`என்னைக் கொல்லக்கூட முடியும்; ஆனால் மாற்ற முடியாது! என்ற தீவிர வைராக்கியம் கொண்டவர்களே உலக வரலாற்றை மாற்றி உள்ளார்கள். அந்த வகையில் சைவ சமயச் சூரியனாகத் தோன்றி, தென்னகம் முழுமையும் சிவ வழிபாட்டைச் செழிப்பாக மலரச் செய்தவர் அப்பர் பெருமான்.

திருமுனைப்பாடி நாட்டில் - திருவாமூர் எனும் ஊரில் வேளாண் மரபில் - குறுக்கையர் குடியில், புகழனார் மாதினியார் தம்பதியின் திருமகனாக ‘மருள்நீக்கியார்’ என்ற திருநாமம் கொண்டு அவதரித் தவர் அப்பர். கல்வி கற்க திருப்பாதிரிப்புலியூர் சென்றபோது அவர் ‘தருமசேனர்’ என்ற பெயரில் சமண சமய அறிஞரானார்.

தமக்கை திலகவதியாரால் மீண்டும் சைவ நெறி சேர்ந்து ஈசனைப் புகழ்ந்து முதல் பாடல் பாடியபோதே இவர் ‘வாகீசர்’ என்ற திரு நாமம் கொண்டார். சைவ சமயப் பெருமக்களால் `திருநாவுக்கரசர்’ என்றும், சம்பந்தரால் `அப்பர்’ என்றும், எட்டு வகை திருத்தாண்டகப் பாடல் எழுதியதால் ‘தாண்டகவேந்தர்’ என்றும் இவர் பெயர் பெற்றார். ஒப்பிலா உழவாரத் திருப்பணியால் ‘உழவாரத் தொண்டர்’ என்றும் சிறப்பு பெற்றார்.

பெருமைகள் பல பெற்ற சிவநெறிச் செல்வரான திருநாவுக்கரசர் அடைந்த துன்பங்களைப் போல வேறு எந்த அடியாரும் அடைந் திருக்கவே முடியாது எனலாம். எனினும், `எச்சூழலிலும் சைவ நெறியை விட்டு விலகவே மாட்டேன்’ என்ற அவரது வைராக்கியம் வென்றது; அதன்மூலம் தென்னகத்தில் சைவம் செழித்தது.

தமிழ்நாட்டுத் திருக்கோயில் சிறப்புகளை அதிக அளவில் பாடியவர் அப்பர் ஒருவரே. 49,000 தேவாரப் பதிகங்கள் (கிடைத்தது 3066 மட்டுமே) பாடிய ஒப்பிலா அடியார் இவர். தனிச்சிறப்பு மிக்க பைந்தமிழில் எண்ணற்ற உத்திகளைக் கொண்டு திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை எனப் புதுமைப் பாடல்கள் புனைந்தவர் அப்பர்.

இவை மட்டுமா? திருக்கோயில் தொண்டு, படிக்காசு பெற்றது, திருக்கதவம் திறந்தது, தீண்டிய நாக விஷத்தை முறித்தது, தெய்வ கன்னிகையை மறுத்தது, சாதிபேதமற்ற வாழ்வு, ஓட்டையும் தங்கத்தையும் ஒன்றாக நோக்கிய உயரிய துறவு வாழ்க்கை, தான் இருந்த இடத்துக்கே கயிலாயத்தை வரவழைத்த பக்தி என அப்பரின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தகு பெருமைகள் கொண்ட திருநாவுக் கரசரின் அவதார திருத்தலம் எது தெரியுமா?

பசுபதீஸ்வரர் தரிசனம்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்திருக்கும் திருவாமூர் திருத்தலமே அப்பர் பிறந்த ஊர். உழவாரத் திருப்பணி செய்வோர் அனைவருக்கும் இந்தத் திருத்தலமே மூலத்திருத்தலம் என்பார்கள். உழவாரத்தின் நாயகன் தோன்றிய இடமல்லவா இது? இங்குள்ள ஈசன் பசுபதீஸ்வரர். இங்குள்ள ஈசனை வியந்து அப்பர் ஸ்வாமிகள் பசுபதி திருவிருத்தம் பாடியுள்ளார். இந்தத் தலத்தை அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கலாம், அந்தப் பாடல்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பிறந்த ஊரைப் பாடாது இருந்திருப் பாரா? தற்போது இந்த ஊர் தேவார வைப்புத் தலமாகவே உள்ளது. இந்த ஊரின் பெருமையினை பெரிய புராணத்தில் சேக்கிழார் நெகிழ்ந்து போய் பாடியுள்ளார்.

கெடில நதிக் கரையையொட்டி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் மூன்று நிலை மாடக் கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தால் அப்படி ஒரு அமைதி. எண்ணற்ற சந்நிதிகளைக் கொண்ட இந்த ஆலயத்தில் ஈசனுக்கு எதிரே வாகீசப்பெருமான் திருக்காட்சி அளிக்கிறார். அம்பிகை திரிபுர சுந்தரி அம்மன். தல விருட்சம் கொன்றை. ஆலயச் சுற்றில் திலகவதியாரும் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். இங்கு வந்து ஈசனை வழிபட்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். பிறப்பிலா முக்தி நிலையை அடைய லாம் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்துக்கு தென் மேற்கில் உள்ளது திருநாவுக்கரசர் பிறந்த வீடு. சிவபக்தர்கள் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய இடம் அது!

நாவுக்கரசர் ஊன்றி வளர்த்த விருட்சம்!

ஓர் ஆலயமாகவே திகழ்கிறது அப்பரின் இல்லம். அங்கு நாவுக்கரசப்பெருமானே மூலவர். மேலும், அப்பரின் பெற்றோரான புகழனார் - மாதினியர் சந்நிதிகளும் உள்ளன. அவர்களோடு தெய்வமங்கை திலகவதியார் திருவுருவமும் அமைந்துள்ளது.

திருநாவுக்கரசர் கையில் உழவாரம்; திலகவதியார் கையில் திருவலகு; என்பது உலக வழக்கு. அதாவது உழவாரக் கருவி கொண்டு திருப்பணிகள் செய்தவர் அப்பர். திருவலகு எனும் பொருள் கொண்டு கோயிலை கூட்டிப் பெருக்கி மெழுகி திருப்பணி செய்தவர் திலகவதியார். அற்புதம்தான்! இந்த ஆலயத்தைச் சுற்றி வரும்போதே இந்த இருவரின் தியாக வாழ்க்கையும் நம் கண் முன்பு வந்து சென்றது. என்புருக்கும் நாவுக்கரசரின் அழகுப் பதிகங்களைப் பாடியவாறே ஆலயத்தை வலம் வந்தோம்.

ஆலயத்தின் மூலையில் திருக்காட்சி அளித்தது களர் உகாய் (களரி வாகை) விருட்சம். இது நாவுக்கரசப் பெருமானே வைத்த மரமாம். கொடியாகவும், செடியாகவும் விருட்சமாகவும் காட்சி தரும் அதிசய தாவரம் இது. இந்த மரத்தின் இலைகள் அறுசுவைகளும் கொண்டிருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

வாழவைக்க வந்த வாகீசர்

ஆணவத்தால் அறிவிழந்த ராவணன் கயிலாய மலையை தூக்கிச் செல்ல முற்படும்போது கைகள் சிக்கிக்கொண்டு அவதியுற்று அழுதான். அவனின் அவல நிலையைக் கண்டு இரங்கிய வாகீச முனிவர் அவனை விடுவிக்க உபாயம் சொன்னார். அதன்படி ஈசனை சாம கானம் பாடி களிப்புறச் செய்து வீர வாளும் பரிசாகப் பெற்று மீண்டான் ராவணன். தாம் விதித்த தண்டனையிலிருந்து மீளச் செய்த வாகீச முனிவரின் செயலைக் கண்டித்த ஈசன், பந்தபாச தளைகளில் கிடந்துழலும் உலக உயிர்களை அவ்வாறே மீட்டெடுக்க பூவுலகுக்குப் போகச் சொன்னார்.

ராவணனுக்கு உதவப் போய் ஈசனின் திருவடியை விட்டு பிறப்புச் சங்கிலியில் சிக்கிக்கொண்ட மடமையை எண்ணி வருத்தப் பட்டார் வாகீசர். அவரே பூவுலகில் உலக உயிர்களை நல்வழிப் படுத்தும் ஞானகுருவாக, அப்பர் திருவுருவாக வந்துதித்தவர் என ஞான நூல்கள் கூறுகின்றன. இதனாலேயே அப்பர் தனது பல பாடல்களில் இந்தச் சம்பவங்களை நினைவு கொள்கிறார் போலும். குருவின் வடிவாகவே விளங்கும் அப்பர் பெருமானின் இந்தத் தலம் குருவழிபாடை முதலாகக் கொண்டே இயங்குகிறது. இங்கே, களரி வாகை விருட்சத்தின் அடியில், ஆண்டுதோறும் பங்குனி ரோகிணி நட்சத்திர நாள் மற்றும் சித்திரை சதயத் திரு நாளில் இங்கு அப்பருக்குச் சிறப்புற வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சிவனாரின் திருவருளை வேண்டும் அன்பர்கள் யாவரும், வாழ்வில் ஒருமுறையேனும் திருவாமூருக்குச் சென்று வாருங்கள். அங்கே, சிவனருளோடு திருநாவுக்கரசரின் திருவருளையும் பெற்று உங்கள் வாழ்வை வரமாக்கிக்கொள்ளுங்கள்.

- மு. ஹரி காமராஜ்

படங்கள்: பெ. ராகேஷ்

திருநாவுக்கரசரையே தரிசித்தோம்!

திருவாமூரில் தரிசனம் நிறைவுற்று புறப்படும் வேளையில், மேலும் ஒரு அற்புதத் தகவல் கிடைத்தது நமக்கு. திருநாவுக்கரசரின் உறவு வழியில் - வேளாண் மரபில் குறுக்கையர் குடியில் வந்த பெரியவர் ஒருவர், பண்ருட்டியில் இறைப்பணி செய்து வருகிறார் என்ற தகவலைச் சொன்னார் அன்பர் ஒருவர். உடனே புறப்பட்டோம் பண்ருட்டிக்கு. பண்ருட்டி நகரின் சிறு மண்டபம் ஒன்றில், திருநாவுக்கரச வழிபாட்டு மன்ற சார்பில் நடைபெற்ற சொற்பொழிவில் பேசிக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். அவரின் வாய்மொழி, உடற் மொழி ஒவ்வொன்றும் திருநாவுக்கரசரையே நேரில் தரிசித்த சிலிர்ப்பைத் தந்தன நமக்கு. பேட்டி என்றதும், ``இந்த நாயேனுக் கென்று ஒரு புகழுமில்லை; அப்பர் பெருமானின் திருவடிக்கே எல்லாப் பெருமையும்’’ என்று விலகினார். `சரி, அப்பர் பெருமானைப் பற்றி சொல்லுங்களேன்’ என்றதும் தயங்கித் தயங்கிப் பேசினார்.

``அடியேன் அருணாசலம்; என் தந்தை நல்லதம்பி, பாட்டனார் வீரப்பிள்ளை. அப்பர் ஸ்வாமிகளின் திருக்குறுக்கையர் மரபில் 50 தலைமுறை தாண்டி வந்தவர்கள் நாங்கள். திலகவதி அம்மையார், அப்பர் ஸ்வாமிகள் இருவருக்குமே வாரிசுகள் இல்லாத நிலையில் அவர்களின் பங்காளிகளின் வழியே வந்தவர்கள் எங்கள் மூதாதையர். திலகவதியார் திருப்பணி பொருட்டு திருவதிகை சென்றுவிட, அப்பரும் கல்வி கற்க பாதிரிபுலியூர் சென்றுவிட எங்கள் மூதாதையரும் காலப்போக்கில் அந்த ஊரை விட்டு விலகி வந்துவிட்டார்கள்.

எலந்தம்பட்டு, சேமப்பட்டு, ஏரிப்பாளயம் என்ற ஊர்களில் வசித்து வந்தனர் எங்கள் மூதாதையர். இன்று பண்ருட்டி அருகே எலந்தப்பட்டு என்ற ஊரில் அருள்மிகு சந்திரசேகரேஸ்வரர் ஆலயத்தை நிர்வகித்து வருகிறோம். என்றாலும் எங்கள் வேர் இன்றும் திருவாமூரில்தான் உள்ளது’’ என்று தங்களின் மரபையும் மூதாதையரையும் பற்றி குறிப்பிட்ட பெரியவர், தொடரும் இறைப் பணிகள் குறித்தும் விவரித்தார்.

‘‘எங்கள் குலத்தில் திருமண சம்பந்தமாக வெளியில் எங்கும் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ இல்லை. எங்களுக்குள்ளேயே காலகாலமாக கொள்வினை கொடுப்பினை நடந்து வருகிறது. கலிப்பகை நாயனார் திலகவதி அம்மையாரை மணம் பேசி பின்னர் போர்க்களத்தில் உயிர்விட்டதால் திருமணம் நின்றுபோனது அல்லவா? அதனால் இன்றுவரை எங்கள் குலத்தில் யாரும் திரு மணம் குறித்துப் பேசி முடிக்க நிச்சயதார்த்தம் எதுவும் வைப்பது இல்லை. எங்களுக்குள் மணம் முடிப்பதால் எந்த பேச்சு வார்த்தையும் இன்றி, நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்கிறோம்.

எதுவுமே அப்பர் ஸ்வாமி மனம் வைத்துக் கொடுக்கவேண்டும் என்பதை நம்புகிறோம். என் 10 வயதிலேயே என் மாமா எனக்கு தீட்சை கொடுக்க முன் வந்தார்கள். அப்போது எனக்கு வாய்க்கவில்லை. பின்னர், எனது 40-வது வயதில் குடும்பத்தோடு தீட்சை பெற்றேன் என்று புன்னகைத்தவர், அப்பரைப் பற்றிச் சொல்லும்போது மிகவும் நெகிழ்ந்துபோனார்.

‘‘அப்பர் செய்த சாதனைகளை யாரும் செய்து விட முடியாது. எளியேன் துரும்பிலும் சிறியேன். யாக்கை நிலையாமை என்பதை சொல்லிக் கொடுத்ததே திலகவதியம்மையாரும் அப்பர் ஸ்வாமிகளும்தான். அவர்களின் கடல் போன்ற சொத்தை விட்டுவிட்டே அவர்கள் இறைத்தொண்டு செய்ய வந்தார்கள். அதையொட்டியே என்னுடைய முன்னோர்களும் திருவாமூர் விட்டு வந்தார்கள்.

`எல்லாமே அவர் கொடுத்தது. அப்பரைத் தவிர வேறு ஒரு சொத்தும் உண்டோ’ என்பார் என் தந்தை. திருவாமூர் ஆலயத் திருப்பணிக் குழுவில் இருந்து என் தந்தையார் பல தொண்டுகள் செய்திருக்கிறார். நானும் தேவார பண் ஆராய்ச்சி குழு செயலாளராக இருந்து கொஞ்சம் சேவை செய்தேன் அடியேன். அப்பரை எண்ணியவாறு சிவத்தொண்டர்களுக்கு இயன்ற பணிகளையும் செய்து வருகிறேன்.

ஆண்டுதோறும் திருவாமூர் களரி வாகை விருட்சத்துக்கடியில், அப்பருக்கான விழா நடத்தி வருகிறோம். எங்களுக்கு பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் தான் பொங்கல் திருவிழா நாள். அன்றுதான் அப்பர் ஸ்வாமிகள் அவதரித்தார். புது அரிசி கொண்டு பொங்கல் வைப்பதும் அன்றுதான். சித்திரை சதயமும் எங்களுக்கு முக்கிய நாள் அன்று தான் அப்பரின் குரு பூஜை தினம்.

ஐந்து முறை தல யாத்திரை மேற்கொண்டு 126 ஆலயங்களைப் பாடியவர் அப்பர் பெருமான். தள்ளாத வயதிலும் தேகம் தேய கடும் பிரயத்தனத்துடன் கயிலாயம் செல்ல முற்பட்டு, திருவையாறில் கயிலாய திருக்காட்சி கண்டவர். அடியேன் அவரை நினைத்தாலே போதும். அதுவே எனக்குக் கயிலைக் காட்சிக்கு சமம். மீண்டும் கர்ப்பச்சூடு வேண்டாம் என்று தொழுதவர் அப்பர். அதையே அடியேனும் வேண்டுகிறேன்.

சகலர், விஞ்ஞானகலர், பிரளயாகலர் என மூவகை ஆன்மாக் களுக்கும் குருவாக விளங்கி உய்விக்க வந்த வடிவம் அப்பர் ஸ்வாமிகள், அவரது பாடல்களைப் பாடி ஈசனைத் தொழுவோம். அதுவே இம்மைக்கும் மறுமைக்கும் இன்பமளிக் கும் செயல்’’ என்று பெரியவர் சொல்லிமுடிக்க நம் சிந்தை குளிர அவரை வணங்கி விடைபெற்றோம்.

எப்படிச் செல்வது?: கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து மேற்கே 8 கி. மீ. தொலை வில் திருவாமூர் தலம் அமைந்துள்ளது. திருவாமூர் பசுபதீஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாகவே நடக்கும் தூரத்தில் அப்பர் அவதரித்த திருத்தலமும் அமைந்துள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் 8 மணி வரை. (அப்பர் தலத்திலும் இதே நேரம் தான்)