Published:Updated:

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’
பிரீமியம் ஸ்டோரி
‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

Published:Updated:
‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’
பிரீமியம் ஸ்டோரி
‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

? எனக்கு இதுவரை சரியான உத்தியோகம் அமையவில்லை. எனக்கு எப்போது நல்ல உத்தியோகம் அமையும், என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

- ஆர்.எஸ்.சங்கரநாராயணன், சென்னை-44

ஒருவருக்கு நல்ல வேலை அமையவேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் தனம் - செல்வந்த - சம்பத் யோகம் சிறப்பாக அமையவேண்டும். பொதுவாக இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்பதில்லை. முற்காலத்தில் ஒவ்வொருவரும் அவருக்குப் பிடித்தமான தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் காரணமாகவே, ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்ற பழமொழியும் ஏற்பட்டிருக்கிறது.

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

தங்கள் ஜாதகத்தில் 5-ல் சுக்கிரன் உள்ளார். ஆனால், தன ஸ்தானமாகிய 2-ம் வீட்டில் கேது அமைந்திருப்பதால், சம்பாதிப்பது முழுவதும் செலவாகிவிடும்.

மேலும், 10-ம் இடத்துக்கு சனியின் உபகோளான மாந்தியின் பார்வை உள்ளதால், நல்ல வேலை அமைவது தடைப்படுகிறது. தற்போது உங்களுக்கு சுக்கிர தசை நடந்தாலும்கூட, என்ன செய்வது என்று புரியாத குழப்ப நிலையில் இருக்கிறீர்கள்.
 
பொதுவாக ஒருவர் நன்றாகப் படித்துவிட்டால், தன் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் அப்படி முயற்சி செய்யவேண்டாம். கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வேலை சார்ந்த துறையில் நீங்கள் ஜொலிக்க முடியும். ஜாதகப்படியும், 10-ம் பாவம் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பதால், கர்ம தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. தினமும் வீட்டில் நெய்விளக்கு ஏற்றிவைத்து, பதிகங்கள் மற்றும் பாசுரங்கள் பாடி, வழிபாடு செய்து வாருங்கள். விரைவில் நிலைமை மாறும்; நல்லதொரு வாய்ப்பு வரும். அப்படி, கிடைக்கும் வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்; வாழ்க்கை செழிக்கும்.

? இந்த ஜாதகர் ஸ்ரீராமுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமண பிராப்தி உள்ளதா, ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

எஸ்.ராஜேஸ்வரி, சென்னை - 91

ஜாதகத்தைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்ததில், ஜாதகர் சூரியனின் பாவசந்தி என்ற இக்கட்டான சூழலில் பிறந்துள்ளார். சித்திரை மாதம் 1-ம் தேதி அவர் பிறந்திருக்கிறார். சூரியன் அசுவினி முதல் பாதம், மேஷ ராசியில் இருப்பதாக ராசிக் கட்டம் கூறினாலும், லக்ன பாவத்தின்படி பார்த்தால், சூரியன் மீன ராசியிலேயே இருக்கிறார். எனவே, சூரியனுக்குப் பாவசந்தி என்ற தோஷம் ஏற்பட்டுள்ளது. நவாம்சத்தில் 7-ம் பாவம் கன்னியாக இருப்பதும், அதன் இரு புறங்களிலும் பாவ கிரகங்கள் இருப்பதும் `பாவ மத்திய ஸ்திதி’ என்ற நிலை ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டன. மேலும் 7-க்கு உடைய அதிபதியான புதன், 6-ல் இருப்பது, 8-ல் உச்சம் பெற்றிருக்கும் சனி தசை நடப்பது போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. பாவசந்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய உரிய பரிகாரம் செய்ய வேண்டும். அத்துடன் அம்பாள் வழிபாடும் நலம் சேர்க்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

? எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல தொழில் அமையுமா?

- கோ.விஜய்கண்ணன், கிளாப்பாளையம்

நீங்கள் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் பிறந்திருக்கிறீர்கள். 10-ல் கேது இருப்பதாலும் தற்போது உங்கள் ராசிக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதாலும், எந்த வேலை கிடைத்தாலும் சரியாகச் செய்ய முடியாதபடி தடைகள் ஏற்படும். திருமணத்தைக் குறிப்பிடும் ஸ்தானமான 7-ம் வீட்டில் 3 கோள்கள் உள்ளன. அதே இடத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் நீசம் பெற்றிருக்கிறார். எனவே திருமணம் நடைபெறுவதில் தடை உண்டாகிறது.

குடும்ப ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்துக்கு உரிய செவ்வாய், 9-ம் வீடும் தன் வீடுமாகிய விருச்சிகத்திலேயே இருந்தாலும்கூட, அந்த வீட்டிலிருந்து 2-ம் வீடு 6-ம் வீடாக உள்ளது. எனவேதான் கடன் தொல்லைகளும் சேர்ந்திருக்கின்றன. சுக்கிரன் மற்றும் செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களைச் செய்வதுடன், நல்ல தொழில் அமைய கேது ப்ரீதியும் செய்யவேண்டியது அவசியமாகிறது.

? எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? கிடைக்காது எனில், நான் வேறு எந்தத் துறையில் பணிபுரிந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

- தி.ராமகிருஷ்ணன், சென்னை - 56

தங்கள் ஜாதகத்தில் 10-ம் இடத்துக்கு உரிய அதிபதி செவ்வாய், 11-ல் இருக்கிறார். லக்னத்தில் குரு உச்சம் பெற்றிருப்பதுடன், 9-ம் பார்வையாக பாக்கியஸ்தானத்தைப் பார்க்கிறார். 10-ம் பாவத்துக்குக் காரகரான சூரியன், 4-ல் நீசம் பெற்றிருந்தாலும்கூட, 7-ம் பார்வையால் 10-ம் இடமான ஜீவனஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே, தங்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும் 2021 வரை தங்களுக்குக் குரு தசை நடைபெறுவதால், நன்றாக முயற்சி செய்தால் அரசாங்க வேலை கிடைக்கும்.

? எனக்குத் திருமணம் தடைப்பட்டு வருகிறது. ஏதேனும் தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

 - சி.நாராயணன், பெங்களூர்

திருமணம் தடைப்படுவது பற்றியே பல கேள்விகள் வருவதால், அவ்வப்போது திருமணத் தடை ஏற்படுவதற்கான ஜாதக அமைப்புகள் பற்றி சில விஷயங்களைக் கூறி வருகிறோம். பொதுவாக ஒருவரின் திருமணம் என்பது அவரது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகநிலைகளின்படியே நடைபெறும்.

திருமண பாக்கியத்தைப் பொறுத்தவரையிலும், 7-ம் பாவ அதிபர், அந்த பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள், 7-ம் வீட்டில் உள்ள கிரகங்கள், அந்த பாவத்துக்கு உரிய கிரகத்தைப் பார்க்கும் கிரகங்கள், 7-ம் பாவ அதிபதியுடன் சேர்ந்துள்ள கிரகங்கள், சந்திரன் உள்ள ராசியிலிருந்து 7-ம் பாவ அதிபதி உள்ள வீடு, களத்திரகாரகன் சுக்கிரனின் நிலை போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 7-ம் பாவத்தை அனுகூலமாகப் பார்க்கிற தசாபுக்தி காலங்கள், சூக்ஷ்ம பிராண காலங்கள், 7-ம் பாவத்துக்கு அனுகூலப் பலன்களைத் தரும் கிரகங்களின் தசா புக்தி காலங்கள், 7-ம் வீட்டை அனுகூலமாகச் செய்யும் கிரகங்களின் தசா புக்தி காலங்கள் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

7-ம் பாவ அதிபதியின் யோகங்கள் அனுகூலமாக இருப்பது, 7-ம் பாவ அதிபதிக்கு அல்லது அந்த பாவத்துக்கு சுபர்களின் பார்வை இருப்பது போன்ற அம்சங்கள் இருந்தால், அந்த ஜாதகருக்கு நல்ல மனைவி, சொத்து, சுகம் என்று சகல சுக சௌக்கியங்களுடன் இல்லற வாழ்க்கை அமையும்.

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

உங்கள் ஜாதகத்தில் 7-ம் பாவம் நன்றாக இருந்தாலும், 5-ம் வீட்டில் நான்கு கிரகங்கள் இருப்பது சக்கரவர்த்தி யோகம் அல்லது சந்நியாச யோகத்தைக் குறிப்பிடுகிறது. ஆனாலும், 7-ம் வீட்டுக்கு உரிய குரு 9-ல் உள்ளதால் திருமண யோகம் உண்டு. உங்களுக்கு 7.8.20 வரை கேது தசை நடைபெறுவதால், கேது கிரகத்துக்கு ஹோமம் செய்து ப்ரீதி செய்துகொள்ளவும்.

- பதில்கள் தொடரும்...

- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

கருட புராணம் சொல்லும் அறிவுரை...

வாஸ்து பற்றி கருட புராணத்தில் குறிப்பிட்ட சில தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு வீடு கட்ட ஆரம்பிக்குமுன் அடிக்கல் நடும் நிகழ்வு நடத்தப்பட வேண்டும். அப்போது வீடு அமைய இருக்கும் இடத்துக்கு வெளிப்பக்கத்தில் 32 தெய்வங்களை வழிபட வேண்டும். அந்தத் தெய்வங்களின் பெயர்கள்: ஈசானன், பர்ஜன்யன், ஜெயந்தன், இந்திரன், சூர்யன், சத்யகன், ப்ருஹு, ஆகாஷா, வாயு, பூஷா, விதாதா, க்ரஹணஷத்ரா, யமன், கந்தர்வன், ப்ருகு, ராஜா, மிருஹா, பிட்ரிஸ், டௌபாரிகா, சுக்ரீவன், புஷ்பதந்தன், கனதீபன், அசுரன், சேஷன், பாடன், ரோஹன், அகிமுக்யன், பல்லாடன், சோமன், சர்ப்பன், அதிதி மற்றும் திதி ஆகியோர்.

வீட்டுக்குள்ளேயே வணங்கப்படவேண்டிய நான்கு தெய்வங்களும் உண்டு. அவர்கள் ஆபா, சவித்திரன், ஜயன், ருத்ரன் ஆகியோர் ஆவர்.

அதேபோல், மேலும் சில அறிவுரைகளையும்  சொல்கிறது கருடபுராணம்.

வீட்டின் வாசலில் சிறு கோயில் அமைதல் வேண்டும். நாம் கிழக்கு முகமாக நின்று பூஜைகளை நடத்தும் விதத்தில் அந்தக் கோயில் அமைந்திருக்கவேண்டும்.பொருட்கள் வைக்கும் அறை, வீட்டின் வடக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

கிணறு, போர்வெல் போன்ற நீர்நிலைப் பகுதிகள் மேற்குப் பக்கமும், விருந்தினர்கள் தங்கும் இடம் தெற்குப் பக்கமும் அமைதல் வேண்டும். பொதுவாக ஒரு வீட்டில் எட்டுக் கதவுகள் அமைந்திருக்க வேண்டும் என்று கருட புராணம் தெளிவாகச் சொல்கிறது.

- கே.பாலன், சென்னை-44

பூரணச் சந்திரன் வழிபாடு!

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

ந்திரனை மனோகாரகன் எனப் போற்றுகிறது ஜோதிடம். மனதில் குழப்பங்கள் நீங்க, சந்தோஷம் பெருக, சந்திரனை வழிபட வேண்டும். பெளர்ணமி தினங்களில், சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்புப் பாத்திரத்தில் வைத்து, சந்திரனுக்குச் சமர்ப்பித்து வழிபடுவது அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும். வழிபாட்டின்போது, வியாச மகரிஷி அருளிய கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.

ததிஷாங்க துஷாராபம் ஷீரோ தார்ணவ சம்பவம்
நமாமி சஷினம் ஸோமம் ஷம்போர்மகுட பூஷணம்

கருத்து: பாற்கடலில் இருந்து தோன்றியவனும், சிவபெருமானின் சிரத்தை அலங்கரிப்பவனும், தயிர், சங்கு, மேகம் போன்று வெண்மை நிறம் கொண்டவரும், அமிர்தம் போன்றவருமான சந்திர பகவானை வணங்குகிறேன்.

- சி. அண்ணாமலை, திருப்பூர்

‘உத்தியோக வாய்ப்பு எப்போது?’

வாசகர்களே...  ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism