Published:Updated:

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?
பிரீமியம் ஸ்டோரி
எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

Published:Updated:
எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?
பிரீமியம் ஸ்டோரி
எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

திருவாரூர் மாவட்டம், எண்கண் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பல்வேறு சீர்கேடுகள் காரணமாக அவலநிலையில் இருக்கிறது. இதற்குக் காரணம், நிர்வாகக் குறைபாடுகள்தான் என்று எண்கண் கிராம மக்கள் நம்மிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்று கோயிலைப் பார்வையிட்டோம். இதோ ஒரு லைவ் ரிப்போர்ட்...

கோயில் வளாகத்துக்குள் நுழைந்தபோதே எங்கும் முட்புதர்கள் மண்டியிருப்பதைக் காணமுடிந்தது. அதில் ஒரு முள் நமது காலைப் பதம்பார்த்து விட்டது. காலைக் கழுவலாம் என்று கிணற்றை எட்டிப்பார்த்தோம்... அது சாக்கடையாக மாறியிருந்தது. சரி, தண்ணீர் இருக்குமா என்று திருமண மண்டபத்துக்குள் நுழைந்தோம். அது திறந்தவெளி டாஸ்மாக் ‘பார்’போலவே காட்சியளிக்கிறது. கொஞ்சம் நகர்ந்து சென்று உடைந்துகிடைந்த தேரில் தெரியாமல் கை வைத்துவிட்டோம். கையெங்கும் கரையான்கள் ஏறிவிட்டன. கழிப்பறை பக்கம் சென்றால்... ம்ஹூம், அதை எழுத முடியவில்லை. என்னதான் ஆயிற்று இந்தக் கோயில் நிர்வாகத்துக்கு?

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

இதுகுறித்து எண்கண் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் கேட்டோம். “முருகனுக்கு மூன்று வேளை அபிஷேகமும், ஆறு கால பூஜையும் நடைபெறுவது வழக்கம். ஆனால், இன்று ஒருவேளை அபிஷேகம்தான் நடக்கிறது. நினைத்தால் பூஜை போடுவார்கள், நினைத்தால் பூட்டு போடுவார்கள். கோயில் சிவாச்சாரியார்கள் அடிக்கடி சிங்கப்பூர் பறந்துவிடுகின்றனர். அது அவர்கள் சொந்த விஷயம். ஆனால், கோயிலைக் கவனிக்க வேண்டும் இல்லையா... ஆயிரம் ரூபாய் செலுத்தும் பக்தர்களுக்கு, அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, விபூதி பிரசாதம் அனுப்புவதாகச் சொல்கிறார்கள். ஆனால், பணம் மட்டும் வாங்கிக்கொண்டு, சொன்னபடி யாருக்கும் அனுப்புவதில்லை. பால் அபிஷேகத்துக்காக ஒன்பது கோயில் பசுமாடுகள் இருந்தன. இப்போது அதில் இரண்டு பசுமாடுகள்தான் உள்ளன. மீதம் ஏழு மாடுகளும் இறந்துவிட்டதாகக் கணக்குக் காட்டிவிட்டனர். பல ஆண்டுகளாகக் கோயில் தேரோட்டம், நடைபெறவில்லை. சசிகலாவின் அண்ணன் மகன் தங்கமணி, கோயில் தேரைச் செப்பனிட்டுத் தருவதாகச் சொல்லி, அதைப் பிரித்துப்போட்டார். அவை கரையான்களுக்கு இரையாகிச் சிதைந்துகிடக்கின்றன” என்றார் வேதனையுடன்.

அதே கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ், ‘‘திருமணம், காதணி விழா நிகழ்ச்சிகளைக் கோயிலில் நடத்த ரூபாய் ஐயாயிரம், மூவாயிரம் என வசூலிக்கிறார்கள். அதற்கு ரசீதும் தருவதில்லை. செயல் அலுவலர் குடியிருப்புக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வுபெற்ற கணக்குப்பிள்ளையே இப்போதும் வரவுசெலவு பார்க்கிறார். இது விதிமுறைகளை மீறிய செயல். ஊராட்சி சார்பில் கோயில் திருமண மண்டபத்துக்காகக் கட்டிக்கொடுக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, குளியலறை, கழிப்பறை ஆகியவை சிதிலமடைந்துள்ளன’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

தற்காலிகமாகப் பணிபுரியும் வைத்தியநாத குருக்களோ, ‘‘சிவாச்சாரியார்கள் சிங்கப்பூர் சென்றுள்ளதால், என்னை பூஜை செய்யச் சொல்லியுள்ளனர். இங்கு முருகனுக்கு விளக்கேற்றுவதற்கான எண்ணெய்யைக்கூடப் பக்தர்கள்தான் வாங்கித்தர வேண்டியுள்ளது. கோயில் நிர்வாகம் எதையும் கண்டுகொள்வதில்லை” என்றார்.

இந்தக் கோயில் அருகே உள்ள பெரியநாயகி உடனுறையும் பிரம்மபுரீஸ்வரர் கோயிலும் பாழடைந்து கிடக்கிறது. அதைச் சீரமைத்துக்கொடுத்த சுப்பிரமணியனிடம் பேசியபோது, ‘‘இரண்டு ஆண்டுகள் பாடுபட்டு, இக்கோயிலை மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டுவந்தேன். எல்லாவற்றையும் கோயில் நிர்வாகம் குட்டிச்சுவராக்கிவிட்டது’’ என்று வெடித்தார்.

கோயில் செயல் அலுவலரான ராஜராஜேஸ்வரனிடம் பேசினோம். “பூஜைக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு, கோயில் குருக்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். 80 ஏக்கர் நிலம் இருந்தும், கோயிலுக்கு வருமானம் இல்லாததால்,  பராமரிக்க முடியவில்லை. கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.600 தான் வாங்குகிறோம். அதற்கு ரசீது தந்துவிடுகிறோம். கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் இல்லாததும், வருமானம் குறைந்ததற்கு ஒரு காரணம். இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருப்பதால், விரைவில் குறைபாடுகளைச் சரிசெய்துவிடுவோம். கோயிலில் கணக்குப்பிள்ளை மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேறு வழியில்லாமல்தான், ஓய்வுபெற்ற கணக்குப்பிள்ளை பணியில் தொடர வேண்டியுள்ளது” என்றார்.

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

தஞ்சாவூர் உள்ள அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசுவிடம் இந்தப் பிரச்னைகளைக் கொண்டு சென்றோம். ‘‘நீங்கள் குறிப்பிடும் குறைகள் எனக்கே புகாராக வந்துள்ளன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

- மு.இராகவன், படங்கள்: பா.பிரசன்னா, ர.கண்ணன்

நாம் முன்வைத்த புகார்களைப் பதிவு செய்து, அவற்றைச் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரனுக்கு, இணை ஆணையர் தென்னரசு அனுப்பிவிட்டார். ஆனால், இதைத் தொடர்ந்து, கோயில் பற்றி நமக்குப் புகார் தெரிவித்த நபர்களைச் செயல் அலுவலர் தரப்பினர் மறைமுகமாக மிரட்டிவருவதாக மக்கள் புகார் தெரிவித் தனர். மீண்டும் இணை ஆணையரைத் தொடர்புகொண்டு, இதுகுறித்தும் தெரிவித்தோம். அவர், “புகார்கள் பற்றிய விவரம், செயல் அலுவலருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அதை அவருக்கு அனுப்பிவைத்தேன். கடுமையாக எச்சரிக்கிறேன். தவறு செய்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism