
`மகத்துவம் அருளும் அகத்தியர் ஆலயங்கள்' கட்டுரை அருமை. குடும்பத்தோடு தரிசிக்க ஆயத்தமாகி விட்டோம்.
- பாலசுப்பிரமணி, திருச்சி
திருவாதிரை மங்கலம் செய்திகள் தித்திக்கும் தகவல்களோடு எங்களை மகிழ்வித்தது.
- சரண்யா, கும்பகோணம்
வாசகர் அனுபவத்தில் சாயிநாதரின் அருளைப் படித்து மெய்சிலிர்த்தோம்!
- கவிதா, மேட்டூர்
`சக்தி யாத்திரை' கட்டுரை உண்மையில் எங்களை ஏங்க வைத்துவிட்டது. நாங்களும் அடுத்த யாத்திரைக்காகக் காத்திருக்கிறோம்.
- பவானி, சென்னை - 4
சர்வ ஜீவன்களிடத்தும் சதாசிவனை தரிசித்த மகா பெரியவரின் மகிமையும் கருணையும் உன்னதமானவை.
- ஜீவானந்தம், புதுக்கோட்டை
`பாதிரி ஐயா' என பக்தர்கள் வணங்கும் எங்கள் பாகை மேவிய முருகனைப் பற்றிய கட்டுரை, அந்த முருகனை நேரிலேயே தரிசித்த நெகிழ்வைத் தந்தது.
- சிவஞானம், அரக்கோணம்