Published:Updated:

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’
பிரீமியம் ஸ்டோரி
‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

Published:Updated:
‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’
பிரீமியம் ஸ்டோரி
‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

ந்த வருடம் கந்த சஷ்டி தருணத்தில், ஆறு நாளும் தினம் ஓர் அழகிய அலங்காரத்தில், முருகனின் விக்கிரக புகைப்படம் ஒன்று வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டது. அதை அனுப்பிய தோழி கல்யாணியின் ஸ்டேட்டஸிலும் அதே முருகனின் திருவுருவம்தான். நேரில் வந்து நிற்பது போல அந்தக் கண்களில் சிந்தும் கருணையும், இதழோரச் சிரிப்பும், முகத்தில் பொங்கும் அருளும்... அப்பப்பா, பார்த்துக்கொண்டே இருக்கலாம் போன்று அப்படி ஓர் அழகு! 

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

கல்யாணியிடம் விவரம் கேட்டேன். அவர், அந்த முருகன் குடியிருப்பது இங்கல்ல; ஆஸ்திரேலியாவில். அதுவும் தன்னுடைய தோழி கவிதாவின் இல்லத்தில் என்று சொன்னதுடன், கவிதாவின் முருகபக்தியையும் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்துகொண்டார்.

கவிதாவுடன் தொலைபேசியில் பேசியபோது, அவர் கூறிய தகவல்கள் நம்மைச் சிலிர்க்கவைத்தன.

‘‘எங்கள் குடும்பமே செந்தூரானுக்கு அடிமை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு பக்தி அவர் மீது. அப்பா-அம்மாவுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாக குழந்தை இல்லை. ‘குழந்தை பிறந்தால் செந்தூர் முருகனுக்கு வருடம்தோறும் மாசி மாதம் பச்சைப்பட்டு சாத்துகிறோம்’ என வேண்டிக் கொண்டார் களாம். அடுத்த வருஷமே நான் பிறந்தேன். எனக்கும் செந்தில் கவிதா என்றே பெயர் சூட்டினார்கள். என் தம்பிக்கும் அதே முருகனின் பெயர்தான். இப்போதும் தொடர்கிறது பச்சைப்பட்டு  சமர்ப்பணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

எனக்கு ஐந்து வயசு ஆகும்போதே, அம்மா கந்த சஷ்டி கவசம் படிக்கச் சொல்லிக்கொடுத் துட்டாங்க. ‘உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் கந்த சஷ்டி கவசம் படி’ன்னு அம்மா அடிக்கடி சொல்லிச் சொல்லி, அது அந்த சின்ன வயசிலேயே ஆழ்மனசில் நல்லாப் பதிஞ்சுபோச்சு. இப்போதும், எனக்கு என்ன மனக் கஷ்டம் என்றாலும் கந்தசஷ்டி கவசமே துணை!

சஷ்டியின்போது ஆறு நாளும் பானகம் மட்டும் குடிச்சிட்டு அம்மா விரதம் இருப்பாங்க. ‘சஷ்டி விரதம் இருக்கிறதுக்கு மிகுந்த மன உறுதி வேணும்’னு அம்மா சொல்வாங்க. நான் விரதம் இருக்கும்போதுதான் அதை உணர்ந்தேன். இப்போதும் அந்த விரதத்தைத் தொடர்கிறேன். ஆனால், இப்போது ஆஸ்திரேலியாவில் இருப்ப தால், நேரடியாகச் சென்று சூரசம்ஹாரம் பார்க்க முடியாது. இருந்தாலும் 6 நாள் விரதத்தை திருப்தியா கடைப்பிடிக்கிறேன்.

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

எனக்கு 2001-ல் திருமணமாச்சு. கணவர் விவேக் பழநியைச் சேர்ந்தவர். அதுவும் முருகனின் அருள்தான். அவரும் முருக பக்தர். வேறென்ன வேண்டும். இப்போ நானும் குழந்தைகளும் ஆஸ்திரேலி யாவில் இருக்கோம். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. அவர் தோஹாவில் வேலை பார்க்கிறார்’’ என்று குடும்பத்தைப் பற்றி விவரித்த கவிதா, தன் வீட்டு அழகன் முருகனைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

‘‘ஆஸ்திரேலியாவில் வீடு கட்டும்போதே, முருகனுக்கென்று வீட்டில் தனியா ஓரிடம் என்று தீர்மானித்து கட்டிட்டோம். ஆனால், முருகன் சிலைதான் நாங்க எதிர்பார்த்தது போல கிடைக்கவே இல்லை. கடைசியில் மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்தில் ஒரு கடையில் இந்த முருகன் சிலையைப் பார்த்தோம். பார்த்ததுமே பிடிச்சுப்போச்சு.

2015 ஜனவரியில் வாங்கி, பொள்ளாச்சியில் காமாட்சி அம்மன் கோயிலில் வெச்சு, முறைப்படி அபிஷேகம் எல்லாம் பண்ணி, ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வந்தேன். வீட்டில் முருகனுக்கான இடத்தில் அவரை அமர்த்தியதுமே, அந்த இடமே கோயில் போல  தெய்விகமா மாறிடிச்சு.

அந்த வருஷம் சஷ்டி வந்ததும், எனக்கு ஓர் யோசனை. மாசி மாதம் திருச்செந்தூர் முருகனுக்கு, பச்சை, சிவப்பு, வெள்ளை சார்த்துவதை நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து பார்த்திருக்கேன். செந்தூர் முருகனுக்கான அந்த அலங்காரங்கள் எனக்குள் பதிஞ்சு போச்சு. அதேபோல எங்க முருகனுக்கும் சஷ்டி ஆறு நாளுக்கும் அலங்காரம் பண்ணினால் என்னன்னு தோணுச்சு! அப்போதிலிருந்து மூணு வருஷமா, சஷ்டியின் ஆறு நாளும் விதம் விதமா அலங்காரம் பண்ண ஆரம்பிச்சேன்.

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

முருகனுடைய கிரீடம், வேஷ்டி, துண்டுக்காக விதம் விதமா துணிகள் வாங்கி, நானே தைச்சிடுவேன். அதேபோல், முருகனுக்கு பார்த்துப் பார்த்து நிறைய நகைகள் வாங்குவேன். எங்களுடைய நகைகளையும் போடுறதுண்டு. அலங்காரம் பண்றதோட புகைப் படம் எடுத்து அதை நண்பர் களுக்கும் பகிர்வேன். இப்ப, வாட்ஸ் ஆப்பில் எங்க முருகர் ரொம்ப பாப்புலர்’’ என்று மகிழ்ந்தவர்,   ``சிகாகோவில் இருக்கும் ஒருத்தருக்கு யார் மூலமாகவோ எங்கள் முருகனின் படம் கிடைக்க, அதை அவர் அங்குள்ள கோயிலின் சூரசம்ஹார அழைப்பிதழில் போட்டிருந்தார் என்றால் பார்த்துக்கோங்க’’ என்கிறார் பெருமிதத்தோடு.

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

அழகு முருகனின் வேலாயுதம் திருப்பரங்குன்றத்தில் வாங்கியதாம். ``போர் முடிந்து முருகன் வெற்றியோடு திரும்பிவந்த தலம் திருப்பரங்குன்றம். அந்தத் தலத்தில் மட்டும்தான், புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று மலைக்கு மேலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு முருகனின் வேலை எடுத்துச் சென்று அபிஷேகம் செய்வாங்க. அந்த தலத்தில் இருந்து வந்த வேல் இது’’ என்று வேலின் மகத்துவத்தைச் சொல்லும் கவிதா, தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘எப்போதும் நாங்க சொல்லும் மந்திரம் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்பதுதான். எங்கள் குடும்பத்துக்கும் எங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் முருகனே துணை; அவனே கர்த்தா.

என்னால் ஒரு வேளைகூட சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் சஷ்டி விரதம் இருக்கும்போது, எப்படி 6 நாள்கள் சாப்பிடாம இருக்கேன்றது எனக்கே புரியாத புதிர். அந்த நேரத்தில் ஒரு சக்தி வரும் பாருங்க... அதை அனுபவிச்சாதான் புரியும்! விரதம் முடிச்சதும் உடம்பே லேசாகிடும்; மனம் நிர்மலமா, அமைதியா இருக்கும். அது அருமையான சுகானுபவம்; வார்த்தைகளால் சொல்ல முடியாது.

‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்!’

18 வருஷங்களா வெளிநாடுகளில் இருந்தாலும், வாய்ப்பு கிடைக் கிறப்போ எல்லாம் திருச்செந்தூர் போயிடுவேன். அந்தச் செந்தூர் முருகன் முன்னால் போய் நிக்கிறப்ப எதுவுமே தோணாது; கண்ணீர்தான் வரும். அதேபோல், பிள்ளைகள் பிறந்தநாளுக்கு அங்கே ஷண்முக அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வந்திடும்.  ‘கண்ணை மூடினா மனசுக்குள்ள சாமி வரணும். முருகனைக் கொண்டு வந்து முன்னாடி நிறுத்திக்கணும்’ என்பார் அம்மா. நானும் அப்படித்தான். விழித்திரை மூடினால், சட்டென்று  மனக் கண்ணில் வந்து நிற்பான் முருகன்! அப்புறமென்ன... அவனிருக்க பயமேன்?!’’ என்று மனநிறைவோடு கூறிமுடித்தார் செந்தில்கவிதா.

போன் திரையில் மீண்டும் ஒருமுறை அந்த ஆஸ்திரேலிய அழகனைத் தரிசித்தோம்... அவன் புன்னகை, கவிதாவின் வார்த்தை கள் ஒவ்வொன்றும் சத்தியம் என்று கட்டியம் கூறுகிறது!

- பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism