Published:Updated:

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

Published:Updated:
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

குருகுல வாசம் முடிந்ததும் தன் குருநாதருக்குத் தட்சிணை அளிக்க விரும்பினான் மணிகண்டன். ஆகவே, உரியவகையில் குருநாதருக்குப் பொன் - பொருள்களைச் சமர்ப்பித்து, ‘`தங்களுக்குக் குருதட்சணை அளிக்கவேண்டியது எனது கடமை. அரசர் அனுப்பியுள்ள இந்தப் பொன்னையும் பொருளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

முனிவரோ, “மணிகண்டா! நீ சாதாரண மனிதன் அல்ல என்பது எனக்குத் தெரியும். இந்தப் பொன்னும் பொருளுமா எங்களுக்கு முக்கியம். எங்களுக்கு ஒரு மகன் இருப்பதும் அவன் பிறவியிலிருந்தே ஊமை என்பதும் உனக்குத் தெரியாதா. அவன் குறையை போக்க மாட்டாயா” என்று வேண்டினார்.

உடனே, குருவின் மைந்தனை அழைத்த மணிகண்டன், “என்னையே பார். நான் சொல்வதை நம்பிக்கையுடன் திரும்பச் சொல்” என்று கூறி, பஞ்சாட்சர மந்திரத்தையும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் ஓத, குரு மைந்தனும் ஒவ்வொரு மந்திரத்தையும் தெளிவாக உச்சரித்தான்.

மைந்தன் வாய் திறந்து மந்திரம் சொல்வதைக் கண்டு நெக்குருகிப் போனார் குருநாதர். மகனுக்கு அருள்புரிந்த ஐயப்பனை, இருகரம் குவித்து வணங்கினார். மணிகண்டன், தனது அவதார ரகசியத்தை வேறு எவரிடமும் பகிரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டான். அவதார நோக்கம் நிறைவுற்றதும் மற்றவர்கள் அறிந்துகொள்ளட்டும் என்பது அவன் சித்தமாக இருந்தது.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

குருகுலத்திலிருந்து மணிகண்டன் அரண்மனைக்குத் திரும்பினான். ` வெகு விரைவில் அவனுக்குப் பன்னிரண்டு வயது பூர்த்தியாகிவிடும்; விரைவில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பட்டுவிடுவான்’ என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

இந்த நிலையில்தான் மகாமந்திரி, `தங்களுக்கென்று மகன் இருக்க, காட்டில் கண்டெடுத்த மணிகண்டனை ஏன் அரச வாரிசாக்க வேண்டும்’ என்று கூறி, மகாராணியாரின் மனதை விஷமாக்கினான். விளைவுகள் நாமறிந்தவையே. கடும் தலைவலி கண்டதாக ராணியார் நாடகம் ஆடினார். `மூலிகைகளைப் புலிப்பாலில் கலந்துகொடுக்க வேண்டும்' என்று கூறி, மருத்துவனும் அவருக்குத் துணை சேர்ந்தான். மணிகண்டன் இந்த வாய்ப்பை தனது அவதார நோக்கத்தை நிறைவேற்ற சாதக மாக்கிக்கொண்டான். புலிப்பால் கொண்டு வருவதாகச் சொல்லி வனத்துக்குப் புறப்பட்டான்.

வழியில் உணவுக்கு வேண்டி தேங்காய் ஒன்றையும் அவல்-பொரி போன்ற பண்டங் களையும் இருபிரிவுகளாகக் கட்டி, தலையில் வைத்துக்கொண்டு, வில்லும் அம்பும் ஏந்தியபடி கிளம்பினான். கானகம் வந்து சேர்ந்த மணிகண்ட னுக்குத் துணையாய் சிவபெருமானின் பூதப்படை வந்து சேர்ந்துகொண்டது.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

வாபுர கடுசப்தஸ்ச வீரபத்ரோதி வீர்யவான்
கூபநேத்ரோ கூபகர்ணோ கண்டா கர்ணோ மஹாபலி
இத்யாதயஸ்ச பூதாஸ்தே வக்ஷாதீதாஸ்ச தை ஸ:
ப்ராப பம்பாதடம் சீக்ரம் பூதானாம்பதிரவ்யய:

வாபுரன், கடுசப்தன், கருப்பன் முதலான பூதகணங்கள் சூழ பூதநாதனாக பகவான் பம்பை நதி தீரத்துக்கு வந்து சேர்ந்தான்.மூவுலகுக்கும் நாதனான ஹரிஹர புத்திரன், மணிகண்டனாக அவதரித்து பம்பைக்கு வந்திருப்பதை அறிந்த மாமுனிகள் யாவரும் அங்கே கூடி, பகவானை தரிசித்து வரவேற்றார்கள்.
இனி, ஒரு கணமேனும் பரம்பொருளான ஐயனைப் பிரிய மனம் இல்லாத அந்த முனிவர்கள்,  பம்பா நதியிலிருந்து 12 யோசனை தூரமுள்ள ஒரு மலை முகட்டில் - தங்கத்தினாலான ஒரு கோயில் அமைத்து, அங்கே மணிகண்ட தேவனை அழைத்துச் சென்றார்கள்.

தூரே பஞ்சத்வயே தேவயோஜனாயாம் து தத்ர த:
ரம்யே பர்வதச்ருங்கார்க்ரே தாபசாஸ்ச்ச தபோபலான்
க்ருத்வா ருக்மாலயம் தஸ்மினந்தரே மணிகந்தரம்...

அங்கே, வேதவிதிப்படி சடங்குகள் செய்து ரத்தினமயமான ஒரு சிம்மாசனத்தில் அவனை தர்மசாஸ்தாவாக இருந்தி பிரதிஷ்டை செய்தார்கள். இரவு பகல் பாராது அவனை வணங்கித் துதித்தார்கள். பக்திக்கு வசப்பட்ட பகவானும் அங்கேயே இருந்து அருள்பாலிக்கலானார்.

பகவானுக்குத் தங்கத்தாலான இந்தக் கோயில் உருவான இடம் பொன்னம்பலமேடு என்று அழைக்கப்பட்டது. மூவுலகிலும் இதற்குச் சமமான இடம் கிடையாது என்கின்றன ஞானநூல்கள்.

இப்படி, பகவான் இங்கே பொன்னம் பலத்தில் கோயில் கொண்டிருப்பதைத் தேவர்களுக்கு எடுத்துச் சொன்னார் பிரகஸ்பதி.

“பரமேஸ்வரரின் கூற்றுப்படி பகவான் பூதநாதன், மானுடனாக - மணிகண்டனாக அவதரித்து, பம்பைக்கரையை அடுத்த பொன்னம்பலத்தில் கோயில் கொண்டிருக் கிறார். அவரை நாடி நம் குறையைச் சொல்வோம். மஹிஷியை அழிக்கவல்லவன் அந்த ஹரிஹரசுதன் ஒருவனே” என்றார்.

அதன்படியே தேவர்களும் முனிவர்களும் பம்பை தீரத்தை வந்தடைந்தார்கள். பகவான் கோயில்கொண்டுள்ள பொன்னம்பலத்தை அடைவது இயலாத காரியம் என்பதால், பம்பைக் கரையிலேயே நின்று, பொன்னம்பலம் இருக்கும் திசையை நோக்கி பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, அவர்கள் ஐயனைத் துதித்துப் பாடிய ஸ்லோகம் அதி அற்புதமானது. அந்தத் துதி, ஆதிபூத நாதனின் செவிகளை எட்டியது. பம்பைக்கரையிலேயே தேவர்கள் முன் காட்சி கொடுத்தார் மணிகண்டன்.

“உங்கள் துதிகளால் மகிழ்ந்தேன். உங்கள் குறைகளைக் களைவேன். வல்லரக்கியை மாய்த்து, உங்கள் வாழ்வினை மீட்டளிக்கிறேன். உங்களால் சொல்லப்பட்ட இந்தத் துதிகளைக் கொண்டு என்னைப் போற்றுவோருக்கு குறைவிலாத வாழ்வினை அளிப்பேன். நீங்கள் ஸ்வர்க்க லோகம் புறப்படுங்கள்” என்று ஆணையிட்டுவிட்டுப் புறப்பட்டார்.

மஹிஷியுடன் மன்னவனின் போர்...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

வாபுரன், கடுசப்தன், வீரபத்ரன், கூபநேத்ரன், கூபகர்ணன், கண்டா கர்ணன், மஹாபலி போன்ற ஸேனா நாயகர்கள் சூழ ஐயன் ஆயுதபாணியாக தன்னுடைய ரதத்தில் ஏறி போருக்குப் புறப்பட்டார்.

பூதப்படைகளின் போர் முழக்கத்துடன் தன்னை ஒருவர் போருக்கு அழைப்பதைக் கண்ட மகிஷி, அடங்காத ஆவேசம் கொண்டாள். தன் உடலின் ஒவ்வொரு ரோமக் கால்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மகிஷப் படைகளை உற்பத்தி செய்து ஏவினாள். ஐயனும் தன் அஸ்திரங்களால் அவளுக்குப் பதிலடி கொடுத்தார். மகிஷியின் படைகளை மாய்த்து அழித்தார். ஐயனின் முன் மகிஷியின் மாயைகள் அனைத்தும் தகர்ந்து வீழ்ந்தன. மீதமிருந்த மகிஷியின் படைகளைப் பூதப் படைகள் துவம்சம் செய்தன.

தொடர்ந்து கதாயுதத்துடன் களம் புகுந்தாள் மகிஷி. பகவானும் அவளை அநாயாஸமாக எதிர்கொண்டார். அம்புகளை மழையெனப் பொழிந்தாள் மகிஷி. ப்ரதி அஸ்திரங்களால் அரக்கியின் அஸ்திரங்களை அழித்தார் மணிகண்டன். இன்னும்பல அஸ்திர சஸ்திரங் களால் போரிட்டபோதும், தோல்வியென்னவோ மகிஷியிடம் விடாமல் ஒட்டிக்கொண்டது. எனினும் கடும்போர் தொடர்ந்தது.

வானவர்களெல்லாம் ஒன்றுகூடி இந்த மகா யுத்தத்தை தரிசித்ததுடன், மணிகண்டனின் வெற்றியை நாடி நின்றார்கள்.

மல்யுத்தம் தொடங்கியபோது, ஐயன் அவளை அழித்துவிட முடிவு செய்தார். சின்னஞ்சிறு பாலகனான மணிகண்டன், பிரமாண்டமான அரக்கியைத் தன் கைகளால் பிணைத்தார். பந்தாடுவதைப் போன்று, அவளை எடுத்து காற்றில் சுழற்றி வீசியெறிந்து விளையாடினார்.

மலையொன்று வீழ்ந்து நொறுங்கு வதைப் போல், மண்ணில் பம்பா நதிக்கு அருகிலிருக்கும் அழுதை நதிக்கரையில் வந்து விழுந்தாள் மகிஷிமுகி. அவள் விழுந்ததால் எழுந்த ஒலி, பதினான்கு உலகங்களையும் பத்து திசைகளையும் அதிரும்படிச் செய்தது.

அங்ஙனம் விழுந்த மகிஷி எழுவதற் குள், பக்தபரிபாலனான மணிகண்டன் அவள் மேலே குதித்து, ஆனந்த தாண்டவம் செய்யத் தொடங்கினார். தேவர்கள் மலர் பொழிய, யக்ஷ கின்னரர்கள் இசை முழுங்க, கந்தர்வர் கவிகள் பாட, தேவ துந்துபிகள் முழங்க, கிம்புரு நாரதாதி முனிவர்கள் கானம் பாட, மணிகண்டனும் இசையுடன் இசைந்து ஆடத் துவங்கினார்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பால்குண மாஸம் பௌர்ணமி கூடும்
உத்திரம் சேர்ந்திடும் நாளினிலே
தாள்பணி தேவரைக் காத்திட வேண்டி
மஹிஷியை வதம் புரிந்தே மகிழ
ஜயஜய என ஸ்துதி பாடிடும் அமரர்கள்
மலர் மழை பொழிந்தே வேண்டி நிற்க
அழுதையின் அருகே மஹிஷியின் உடல்மேல்
ஆடிடும் தாண்டவம் காணீரோ...

பகவானின் ஆனந்தத் தாண்டவத்தால் பூமி முதல் பாதாளம் வரை ஆடின. மகிஷியின் மதம் மடிந்தது. உரம் உடைந்தது; ஆங்காரம் அழிந்தது. இதைக்கண்டு பயந்தோடிய மற்ற அர்க்கர் கூட்டங்களைப் பகவானின் பூதப்படைகள் கொன்றழித்தன.

பகவானின் அவதார நோக்கமே மகிஷி சம்ஹாரம்தான். அது நிறைவுற்றதால், மீண்டும் பொன்னம்பலத்துக்கே வந்து, தேவர்கள் முனிவர்கள் பூஜிக்கும்படி வீற்றிருக்கவேண்டும் என்று யாவரும் ஐயனைப் பிரார்த்தனை செய்தார்கள்.

புன்முறுவல் பூத்த பூதநாதன், “அவதார நோக்கத்தின் ஒரு பகுதி முடிந்துவிட்டது. இனி, நான் நிரந்தரமாக எனக்கான ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அங்கே கலியுக மக்களுக்காக தவம் செய்யப் போகிறேன். அதற்குமுன், என்னை நினைத்து உருகும் பாண்டி யனைக் கண்டு திரும்புவேன்” என்று மொழிந்தார்.

தத்தரின் சாபத்தால் மகிஷ உருக்கொண்ட லீலாவதி, ஐயனின் திருவடியின் விசேஷத்தால் உண்மை உணர்ந்தாள்; தான் யார் என்று அறிந்தாள். தன்னுடைய தவறுகளை மன்னித்து, தன்னை ஆட்கொண்டு, சாப விமோசனமளித்து முக்தியும் தர வேண்டும் என்று ஐயனைப் பணிந்து அடைக்கலம் புகுந்தாள்.

மனமகிழ்ந்த ஐயன் மணிகண்டனும் அவளுக்கு அருள் செய்தார். அதன் பலனாக அரக்கி உடலை உகுத்து, தேவ சரீரம் பெற்று, ஒரு தேவதையாய்த் தோன்றி ஐயனைத் துதித்தாள்.

அவளிடம்  மணிகண்டன், ``இங்கே சபரி பர்வதத்தில் எனக்கான ஆலயம் ஒன்று அமையப்போகிறது. அங்கே நான் நிரந்தரமாகக் குடியிருக்கப் போகிறேன். என்னை தரிசிக்க இந்த மலை மீது ஏறி வருகிற, கோடிக் கணக்கான பக்தர்களுக்கு, இங்கே தவக்கோலத் தில் இருந்தபடி அருள் செய்யப்போகிறேன். அப்படி, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் நீயும் அருள் செய். அவர்களது வாழ்வில் மங்கலங் களை நிறைவேற்று” என்று அருளினார்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

மேலும், தன் முக்கிய பரிவாரமான வாபுரனை அழைத்து, “மஹிஷிமாரிகா வனம் (இன்றைய எருமேலி) என்று அழைக்கப்படும் பகுதியில் வாபுரக் கோஷ்டத்தை (கோட்டைப்படி) அமைத்து, அங்கே காவல் காத்திரு. என்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நீயே காவலன். விரைவில் நான் திரும்புவேன்” என்று கூறினார்.

ஆக, மாளிகைப்புறத்தம்மன் மணிகண்டனை மணம் செய்யக் காத்திருப்பதாகக் கூறப்படும் வரலாறோ, எருமேலியில் வாவர் என்ற நண்பர் மணிகண்டனுக்கு இருந்ததாகச் சொல்லப்படும் கதையோ பூதநாத உபாக்யான புராணத்தில் காணப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, அங்கே கிடந்த மகிஷியின் பூத உடலைக் கற்களைக் கொண்டு மூடுவது எனத் தீர்மானித்தார் மணிகண்டன்.

அரக்கியின் உடல் அல்லவா? எனவே அது வளரும் தன்மை கொண்டது. எனவே, அதைத் தன் காலால் உதைத்து ஓர் பள்ளத் தில் தள்ளி கற்களைக் கொண்டு மூடினார் மணிகண்டன். அதற்கு உதவியாக ஆளாளுக்கு கற்களைப் போட்டார்கள். அவளின் உடல் மீது மிகப்பெரிய கல்மலையே உருவாகி இருந்தது.

மகிஷியின் உடலை, மணிகண்டன் கற்களைக் கொண்டு மூடிய இடமே இன்றைய கல்லிடும் குன்று. மலைக்கு வரும் பக்தர்கள்,  அங்கே கல்லை வீசிவிட்டுத்தான் யாத்திரையைத் தொடர்வார்கள்.

- புராணம் தொடரும்...

தேவர்கள் பாடிய ஸ்துதி!

ஓம் நமஸ்தே பகவதே நமோ நாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே ஸர்வக்ஞாய நமோ நம:
கோர ஸம்ஸாரார்ணவஸ்ய தாரகாய நமோ நம:
தாரக ப்ரஹ்ம ரூபாய பூதநாதாய தே நம:

போத ரூபாய பூதாய புண்ய பூர்ணாயதே நம:
வர்ணத்ரய யுதேகாய ஓம் காராய நமோ நம
பகாராய நமஸ்துப்யம் ரேபாந்தாய நமோ நம:
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம:

பகாராய தகாராய ரேபாந்தாய நமோ நம:
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம:
ஸ்ரீச சங்கர புத்ராய ஸர்வ தாத்ரே நமோ நம:
ஹரபோ ஸங்கடம் தேவ ஸகலம் ஸகலேச்வர

தேவேச விச்வ கர்த்தாஸ்த்வம் பரிபாஹி ஜகத்பதே
விச்வ பர்த்தா ஜயஸதா விச்வ ஹர்த்தா ஜப ப்ரபோ
ஸர்வேஷாம் ஜீவஜாலானா மேக ஜீவஸ்ய ரூபக
தேவதேவ ஜயத்வம்போ ஸர்வதா ஸர்வ நாயக

தர்ம சாஸ்தா ஜப பவான் ஜன்மதுக்க விநாசன

நம் துன்பங்களையெல்லாம் நீக்கி சகல வரங்களையும் வாரி வழங்கக்கூடிய அற்புத துதி இது.