Published:Updated:

வாசகர் இறையனுபவம் - ‘கண்டுகொண்டேன் கடவுளை...’

வாசகர் இறையனுபவம் - ‘கண்டுகொண்டேன் கடவுளை...’
பிரீமியம் ஸ்டோரி

னைவி, ஒரு மகள் எனச்  சிறிய குடும்பம் என்னுடையது. கூலி வேலை செய்துகொண்டு வாடகை வீட்டில் நிம்மதியாக வசித்து வந்தோம். அன்றாடம் எங்களால் முடிந்த பூஜைகள், வழிபாடுகள் செய்து இறைவனை வணங்கவும் நாங்கள் மறப்பதில்லை.

பக்தி இருக்கும் இடத்தில் ஆண்டவனின் கருணை நிறைந்திருக்கும்; அதை  உணர்த்த இறையின் திருவிளையாடல்களும் நடக்கும் என்பார்கள் பெரியோர்கள். எனக்கும் ஓர் அனுபவம் வாய்த்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் திடீரென எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அந்த நேரத்துக்கு முதலுதவி செய்து என்னைக்  காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அத்துடன், இதயத்தில் கோளாறு இருப்பதால் பக்குவமாக நடந்துகொள்ளவும், விலையுயர்ந்த மருந்துகளைப் பரிந்துரைத்து அவற்றை எடுத்துக்கொள்ளச் சொல் லியும் அறிவுறுத்தியிருந்தார்கள் மருத்துவர்கள்.

வாசகர் இறையனுபவம் - ‘கண்டுகொண்டேன் கடவுளை...’

என் வீடு இருக்கும் நிலையில் மாதம்தோறும் ஆயிரக்கணக்கில் மருந்துக்கு செலவு செய்ய இயலவில்லை. மருந்துகள் சாப்பிடுவதையே நிறுத்தவேண்டிய நிலை. என் மனைவி மிகவும் கவலைக்கு ஆளானார்.

ஒருநாள் நானும் என் மனைவியும் வழக்கம் போல் வழிபாட்டில் இருந்தோம். அப்போது என் மகள் சக்தி விகடன் புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். அதில் `திருப்பட்டூர் மகிமைகள்' பற்றி விரிவாக எழுதப் பட்டிருந்தது. திருப்பட்டூர் சென்று ஈசனை தரிசித்தால் தலைவிதி மாறி நன்மை விளையும் என்றிருந்தது.

விடிந்தால் பௌர்ணமி! அந்தக் கட்டுரை எங்களை உடனே திருப்பட்டூர் போகுமாறு உந்தித் தள்ளியது. யோசிக்காமல் கிளம்பினோம். அங்கு சென்று கண்குளிர, மனம் குளிர தரிசித்தோம் பிரம்மபுரீஸ்வரரையும், அவரிடம் அருள்பெற்ற பிரம்மனையும்.

வாசகர் இறையனுபவம் - ‘கண்டுகொண்டேன் கடவுளை...’

அருகிலேயே காசிவிஸ்வநாதர் ஆலயமும் உண்டு. அங்கு சென்று அம்பாளை தரிசிக்கும் நொடியில், அன்று அதுவரை தடைப்பட்டிருந்த மின்சாரம் திடுமென வந்ததும், ஒளி வெள்ளத்தில் அம்பிகை அமோக தரிசனம் அளித்தாள்.  எனக்கு மனமெல்லாம் பூரிப்பு. எங்கள் கவலை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. சிறிது நாள்களிலேயே கோவையில் இருந்த மருத்துவர் ஒருவரின் சிகிச்சையால் என் நெஞ்சு வலி குணமானது.

அதுமட்டுமா? ஒரு சித்திரா பௌர்ணமி நாளில் எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் விழாவில், என் மகளைப் பார்த்ததும் பிடித்துபோக, மாப்பிள்ளை வீட்டார் தேடி வந்தனர். அமோகமாக நடை பெற்றது திருமணம். ஆம்! திருப்பட்டூர் சென்று வந்த நாளிலிருந்து இனிய சம்பவங்களே தொடர் கின்றன எங்கள் வாழ்வில். ஈசனுக்கு நன்றி!

-கே.ஆர்.அண்ணாதுரை, திருப்பூர்-7