Published:Updated:

திருச்செந்துார் கோயில் மாசித் திருவிழா - பிப்ரவரி 10-ல் கொடியேற்றம் !

திருச்செந்துார் கோயில் மாசித் திருவிழா - பிப்ரவரி 10-ல் கொடியேற்றம் !
திருச்செந்துார் கோயில் மாசித் திருவிழா - பிப்ரவரி 10-ல் கொடியேற்றம் !

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களுள் மாசித் திருவிழா முக்கியமானது 

இந்த ஆண்டு மாசித் திருவிழா பிப்ரவரி 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற உள்ளது. 

பிப்ரவரி 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும் 16-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. அன்று காலை 8.45  மணிக்கு மேல் ஆறுமுகநயினார், வெற்றி வோ் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பின்னர் பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

விழாவின் எட்டாம் நாளான 17-ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  பிப்ரவரி 19-ம் தேதியும்  20-ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும்  நடைபெறும்.