Published:Updated:

‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’

‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’
பிரீமியம் ஸ்டோரி
‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’
பிரீமியம் ஸ்டோரி
‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’

ந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களை தரிசிக்க ஆவல் கொண்டு மகாலிங்கம் என்ற அன்பர் மகாராஷ்டிரத்தில் உள்ள ‘திரியம்பகம்’ எனும் தலத்துக்குச் சென்றார். தாம் செய்து வந்த தொழிலுக்காக வாங்கிய கடன் தொல்லையும், வர வேண்டிய பாக்கியும் அவரை மனநிம்மதியில்லாமல் சஞ்சலப்பட வைத்தது. இந்நிலையில் திரியம்பகம் சென்று திரியம்பகேச்வரரை தரிசித்துவிட்டு வரும் போது அங்கே முகலிங்கம் ஒன்றை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்யத் தொடங் கினார். நாளாக ஆக ஏதோ ஒரு வகையில் அவருக்கு மன நிம்மதி கிடைத்து வந்தது.

ஒருநாள் இரவு அவரது கனவில் ஒரு பெரியவர் வந்தார். ‘`திருவாரூர் பக்கத்தில் ‘முக்கண்ணன் ஊர்’ என்று சிவபிரானை தரிசித்து விட்டு வா. உனது பிரச்னைகள் தீரும்” என்று தெரிவித்தாராம். அது முதல் தாம் சந்தித்த நண்பர்கள், கோயில் குருக்கள் என்று பலரிடமும் ‘முக்கண்ணன் ஊர்’ என்பது எது? என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’

இதனிடையே ஒருநாள் அவர் நண்பருடன் திருப்புகழ் பஜனை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு முதியவரிடம் இதைப்பற்றிக் கேட்டபோது அவர் சற்றும் யோசிக்காமல் ‘முக்கண்ணன் ஊர்’ என்றால் அது திரியம்பக புரம்தான். அம்பகம் என்றால் கண். திரியம்பகம் என்றால் முக்கண் என்று கூறி திரியம்பக தலக் குறிப்பை திருப்புகழ்ப் புத்தகத்தில் காட்டியுள்ளார்.

பின்னாளில் அந்த ஊரின் பெயர் மதுரமாணிக்கம் என்ற பெயரில் மாற்றம் பெற்று, திருவாரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், பெரும்பண்ணையூருக்கு வடக்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளதாக, தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை தாம் எழுதிய திருப்புகழ் விளக்கவுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தலத்தில் அருளும் முருகப்பெருமானை, ‘கனமுறும் த்ரியம்பகபுர மருவிய கவுரிதந்த (அ)றுமுக என இரு கழல் பணிந்து நின்றமரர்கள் தொழவல பெருமாளே’ என்று அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியிருக்கிறார்.

ஆனால், காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் ஆலயம் முழுவதும் சிதிலமடைந்து, திரியம்பகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட இறைவனின் சிவலிங்க மூர்த்தம் மட்டும் சதுர வடிவ ஆவுடையாருடன் முட்புதர் ஒன்றின் மேட்டின் மீது இருந்தது. மற்றபடி வேறு எந்த தெய்வ மூர்த்தங்களும் காணப்படவில்லை.

‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’

ஒருகாலத்தில் அளவற்ற சாந்நித்யத்துடன் விளங்கிய தனது திருக்கோயில் மறுபடியும் புதுப்பொலிவு பெறவேண்டும் என்ற ஐயனின் திருவுள்ளப்படி, எண்ணற்ற அன்பர்களின் பெரும் முயற்சியால் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு, ஐயன் திரியம்பகேஸ்வரருடன், அருள்மிகு சௌபாக்ய கௌரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், அருணகிரிநாதர் சந்நிதிகளுடன் மகா மண்டபமும் எழுப்பப் பெற்று, கடந்த 25.3.15-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான திரியம்பகம் சென்று வழிபட்ட பலனை அருளக்கூடியது திரியம்பகபுரம். மூன்று கண்களை உடையவர் என்ற பொருளில் சிவனாருக்கு இந்தத் திருப்பெயர் அமைந்தது. தமிழகத்தில் திரியம்பகபுரம் என்ற பெயரில் அமைந்திருக்கும் தலம் இது ஒன்றுதான்.

இந்த ஊரைக் கண்டுபிடித்து, முற்றிலும் சிதிலமடைந்திருந்த ஆலயத்தைப் புதிதாக எழுப்பி, கும்பாபிஷேகம் செய்தது அவசியம் பதிவு செய்யவேண்டிய விஷயம்.

மட்டுமின்றி, திருப்புகழ் பஜனையில் முதியவரின்  வழிகாட்டுதலின்படி, இத்தலத்துக்கு வந்து  திரியம்பகேஸ் வரரை மனமுருக வழிபட்ட, அன்பர் மகாலிங்கத்துக்கு, அதன் பிறகு நன்மைகளே விளைந்தன. ஆம்! கோயிலுக்குச் சென்று வந்த ஒரே வாரத்துக்குள் மகாலிங்கத்துக்கு வரவேண்டிய பழைய  பாக்கிகள் எல்லாம் கிடைக்கப் பெற்று, மிகுந்த மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அடைந்தார்.  அவர் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஐயன் திரியம்பகேஸ்வரரை வரும் மகா சிவராத்திரியன்று நாமும் தரிசித்து, ஐயனின் திருவருள் பெறலாமே!

த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!


படங்கள்: க.சதீஷ்குமார்