளித்துள்ள பொருள் களை நாம் கடவுளுக்கு அர்ப்பணித்ததுமே அவை தூய்மைப்படுத்தப்பட்டு, நமக்கு இறைவனின் பிரசாதமாக அளிக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

ஒருவர் கடவுளுக்கு நைவேத்தியம் செய்து, அதைக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யும்போது, சலனம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அவற்றை கடவுளின் அருளாக மட்டுமே நினைக்கவேண்டுமே தவிர, அவற்றை அளிப்பது யாரென்று பார்த்து, அவரின் பொருட்டு அவற்றைப் பெற்றுக்கொள்வதில் தயக்கம்கொள்வது தேவையில்லை.

உங்களின் அடுத்த கேள்வி, கர்மவினையைப் பற்றியது. இதற்கும், நான் வங்கிக் கணக்கிலிருந்தே தொடங்குகிறேன்.

நாம் வங்கியில் பணம் சேமித்து வைத்திருந்தாலோ அல்லது வங்கியி லிருந்து கடன் பெற்றிருந்தாலோ, சேமித்த பணத்தை எடுத்து முடிக்கும் வரை அல்லது வாங்கிய கடன் முழுவதையும் திருப்பி அடைப்பது வரை, நமக்கும் அந்த வங்கிக்குமான சம்பந்தம் இருக்கவே செய்யும். அதேபோல்தான் நாம் செய்த பாவ, புண்ணியங்கள் முழுவதும் தீரும் வரை, பிறப்பு இறப்பு என்ற சுழலிலிருந்து நாம் தப்பவே முடியாது. எந்த நிலையில் இருப்பவருக்கும் இது பொதுவான தர்மம்.

இரவுக்குப் பிறகு பகல் வருவதைப் போன்றதுதான் இறப்புக்குப் பிறகு பிறப்பு ஏற்படுவதும். இறப்பு என்பது ஒரு பிறவியின் முடிவைக் குறிப்பதாகும். அடுத்தப் பிறவி எப்படி, எங்கே என்பது யாருக்கும் தெரியாது. இந்தக் காரணத்தினால்தான், நம் சநாதன தர்மம், நாம் அனைவரும் பாவ புண்ணியங்களுக்கு அஞ்சி வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறது. ‘ஸத்யம் வத’; ‘தர்மம் சர’ - அதாவது உண்மையே பேசவேண்டும்; தர்ம நெறிப்படி வாழவேண்டும் போன்றவை நமக்கு நன்மை தரத்தக்க நல்ல உபதேசங்கள் ஆகும்.

இந்தப் பிறவியில் நல்லவர் துன்பப்படுவதும் கொடியவர் மகிழ்ச்சியாக இருப்பதும் அவரவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியச் செயல்களின் விளைவுதான். இதை நாம் அனுபவப்பூர்வமாகவே பார்க் கிறோம். எனவே, நம்மால் முடிந்த அளவு நல்லதே செய்து வருவோம். அதன் மூலம் நம்முடைய தீவினைகள் அழியும்.

மற்றபடி, வினைகளுக்கு ஏற்ப பிறப்பும் இறப்பும் இல்லாத முக்தி நிலையை நமக்கு அருள்வது இறைவனின் கையில் உள்ளது என்பதை உணர்ந்து நடக்கவேண்டும்.

? பால்குட ஊர்வலம் நடத்தி, இறைவனுக்குப் பாலபிஷேகம் செய்வது சரியானதுதானா?

- எம்.முருகன், திருச்சி

தாங்கள் சரியா அல்லது தவறா என்று எந்த நோக்கத்தில் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை.

அந்தக் காலத்தில் அனைத்துப் பொருள்களும் ஆலயத்திலேயே கிடைத்தன. ஆலயங்களில் நடைபெறும் பால் அபிஷேகத்துக்கு, ஆலயங்களில் உள்ள கோசாலைப் பசுக் களிடம் பெறப்பட்ட பாலே பயன்பட்டது. கோசாலைப் பசுக்களின் தூய்மையான பால்,   அதிலிருந்து தயாரிக்கப்படும்  தயிர் போன்றவை அர்ச்சகப் பெருமக்களால் மந்திரங்கள் சொல்லி, கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இவையெல்லாம் சம்பிரதாய மாகக் கோயில்களில் கடைப் பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. அதில் மாறுதல் செய்யாத விதத்தில் நம்முடைய வழிபாடு அமைந்திருக்கவேண்டும்.

தற்போது ஆலயங் களில் பசுக்களைக் காண்பதே அரிதாகிவிட்டது!

ஆண்டாண்டு காலமாகக் கோயில்களில் அனுசரித்து வரும் இதுபோன்ற வழிபாட்டு முறை கள், உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கக்கூடியவை. ஓர் அரசனோ அல்லது ஆலய வளர்ச்சிக்கு மிகுந்த பொருளுதவி செய்தவரோ யாராக இருந்தாலும் இத்தகைய நடைமுறைகளை மாற்றி அமைத்தால், அது அவர்களுக்குத் தீங்கையே விளைவிக்கும்.

எனவே, பால்குட ஊர்வலம் நடத்தி அபிஷேகம் செய்வது ஓர் ஆலயத்தில் வழக்கமாக இருந்தால், அதை அப்படியே தொடரவேண்டும். கோயில்களில் உள்ள பசுக்களின் பாலையே அபிஷேகம் செய்யும் நடைமுறை இருந்தால், அப்படியே தொடரவேண்டும்.

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

? தற்போது, சிவாலயங்களில் சோமவாரத்தில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறுகிறது. இதன் தாத்பர்யம் மற்றும் சிறப்பம்சங்கள் யாவை?

- கூந்தலூர்  வி.சந்திரசேகரன், கும்பகோணம்

‘அபிஷேகம்’ என்பதை ஆகமங்கள் சிறப்பாக ‘ஜலார்ச்சனம்’ என்று சிறப்பித்துக் கூறுகின்றன.

எப்படி, பூக்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ‘புஷ்பார்ச் சனை’ என்று கூறுகிறோமோ, அதுபோன்று ஜலம் மற்றும் அதுபோன்ற திரவியங்களை இறைவனுக்குப் பக்தியுடன் அளிக்கவேண்டும் என்று சிவாகமங்கள் கட்டளையிடுகின்றன.

எப்படி மரத்தின் வேர்ப் பகுதியில் விடப்படும் நீரானது அந்த மரத்தில் உள்ள அனைத்துப் பகுதி களுக்கும் சமமாகச் செல்கிறதோ, அதுபோன்று எல்லாம்வல்ல இறைவனுக்குச் செய்யப்படும் கிரியைகள் அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று சேர்கின்றன. இவற்றை இப்படிச் செய்யவேண்டும்; இவற்றை இப்படிச் செய்யக்கூடாது என்று ஆகமங் களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. இறைவனுக்கு எப்போது, என்ன பொருளை எந்த அளவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது பற்றியும், அப்போது சொல்லவேண்டிய மந்திரங்கள் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், இறைவனுக்குச் செய்யப்படும் சங்காபிஷேகமும் சிறப்பானதாகும். தங்கம், வெள்ளி, செப்பு, வெண்கலம் போன்ற உலோ கங்களினால் ஆன கலசங்கள் மூலம் அபிஷேகம் செய்வது சிறப்பானது. அவற்றைவிட மிகச் சிறந்த பலன்களைத் தரக்கூடியது, இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்வது. அனைத்துப் பாவங் களையும் போக்கக்கூடிய ஆற்றல் சங்கில் இருப்பதால், சங்காபிஷேகம் செய்வது மிகவும் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.

?ஒருவரின் ஜாதகத்தில் தோஷம் ஏதேனும் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்

மருத்துவப் பரிசோதனை களின் அடிப்படையில், மருத்துவர் நம்முடைய உடலில் உள்ள நோய்களைப் பற்றிக் கூறிவிடுவார். அதேபோல், ஜோதிடத்தில் நன்றாகத் தேர்ச்சி பெற்ற ஜோதிடர் ஒருவரிடம் நம் ஜாதகத்தை அளித்தால், அதில் இருக்கும் கிரக நிலைகளின் அமைப்பைப் பொறுத்து, நமக்கு ஏதேனும் தோஷம் இருக்கிறதா என்பதையும், அதன் தன்மை எப்படிப்பட்டது என்பதையும் தெளிவாகக் கூறிவிடுவார்.

சில தோஷங்கள் உரிய பரிகாரங்கள் மூலம் போக்கக்கூடியவையாகவும், இன்னும் சில தோஷங்கள், அனுபவித்தே தீர்க்கப்படவேண்டிய தோஷங்களாகவும் இருக்கின்றன.

எவ்வித தோஷங்கள் இருந்தாலும், அவற்றைக் கண்டு அஞ்சாமல், பரிபூரண பக்தியுடன் கடவுளை வழிபடுவதே சிறப்பானது. வீண் அச்சம் தேவையில்லை.

- பதில்கள் தொடரும்...

`காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism