‘கண்டனென் கற்பினுக்கணியை’ என்று சிரஞ்சீவி அனுமனால் போற்றப்பட்ட கற்பின் கனலாம் ஜானகிதேவி, அக்னிப் பிரவேசம் முடித்து, அயோத்தி நகர் திரும்பினார். மகாவிஷ்ணுவும் திருமகளும் மனித குலத்தில் பிறந்து, மனித இயல்புகளுக்குத் தங்களை ஒப்புவித்துக் கொண்டு வாழ்ந்தவர்கள். அதன் காரணமாகவே, எல்லோரும் சந்தேகத்துக்கு இடமின்றி வாழவேண்டும் என்பதை உணர்த்த நடந்த அற்புத லீலைதான் அக்னிப் பிரவேசம்.

அக்னியின் வெம்மை அன்னையைத் தகிக்கவில்லைதான். ஆனாலும், ராமபிரான் தன்னைச் சந்தேகித்தாரே என்ற நினைவு அன்னையின் மனதை கனலாகத் தகித்துக்கொண்டே இருந்தது. சீதையின் மனத்துயர் அறிந்து ராமபிரானும் வேதனையுற்றார். சீதையின் மனத்துயர் போக்க விரும்பிய ராமபிரான், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளிய ஈசனை தியானித்தபடி, புஷ்பக விமானத்தில் ஏறி தென்திசை நோக்கிப் பயணித்தார். அவர்களுடைய சோக நெருப்பானது புஷ்பக விமானத்தையும் சூடாக்கி, கனக்கத் தொடங்கியது.

துயர் கொண்டோருக்குத் துணை வரும் அந்த தீனதயாளன் உடனே வழிகாட்டினார். ஆம், கெடில நதிக்கரை அருகே ஒளிவீசும் ஒரு சிவலிங்கத்திருமேனியாக ஈசன் காட்சி தந்தார். புஷ்பக விமானம் தானாக இறங்கத் தொடங்கியது. மனதை அழுத்திய பாரத்தை இறக்கி வைக்க சீதாதேவி ஈசனைத் தொழுதார். ஆற்றின் அருகே குளிர்ந்தத் திருமேனியாக சோடச (பதினாறு பட்டைகள் ) லிங்கத்திருமேனியாக எழுந்தருளிய ஈசன், சீதாதேவியின் அனலைக் குளிர்வித்தார்.

நடந்தவை யாவுமே உலக நன்மைக்காக என்று எடுத்துரைத்தார். சீதாதேவி சீதளதேவியாக மாறி ராமபிரானோடு அயோத்தி நகர் திரும்பினாள். சீதாதேவியை குளிர்வித்து இன்ப வாழ்வு அருளிய ஈசன் அன்றிலிருந்து அங்கேயே அமர்ந்து சீதப்பட்டீஸ்வரர் என்று அருள்பாலித்தார். அந்த ஊரும் சீதப்பட்டீஸ்வரம் என்றானது.

ராமாயணக் காலத்தில் இருந்தே புகழ் பெற்று விளங்கிய இந்த சீதப்பட்டீஸ்வரம் என்ற ஊர் தற்போது சின்னஞ்சிறிய கிராமமாக அடையாளமின்றிக் காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் அரசூர் அருகே தற்போது தென்மங்கலம் என்றழைக்கப்படும் சீதப்பட்டீஸ்வரத்தில் குடிகொண்டுள்ள சீதப்பட்டீஸ்வரர் ஆலயத்தின் தற்போதைய நிலைமையைக் கண் கொண்டு பார்க்க இயலவில்லை என்று கேள்விப்பட்டோம். இனிமையான வாழ்வை அருளும் ஈசன், பொலிவிழந்த இடத்தில் இருக்கலாமா என்ற கேள்வியோடு புறப்பட்டோம்.

காண்பவர்களுக்குக் களிப்பை அளிக்கும் இந்த ஈசனின் ஆலயம் ஆளரவமற்றப் பாதையில் ஒடுங்கிக் காணப்படுகிறது. உள்ளே நுழையும்போதே இப்படிப் போகாதீர்கள்; அப்படிப் போகாதீர்கள் என ஏகப்பட்ட கெடுபிடிகள். ஆலயத்தின் பாதை வனத்துறைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் நெருக்கடிக்குள்ளாகிறார்கள். ஒருவழியாக ஈசனின் ஆலயத்துக்குள் சென்றோம். நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பால் ஆலயத்தில் சில திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளதைக் காணமுடிந்தது. அது தற்போது நின்று போன காரணத்தால் பொலிவிழந்த நிலையில் ஆலயம் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாமல், எங்கும் பாசிகள் படர்ந்து ஆங்காங்கே விரிசல்கள் விட்டு ஆலயம் பாழ்பட்டு நிற்கிறது.

எவ்வுயிர்க்கும் காவலாக நிற்கும் ஈசனின் திருக்கோயில் இந்த நிலையில் இருப்பதா என்று கண்கள் கலங்கின; மனம் சோகத்தால் கனத்தது. ஆகம விதிகளின்படி ஆலயத்தின் திசைகளுக்குரிய பரிவார தெய்வங்களான கணபதி, முருகர், சண்டேஸ்வரர், நவகிரகங்கள் காட்சி தருகின்றனர் . சீதாளேஸ்வரர் மனம் மகிழும் நாயகியாக அன்னை பார்வதி வீற்றிருக்கிறாள். அத்தனை தெய்வங்களும் ஒருங்கே இருந்தாலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைதான் மிக மிகக் குறைவாக உள்ளது.

800 ஆண்டுகளுக்கு முந்தைய இங்குள்ள கல்வெட்டு ஒன்று ‘ஆற்றுத்தளி நாயனார்’ என்று இந்த ஈசனைக் குறிப்பிடுகிறது. இந்த ஈசன் பதினாறு பட்டைகளோடு ‘தகதக’வென்றுக் கருவறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஷோடச லிங்கம் கருவறையில் இருப்பது வெகு அபூர்வமானது என்கிறார்கள் ஊர் மக்கள்.

பதினாறு பட்டை லிங்கத்திருமேனியின் உச்சியில் ஒரு துளி பாலை விட்டால் அது பதினாறு பிரிவாகப் பிரிந்து திருமேனியெங்கும் பரவும் அழகே அலாதியானது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்கிறார்கள். குறிப்பாக வெப்பு நோய்கள் குணமாகும். மேலும் கணவன் - மனைவிக்கிடையே உண்டாகும் பூசல்கள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிரிந்திருக்கும் உறவுகள் ஒன்று சேரும் என்கிறார்கள் ஆலய நிர்வாகிகள்.

ஆலயத்தின் உள்ளே அழகிய சிவ-சக்தி உற்சவ சிலைகள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் உட்புறம் அழகாகக் கட்டப்பட்டு சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியே கடுமையான வெயில் இருந்தபோதிலும் கருவறை சிவலிங்கத் திருமேனி சில்லென்று இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதில் நீர் கசிந்தவாறே இருந்தது. ஆம், சீதளம் என்றால் குளிர்ச்சி என்றே பொருள். இந்த ஈசன் குளிர்ச்சியாக, எப்போதும் நீர் ஊறிய வண்ணமே இருப்பதால்தான் சீதப்பட்டீஸ்வரர் என்றும் சீதாளேஸ்வரர் என்றும் வணங்கப்படுகிறார் என்று கூறுகிறார்கள்.

ராமரும் சீதையும் வழிபட்டது மட்டுமல்லாமல் இங்கு கௌதமர், வசிஷ்டர் உள்ளிட்ட ரிஷிகளும் தெய்வப் பசுக்களும் வழிபட்டுள்ளனர் என்கிறார்கள் ஊர் மக்கள். பழைமையான சிவலிங்கங்கள் இன்றும் இந்தப் பகுதியில் கிடைத்தவாறே உள்ளன. நாங்கள் சென்றபோது கூட அங்கிருந்த பெண்மணி ஒருவர், தங்கள் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்த போது ஆற்றில் ஒரு அழகிய சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறினார். ஓரடி உயரம் கொண்ட அந்த அழகிய லிங்கத்தை, தங்கள் வீட்டில் வைத்துப் பூஜிப்பதாகவும் கூறினார். இவை யாவும் ரிஷிகள் உருவாக்கிய லிங்கங்களாக இருக்கலாம் என்றும் கூறினார்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தை ஒட்டி நீர் நிலை ஒன்றும் அந்த நீரைச் சேந்தி வயலுக்கு அனுப்பச் சால் அமைப்பு ஒன்றும் இருந்துள்ளது. அந்த அமைப்பு உருண்டையானக் கல் ஒன்றுடன் இணைத்து வெகு காலம் வைத்திருந்தார்கள். அது ஒரு மாயக் கல் என்றும், எவர் அதை தூக்கிக் கொண்டுபோய் எங்குப் போட்டாலும் மீண்டும் அது ஆலயத்தின் அருகிலேயே வந்துவிடும் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் அந்தக் கல் அபூர்வமான லிங்கம் என்றும் அது ஓர் அரிய பொக்கிஷம் என்றும் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

ஒருமுறை வடநாட்டு மாந்திரீகன் ஒருவன் இங்கு வந்தபோது அந்த லிங்கத்தைக் கண்டு அதில் இருந்த கல்வெட்டு வாக்கியங்களைப் படித்தான். அதில் முக்கண் தலையை பலி கொடுத்து, குடுமியைத் திருகி தனத்தைக் கொள்க’ என்று இருந்ததாம். புத்திசாலியான அந்த மாந்திரீகன் ஒரு தேங்காயை உடைத்து, சிவலிங்கத்தின் உச்சியைத் திருகி அதனுள் இருந்த வைர, வைடூரியங்களைக் கொண்டு சென்றானாம். அத்துடன் கோயிலின் சாந்நித்யம் குறைந்து போன தாக அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர் கதையாகச் சொன்னார்.

இன்னும் சிலரோ, ‘ஈசன் எந்த மந்திரக்கட்டுக்கும் கட்டுப்படாதவர். அவரா மாந்திரீகத்துக்குக் கட்டுப்படுவார்? இந்தப் பகுதியில் அடிக் கடி நடைபெற்ற போர்களால் தான், ஈசனின் ஆலயம் கவனிப்பாரின்றி போய்விட்டது’ என்கிறார்கள்.

எது எப்படியோ, அழகே உருவான, அபூர்வமான இந்த ஈசனின் ஆலயம் சிதைந்து விடக் கூடாது. அதைவிட இழிச்செயல் வேறெதுவும் இல்லை. கண்ணுக்கெதிரே ஒரு சிவாலயம் சிதைந்து போவது என்பது நம் கலாசாரத்துக்கு விடப்படும் சவால். அந்நியர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த காலத்தில், நம் ஆன்மிகம், கலை, கலாசாரம் ஆகியவற்றின் நிலைக்களனாகத் திகழ்ந்த எண்ணற்ற ஆலயங்களைக் காப்பதற்காக ஆயிரம் ஆயிரம் உயிர்களைத் தியாகம் செய்த வரலாற்றை இந்த தேசம் முழுக்கக் கண்டிருக்கிறது.

நமது தொன்மையான அடையாளம் சிவவழிபாடு. அடையாளத்தை இழந்த இனம், நிச்சயம் மற்றவர்களின் ஆதிக்கத்தில் அவதியுறும். நம்முடைய அடையாளமான ஆலயங்களைப் புனரமைப்போம். அதில் அன்றாடம் பூஜைகளும் விழாக்களும் நடைபெறச் செய்வோம்.

புல் நுனியிலிருக்கும் பனித்துளியைப் போல இந்த வாழ்வு நிலையில்லாதது, எனவே வாழ்வு அழியுமுன் நல்லறங்கள் செய்து நாயகனைத் தொழுவோம். தோல் பையாகிய உடம்பிலிருந்து ஜீவனாகியக் கூத்தன் கிளம்பும் முன்னர் அறங்கள் செய்வோம். அன்பர்களே வசதியில் மேலான ஆலயங்களுக்கு மட்டுமே வாரி வழங்கி வழிபட்டு வருகிறீர்களே? ஒருவேளை விளக்கேற்றக்கூட வழியின்றிக் கிடக்கும் இதுபோன்ற ஆலயங்களையும் கொஞ்சம் கண்ணெடுத்துப் பார்க்கலாமே!

வரப்புயர கோன் உயரும் என்றால் வழிபாடு உயர வம்சம் உயரும்தானே? மெல்லிய இழைகளால் ஒரு சிலந்திகூட ஈசனுக்கு ஆலயம் எழுப்பிய புராணத்தைக் கண்டிருக்கிறோம். சிலந்திக்கு இருக்கும் வைராக்கியம் நமக்கு இல்லையா? இயன்றதைக் கொடுப்போம் ஈசனுக்கு. சீதைக்கு இரங்கிய சீராளன் நம் எல்லோரையும் காப்பான். திருவிளக்கிட்டாரை தெய்வம் அறியும்; திருப்பணிக்கு இட்டாரை தெய்வம் காக்கும். இது சத்தியமான உண்மை. நமது முன்னோர்கள் அமைத்த கற்றளி ஆலயங்களைப் போல இனி நம்மால் உருவாக்க முடியாது; இருப்பதையேனும் புனரமைத்து, பொலிவு குன்றாமல் காப்போம். அதற்கு எல்லோரும் பொருளுதவி செய்வோம்.

‘பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.’

எல்லாச் சுமைகளையும் ஈசன் சுமக்கக் காத்திருக்கிறான். வீணே மனம் சஞ்சலம் கொள்ளாமல் அவன் தாள் பணிந்து அவனுக்கே ஆளாவோம்.

-மு. ஹரி காமராஜ்

படங்கள்: பெ. ராகேஷ்

ஓர் எச்சரிக்கை!

நமது சக்தி விகடன் இதழில், `ஆலயம் தேடுவோம்’ பகுதியில் வெளியாகும் திருக்கோயில்கள் பலவும் வாசகர்களின் அளப்பரிய பங்களிப்போடு புதுப் பொலிவு பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

அதேநேரம்... அடையாளம் தெரியாத சில வெளிநபர்கள், தனியார் தொலைக் காட்சி மற்றும் யூடியூப் சேனல்களின் பெயரிலும், ஆன்மிக ஆர்வலர் எனும் போர்வையிலும் 'ஆலயம் தேடுவோம்' பகுதியில் வெளியாகும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு, பணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று அறிகிறோம்.

ஆகவே, `நீங்கள் சிறிது பணம் கொடுத்தால், எங்கள் தரப்பில் பெருமளவில் திருப்பணிக்குப் பணம் ஈட்டித் தருகிறோம்’ என்றோ, ஏதேனும் தனியார் தொலைக்காட்சியின் பெயரைச் சொல்லி, `அதில்தான் நான் பணிபுரிகிறேன். கட்டணமாக இவ்வளவு தொகையை என் வங்கிக் கணக்கில் போடுங்கள். எங்கள் சேனலில் உங்கள் கோயிலைப் பற்றிய செய்தியை வெளியிடுகிறேன்’ என்றோ, அல்லது இதுபோன்று வெவ்வேறு காரணங்களைச் சொல்லியோ எவரேனும் உங்களைத் தொடர்பு கொண்டு பேசினால், அவர்களிடம் ஏமாறவேண்டாம் என்று ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

திருப்பணிக் குழுவில் உள்ளவர்களுக்கோ, அல்லது ஆலயத் திருப்பணிகளில் தம்மை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டவர்களுக்கோ இப்படி சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் தொலைபேசி அழைப்புகள் வந்தால், உடனடியாக சக்தி விகடனைத் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

- ஆசிரியர்

உங்களுக்காக...

ஸ்வாமி: அருள்மிகு சீதப்பட்டீஸ்வரர்

அம்பாள்: பார்வதியம்மை

திருத்தலச் சிறப்பு: சீதாதேவியின் மனக்குறையைப் போக்கிய தலம்.

பிரார்த்தனைச் சிறப்பு: இந்த ஆலயத்தில் வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்கிறார்கள். குறிப்பாக வெப்பு நோய்கள் குணமாகும். மேலும் கணவன் மனைவிக்கிடையே உண்டாகும் பூசல்கள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

எப்படிச் செல்வது..?: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் அரசூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH 45) அரசூருக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாடல் பெற்ற தலமான திருமுண்டீஸ்வரம். அந்தத் தலத்துக்கு வடக்கில் தென்மங்கலம் என்ற கிராமத்தில் ஆலயம் அமைந்துள்ளது.

வங்கிக் கணக்கு விவரம்:

A/c Name:
JOTHIMALAI IRAIPANI THIRUKOOTAM
A/c.No: 003001001375563
Bank Name: City Union Bank
Branch: Kumbakonam Town Branch
IFSC No: CUIB0000003

மேலும் விவரங்களுக்கு: திருவடிக்குடில் ஸ்வாமிகள் - 7904380185